லூக்கா 10

Luke 10
அத்தியாயம் 10

இயேசு எழுபதுபேரை அனுப்புதல்

இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறு எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் எல்லாப் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்குமுன்பாக இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். மாற் 6:7-13லூக் 9:52மத் 10:1-4லூக் 3:4-6எண் 11:24-26லூக் 9:1-2எண் 11:16அப் 13:2-4 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ குறைவு; ஆகவே, அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். மத் 9:36-38யோவா 4:35-381 கொரி 3:6-9மாற் 16:151 தெச 5:122 தெச 3:12 தீமோ 4:5அப் 22:21 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். மத் 10:16அப் 20:29எசேக் 2:3-6யோவா 15:20யோவா 10:12யோவா 16:2மத் 10:22மத் 7:15 பணப்பையையும் பயணப்பையையும் காலணிகளையும் கொண்டுபோக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வாழ்த்திப் பேசவும் வேண்டாம். 2இராஜா 4:29லூக் 22:35லூக் 10:4-121 சாமு 21:82இராஜா 4:24மாற் 6:8-11ஆதி 24:33ஆதி 24:56 ஒரு வீட்டில் பிரவேசிக்கும்போது: இந்த வீட்டிற்குச் சமாதானம் உண்டாவதாக என்று முதலாவது சொல்லுங்கள். 1 சாமு 25:6மத் 10:12-13ஏசா 57:19எபே 2:172 கொரி 5:18-20லூக் 19:9அப் 10:36 சமாதானத்திற்கு தகுதியானவன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். 2 கொரி 2:15-162 தெச 3:16ஏசா 9:61 சாமு 25:17எபே 2:2-3எபே 5:6யாக் 3:181 பேது 1:14 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைச் சாப்பிட்டுக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்கு தகுதியுடையவனாக இருக்கிறான். வீட்டிற்குவீடு போகாதீர்கள். 1 தீமோ 5:17-18மத் 10:10-111 கொரி 9:4-152 தீமோ 2:63 யோவா 1:5-8உபா 12:18-19கலா 6:6மாற் 6:10 பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் சாப்பிட்டு, 1 கொரி 10:27மத் 10:40லூக் 10:10லூக் 9:48யோவா 13:20 அந்த இடத்திலுள்ள நோயாளிகளைச் சுகமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். மத் 3:2யோவா 3:5அப் 28:7-10லூக் 10:11லூக் 17:20-21மத் 10:7-8அப் 28:31மாற் 6:13 எந்தவொரு பட்டணத்திலும் நீங்கள் பிரவேசிக்கும்போது, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: அப் 18:6அப் 13:51மத் 10:14லூக் 9:5 எங்களின் பாதத்தில் ஒட்டியுள்ள உங்களுடைய பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாகத் துடைத்துப்போடுகிறோம்; ஆனாலும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்கு அருகில் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள். அப் 13:51லூக் 10:9அப் 13:26அப் 13:40அப் 13:46உபா 30:11-14எபி 1:3மத் 10:14 அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட அந்த நாளிலே சோதோம் பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 10:15மத் 11:24மாற் 6:11புலம் 4:6எசேக் 16:48-50 கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுதே சணல் ஆடைகளை அணிந்து, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். ஏசா 23:1-18எசேக் 26:1யோவே 3:4-8மத் 11:20-23அப் 28:25-281 தீமோ 4:2எசேக் 3:6-7ஏசா 61:3 நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும். யோவா 15:22-25லூக் 12:47-48ரோம 2:1ரோம 2:27ஆமோ 3:2யோவா 3:19 வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, ஏசா 14:13-152 பேது 2:4மத் 4:13லூக் 13:28மத் 11:23ஆமோ 9:2-3உபா 1:28எசேக் 26:20 சீடர்களை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார். யோவா 13:201 தெச 4:8மத் 10:40யோவா 12:44யோவா 12:48யோவா 5:22-23மாற் 9:37மல்கி 1:6 பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடு திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். லூக் 9:1மாற் 16:17ரோம 16:20லூக் 10:1லூக் 10:9 அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். வெளி 12:7-9ஏசா 14:12யோவா 12:31யோவா 16:11வெளி 9:11 யோவா 3:8எபி 2:14மத் 4:10 இதோ, பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது. சங் 91:13மாற் 16:18ரோம 16:20அப் 28:5வெளி 11:5லூக் 21:17-18எசேக் 2:6ரோம 8:31-39 ஆனாலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்களுடைய பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். வெளி 20:15மத் 7:22-23வெளி 20:12எபி 12:23வெளி 21:27வெளி 3:5தானி 12:1யாத் 32:32 அந்தநேரத்தில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது. 2 கொரி 4:3மத் 11:25-27மத் 13:11-161 கொரி 2:6-81 பேது 2:1-2எபே 1:51 கொரி 1:9-29கொலோ 2:2-3 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். மத் 11:27யோவா 1:18யோவா 6:44-46யோவா 10:152 கொரி 4:6யோவா 17:262 யோவா 1:9மத் 28:18 பின்பு தமது சீடரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணும் கண்கள் பாக்கியமுள்ளவைகள். மத் 13:16-17 அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவா 8:561 பேது 1:10-12எபி 11:13எபி 11:39

நல்ல சமாரியன்

அப்பொழுது நியாயப்பண்டிதன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். மத் 22:34-39லூக் 18:18அப் 16:30-31மத் 19:16-19கலா 3:18லூக் 11:45-46லூக் 7:30 அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். ஏசா 8:20ரோம 10:5கலா 3:21-22ரோம 3:19கலா 3:12-13ரோம 4:14-16 அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். மாற் 12:30-31மத் 22:37-40உபா 6:5ரோம 13:9லேவி 19:18உபா 30:6யாக் 2:8உபா 10:12 அவர் அவனை நோக்கி: சரியாக பதில் சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். எசேக் 20:11லேவி 18:5மத் 19:17நெகே 9:29எசேக் 20:13எசேக் 20:21கலா 3:12லூக் 7:43 அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான். லூக் 16:15லூக் 18:9-11லேவி 19:34மத் 5:43-44கலா 3:11ரோம 10:3லூக் 10:36ரோம 4:2

இயேசு மறுமொழியாக: ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் போகும்போது கள்ளர்களுடைய கைகளில் அகப்பட்டான்; அவர்கள் அவனுடைய ஆடைகளை உரிந்துவிட்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள். எரே 51:52லூக் 18:31எசேக் 30:24சங் 88:4புலம் 2:12லூக் 19:28 அப்பொழுது தற்செயலாக ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான். 1 யோவா 3:16-18சங் 69:20ஓசி 6:9எரே 5:31நீதி 21:13பிரச 9:11ஓசி 5:1மல்கி 1:10 அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்திற்கு வந்து, அவனைப் பார்த்து, ஓரமாக விலகிப்போனான். அப் 18:17நீதி 27:102 தீமோ 3:2சங் 109:25 பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி, 1 இராஜா 8:50லூக் 7:13எரே 38:7-13மத் 18:33நீதி 27:10யோவா 4:9மத் 10:5யாத் 2:6 அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். ரோம 12:20சங் 147:31 தெச 5:15யாத் 23:4-5யாத் 4:24ஆதி 42:27ஏசா 1:5-6லூக் 2:7 மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு வெள்ளிக்காசுகளை எடுத்து, சத்திரத்தானுடைய கையில் கொடுத்து: நீ இவனை கவனித்துக்கொள், அதிகமாக ஏதாவது இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். நீதி 19:17லூக் 14:13ரோம 16:23மத் 20:2 இப்படியிருக்க, கள்ளர்கள் கைகளில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அயலாகத்தானாக இருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். லூக் 7:42மத் 21:28-31மத் 17:25மத் 22:42 அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்போய் அந்தப்படியே செய் என்றார். 1 யோவா 3:16-18மீகா 6:81 பேது 2:212 கொரி 8:91 யோவா 4:10-11லூக் 6:32-36யோவா 13:15-17எபே 5:2

மார்த்தாளும் மரியாளும்

பின்பு, அவர்கள் பயணம்செய்யும்போது, அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தார். அங்கே மார்த்தாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். யோவா 11:19-20யோவா 11:1-5யோவா 12:1-3லூக் 8:2-3அப் 16:152 யோவா 1:10 அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். நீதி 8:34லூக் 8:35யோவா 12:3அப் 22:3உபா 33:3லூக் 2:461 கொரி 7:32-40யோவா 11:1 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக்குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். யோவா 6:27லூக் 12:29மத் 16:22யோனா 4:1-4மத் 14:15லூக் 9:55மாற் 3:21 இயேசு அவளுக்கு மறுமொழியாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். பிலி 4:6மாற் 4:19லூக் 21:34மத் 6:25-34லூக் 8:14லூக் 12:221 கொரி 7:32-35பிரச 6:11 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். சங் 27:4சங் 16:5-6யோவா 10:27-28யோவா 4:14சங் 73:25யோவா 5:24லூக் 18:22யோவா 17:3