இயேசுவின் உயிர்த்தெழுதல்
ஓய்வுநாளுக்குப்பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்கு வாசனைத் திரவியங்களை வாங்கிக்கொண்டு. லூக் 23:56யோவா 20:1-10மத் 28:1-10மாற் 15:402 நாளாக 16:14யோவா 19:25மாற் 14:3மாற் 14:8 வாரத்தின் முதலாம்நாளின் அதிகாலையிலே சூரியன் உதிக்கிறபோது கல்லறைக்கு வந்து, யோவா 20:1லூக் 24:1மத் 28:1 கல்லறையின் வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். மாற் 15:46-47மத் 27:60-66 அந்தக் கல் மிகவும் பெரிதாக இருந்தது; அவர்கள் பார்த்தபோது, அந்தக் கல் தள்ளப்பட்டிருப்பத்தைப் பார்த்தார்கள். யோவா 20:1லூக் 24:2மத் 28:2-4 அவர்கள் கல்லறைக்குள் சென்று, வெள்ளை அங்கி அணிந்த ஒரு வாலிபன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்தார்கள். யோவா 20:11-12யோவா 20:8லூக் 24:3-5மத் 28:3லூக் 1:29-30லூக் 1:12மாற் 6:49-50மாற் 9:15 அவன் அவர்களைப் பார்த்து: பயப்படாமல் இருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிரோடு எழுந்தார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம். வெளி 1:17-181 கொரி 15:3-7லூக் 24:46யோவா 2:19-22மத் 28:4-7அப் 2:22-23அப் 4:10நீதி 8:17 நீங்கள் அவருடைய சீடர்களிடமும் பேதுருவிடமும்போய்: உங்களுக்கு முன்னே அவர் கலிலேயாவிற்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைப் பார்ப்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான். மாற் 14:28மத் 26:32மத் 28:10மத் 28:7மத் 28:16-17யோவா 21:11 கொரி 15:5அப் 13:31 அவர்கள் பயந்து நடுங்கி, சீக்கிரமாக வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமல் போனார்கள். லூக் 24:22-24லூக் 24:37லூக் 24:9-11மத் 28:8மாற் 16:5-62இராஜா 4:29லூக் 10:4 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு உயிரோடு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதலாக தரிசனமானார். யோவா 20:14-19லூக் 8:2யோவா 20:12மாற் 15:47லூக் 24:10மத் 27:56மாற் 15:401 கொரி 16:2 அவளிடமிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டுப்போய், இயேசுவுடன் இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு அந்தச் செய்தியைச் சொன்னாள். யோவா 20:18யோவா 16:6லூக் 24:17மத் 9:15மாற் 14:72யோவா 16:20-22மத் 24:30 அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவள் இயேசுவைப் பார்த்தாள் என்றும் அவள் சொன்னபோது, இவர்கள் நம்பவில்லை. லூக் 24:11மாற் 16:13-14லூக் 24:23-35மாற் 9:19யாத் 6:9யோபு 9:16 அதற்குப்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்திற்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு வேறு உருவத்தில் தரிசனமானார். லூக் 24:13-32யோவா 21:1யோவா 21:14மாற் 16:14 அவர்களும்போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. யோவா 20:25லூக் 24:33-35யோவா 20:8லூக் 16:31 அதற்குப்பின்பு பதினொருபேரும் சாப்பிடும்போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிரோடு எழுந்திருந்த அவரைப் பார்த்தவர்களை அவர்கள் நம்பாமல் போனதினால் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். 1 கொரி 15:5லூக் 24:36-43எபி 3:7-8யோவா 20:27மாற் 16:11-13மாற் 8:17-18சங் 95:8-11வெளி 3:19 பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள். மத் 28:19மாற் 13:10அப் 1:8லூக் 24:47-48சங் 96:3யோவா 15:161 யோவா 4:14யோவா 20:21 விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான். யோவா 11:25-26யோவா 3:36ரோம 10:9-14யோவா 3:18-19யோவா 3:15-16அப் 2:38யோவா 5:24யோவா 8:24 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளைப் பேசுவார்கள்; அப் 5:161 கொரி 12:28அப் 8:7லூக் 10:171 கொரி 12:10யோவா 14:12அப் 10:46அப் 19:6 சர்ப்பங்களை எடுப்பார்கள்; மரணத்திற்குரிய எதைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; நோயாளிகளின்மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள் என்றார். லூக் 10:19யாக் 5:14-15அப் 28:3-6அப் 19:12அப் 4:30அப் 28:8-9அப் 3:16மாற் 5:23
பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுதல்
இவ்விதமாக கர்த்தர் அவர்களோடு பேசினபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார். 1 பேது 3:22எபி 1:3எபி 12:2சங் 110:1ரோம 8:34அப் 2:33அப் 7:55-56கொலோ 3:1 சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்கள் மூலம் கிரியைசெய்து, அவர்களால் நடந்த அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென். 1 கொரி 2:4-5அப் 14:3அப் 8:4-6எபி 2:4ரோம 15:19அப் 5:121 கொரி 3:6-9அப் 2:1-28