மத்தேயு 28

Matthew 28
அத்தியாயம் 28

இயேசுவின் உயிர்த்தெழுதல்

ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். மாற் 16:1-8யோவா 20:1-10லூக் 23:56மத் 27:56லூக் 24:22மத் 27:61 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். அப் 16:26யோவா 20:12-13லூக் 24:2-5மாற் 16:3-51 தீமோ 3:16யோவா 20:1மத் 27:51-531 பேது 1:12 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. அப் 1:10மாற் 9:3மாற் 16:5யோவா 20:12வெளி 18:1மத் 17:2வெளி 1:14-16வெளி 10:1 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள். வெளி 1:17தானி 10:7அப் 16:29மத் 27:65-66மத் 28:11அப் 9:3-7யோபு 4:14சங் 48:6 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். எபி 1:14ஏசா 41:10வெளி 1:17-18லூக் 1:30லூக் 24:5தானி 10:12தானி 10:19ஏசா 35:4 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்; மாற் 16:6மத் 12:40லூக் 24:6-8மத் 16:21லூக் 24:23யோவா 20:4-9மத் 27:63லூக் 24:44 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். மத் 26:32லூக் 24:22-24மத் 28:10யோவா 16:4மாற் 16:7-8ஏசா 45:21யோவா 20:17-18யோவா 21:1-14 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். சங் 2:11மாற் 16:8லூக் 24:36-41யோவா 16:20எஸ்றா 3:12-13யோவா 16:22யோவா 20:20-21 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். மத் 28:17மத் 14:33யோவா 20:14-17யோவா 20:28லூக் 24:52யோவா 12:3வெளி 5:11-14லூக் 1:28 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார். ரோம 8:29யோவா 20:17மத் 28:7மத் 14:27மத் 28:5மாற் 16:7யோவா 6:20லூக் 24:36-38

காவலர்களின் அறிக்கை

அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள். மத் 27:65-66மத் 28:4 இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: அப் 4:5-22அப் 5:40மத் 26:3-4மத் 27:1-2மத் 27:62-64அப் 5:33-34யோவா 11:47யோவா 12:10-11 நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள். மத் 26:64 இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். மத் 27:2அப் 12:19 அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது. 1 தீமோ 6:10மத் 27:8மத் 26:15

இயேசுவின் பிரதானக் கட்டளை

பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். மத் 26:32மத் 28:10மத் 28:7மாற் 16:14அப் 1:13-261 கொரி 15:15யோவா 6:70 அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். சங் 45:11யோவா 5:23மத் 16:28மத் 28:9சங் 2:121 கொரி 15:6 அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. யோவா 3:351 பேது 3:22மத் 11:27எபே 1:20-22எபி 2:81 கொரி 15:27தானி 7:13-14யோவா 17:2 ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, மாற் 16:15-16அப் 2:38-39அப் 1:8லூக் 24:47-48அப் 19:3-5ஏசா 49:6கலா 3:27அப் 10:47-48 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். ஏசா 41:10யோசு 1:5அப் 18:9-10யோவா 14:18-23சங் 46:71 யோவா 2:3-4ஆதி 39:2-3மத் 18:20