ஜெபத்தைக்குறித்து இயேசுவின் போதனை
அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீடருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீங்களும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். சங் 19:14ரோம 8:26-27யூதா 1:20லூக் 22:39-45லூக் 6:12லூக் 9:18யாக் 4:2-3லூக் 9:28 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: மத் 6:6-15பிரச 5:2சங் 72:18-19வெளி 15:41 தெச 3:11-132 நாளாக 20:6சங் 11:4வெளி 20:4
பரமண்டலங்களிலிருக்கிற எங்களுடைய பிதாவே,
உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
உம்முடைய ராஜ்யம் வருவதாக;
உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;
எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்; மத் 6:11மத் 6:34நீதி 30:8யாத் 16:15-22ஏசா 33:16யோவா 6:27-33
எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும்; மத் 6:12-15மத் 26:412 தெச 3:3கொலோ 3:13ஏசா 43:25-26மத் 18:352 தீமோ 4:18யாக் 2:13
நாங்களும் எங்களிடம் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள்” என்றார்.
பின்பு அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறவனிடம் நடுராத்திரியிலேபோய்: நண்பனே, லூக் 18:1-8 என் நண்பன் ஒருவன் பயணத்தில் என் வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனுக்கு சாப்பிடக்கொடுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டிற்குள் இருக்கிறவன் மறுமொழியாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவை பூட்டிவிட்டோம், என் பிள்ளைகள் என்னோடு தூங்கிக்கொண்டிருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்கு அப்பம் தரமுடியாத நிலையில் இருக்கிறேன் என்று சொன்னான். கலா 6:17லூக் 13:25லூக் 7:6மத் 25:10 பின்பு, தனக்கு அவன் நண்பனாக இருப்பதினால் எழுந்து அவனுக்கு அப்பம் கொடுக்கவில்லை என்றாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினாலே எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதி 32:26கொலோ 4:12லூக் 18:1-8ரோம 15:30மத் 15:22-282 கொரி 12:8கொலோ 2:1 மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். மாற் 11:24யோவா 16:23-24மத் 21:22யோவா 15:16யோவா 15:71 யோவா 5:14-15யோவா 14:131 யோவா 3:22 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். யாக் 4:3புலம் 3:18புலம் 3:54-58யாக் 5:11யோனா 2:2-8லூக் 18:1சங் 31:22புலம் 3:8 உங்களில் தகப்பனாக இருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பானா? மத் 7:9ஏசா 49:15 அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? எசேக் 2:6லூக் 10:19வெளி 9:10 பொல்லாதவர்களாகிய நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். மத் 7:11ஏசா 44:3-4ரோம 8:32யோவா 4:10நீதி 1:23அப் 2:38யோவா 7:37-39யோவே 2:28
இயேசுவும் பெயெல்செபூலும்
பின்பு இயேசு ஊமையாக இருந்தவனிடத்திலிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். மத் 12:22-24மத் 9:32-34மாற் 7:32-37 அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். மத் 9:34யோவா 10:20யோவா 7:20யோவா 8:48யோவா 8:52லூக் 11:18-19மத் 10:25மத் 12:24-30 வேறுசிலர் இயேசுவை சோதிப்பதற்காக வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். 1 கொரி 1:22யோவா 6:30மத் 12:38-39மத் 16:1-4மாற் 8:11-12 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் அழிந்துபோகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தக் குடும்பமும் நிலைத்திருக்காது. மாற் 3:23-27மத் 12:25-29ஏசா 19:2-3ஏசா 9:20-21யோவா 2:252 நாளாக 10:16-192 நாளாக 13:16-17மத் 9:4 சாத்தானும் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்கும்போது, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே. மத் 12:26மத் 12:31-34யாக் 3:5-8லூக் 11:15மத் 4:10 நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள். லூக் 9:49யோபு 15:6லூக் 11:31-32லூக் 19:22மத் 12:27-28மத் 12:41-42ரோம 3:19 நான் தேவனுடைய வல்லமையினால் பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே. யாத் 8:19மத் 12:28லூக் 10:9மத் 3:22 தெச 1:5லூக் 10:11அப் 20:25தானி 2:44 ஆயுதம் அணிந்த பலசாலி தன் அரண்மனையை காவல்காக்கும்போது, அவனுடைய பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும். மாற் 3:27மத் 12:29 அவனைவிட பலசாலி வந்து, அவனைத் தோற்கடித்து, அவன் நம்பியிருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய பொருட்களை கொள்ளையிடுவான். ஏசா 49:24-25ஏசா 53:121 யோவா 3:81 யோவா 4:4கொலோ 2:15ஆதி 3:15ஏசா 27:1ஏசா 63:1-4 என்னோடு இல்லாதவன் எனக்கு பகைவனாக இருக்கிறான், மக்களை என்னிடம் சேர்க்காதவன், அவர்களை சிதறடிக்கிறான். மத் 12:30லூக் 9:50மாற் 9:40வெளி 3:15-16 அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் போகும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாற இடம் தேடியும் கிடைக்காமல்: நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, மத் 12:43-451 பேது 5:8யோபு 2:2சங் 63:1யோபு 1:7மாற் 5:10எபே 2:2ஏசா 44:3 திரும்பிவரும்போது, அது சுத்தப்படுத்தி ஜோடிக்கப்பட்டிருக்கிறதைக் கண்டு, 2 பேது 2:10-192 தெச 2:9-12யூதா 1:8-13மத் 12:44-45சங் 36:3சங் 81:11-122 நாளாக 24:17-22சங் 125:5 திரும்பிப்போய், தன்னைவிட பொல்லாத மற்ற ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உள்ளே புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனிதனுடைய முன் நிலைமையை விட அவனுடைய பின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்றார். 2 பேது 2:20-22யோவா 5:14மத் 12:45செப்ப 1:61 யோவா 5:16எபி 10:26-31எபி 6:4-8யூதா 1:12-13 இயேசு இவைகளைச் சொல்லும்பொழுது, மக்கள் கூட்டத்திலிருந்த ஒரு பெண் அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகள் என்று சத்தமிட்டுச் சொன்னாள். லூக் 1:42லூக் 1:48லூக் 23:29லூக் 1:28 அதற்கு அவர்: அதைவிட, தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் கடைபிடிப்பவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். லூக் 6:47-48லூக் 8:21சங் 112:1யாக் 1:21-25யோவா 13:17ஏசா 48:17-18சங் 1:1-31 யோவா 3:21-24
யோனாவின் அடையாளம்
மக்கள் கூட்டமாக கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்த வம்சத்தார் பொல்லாதவர்களாக இருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்தவிர வேறு எந்த அடையாளமும் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. லூக் 11:16மாற் 8:11-121 கொரி 1:22மத் 12:38-42லூக் 12:1மத் 3:7மாற் 8:38அப் 7:51-52 யோனா நினிவே பட்டணத்தார்களுக்கு அடையாளமாக இருந்ததுபோல, மனிதகுமாரனும் இந்த வம்சத்திற்கு அடையாளமாக இருப்பார். மத் 12:40-42யோனா 3:2-10யோனா 1:17லூக் 24:46-47யோனா 2:10 தெற்கு தேசத்து ராணி சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லையிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்த வம்சத்தாரோடு எழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 2 நாளாக 9:11 இராஜா 10:1-13எரே 3:11லூக் 3:22ரோம 2:27லூக் 9:35மத் 12:42எபி 11:7 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனம் மாறினார்கள்; இதோ, யோனாவைவிட பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளில் நினிவே பட்டணத்தார் இந்த வம்சத்தாரோடு எழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். யோனா 3:5எபி 7:26யோனா 1:2-3யோனா 4:9லூக் 11:31
சரீரத்தின் விளக்கு
ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவாகவோ, பாத்திரத்தின் கீழேயோ வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம்காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். லூக் 8:16-17மாற் 4:21-22மத் 5:15-16யோவா 12:46பிலி 2:15-16யோவா 11:9மத் 10:27 கண்ணானது சரீரத்திற்கு விளக்காக இருக்கிறது; உன் கண் தெளிவாக இருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும்; உன் கண் கெட்டதாக இருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாக இருக்கும். மத் 6:22-23அப் 26:182 கொரி 4:4எரே 5:21சங் 119:18ரோம 11:8-10கொலோ 3:222 கொரி 11:3 எனவே உனக்குள் உள்ள வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாக இரு. நீதி 16:252 பேது 1:9யாக் 3:13-171 கொரி 1:19-211 கொரி 3:18-20ஏசா 5:20-21வெளி 3:17ரோம 1:22 உன் சரீரத்தின் எந்தவொரு பகுதியும் இருளடையாமல், சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும் என்றார். நீதி 20:27நீதி 4:18-19நீதி 6:232 கொரி 4:62 பேது 3:182 தீமோ 3:15-17நீதி 1:5கொலோ 3:16
பரிசேயர்கள் மற்றும் வேதபண்டிதர்களுக்கு எச்சரிக்கை
இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பரிசேயன் ஒருவன், அவர் தன்னோடு உணவு உண்ணவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய் அவனோடுகூட பந்தி உட்கார்ந்தார். லூக் 7:361 கொரி 9:19-23லூக் 14:1 அவர் உணவு உண்பதற்கு முன்பு கைகழுவாமல் இருந்ததைப் பரிசேயன் பார்த்து, ஆச்சரியப்பட்டான். மத் 15:2-3யோவா 3:25மாற் 7:2-5 கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயர்களாகிய நீங்கள் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்களுடைய உள்ளங்களோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. தீத் 1:15ஆதி 6:5லூக் 16:15மத் 7:15நீதி 30:12அப் 5:3அப் 8:21-23யாக் 4:8 மதிகெட்டவர்களே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உள்புறத்தையும் உண்டாக்கவில்லையா? லூக் 12:201 கொரி 15:36மத் 23:17மத் 23:26நீதி 1:22நீதி 8:5சங் 94:8-9ஆதி 1:26 உங்களிடம் இருப்பதை ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குள் எல்லாம் சுத்தமாக இருக்கும். லூக் 12:33யாக் 1:27தீத் 1:15அப் 10:15எபி 13:16லூக் 16:92 கொரி 8:7-9தானி 4:27 பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, மறிக்கொழுந்து ஆகிய எல்லாவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாமல் இருக்கவேண்டும். மத் 23:23லூக் 18:12நீதி 21:31 யோவா 4:20உபா 10:12-13மல்கி 3:8மீகா 6:81 சாமு 15:22 பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும், சந்தைகளில் வணக்கங்களையும் விரும்புகிறீர்கள். லூக் 20:46மாற் 12:38-39லூக் 14:7-11மத் 23:6-73 யோவா 1:9யாக் 2:2-4பிலி 2:3நீதி 16:18 வேதபண்டிதர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற சவக்குழிகளைப்போல இருக்கிறீர்கள், அதின்மேல் நடக்கிற மனிதர்களுக்கு அவைகள் தெரியாதிருக்கிறது. மத் 23:27-28அப் 23:3சங் 5:9எண் 19:16ஓசி 9:8 அப்பொழுது நியாயப்பண்டிதர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் அவமதிக்கிறீர் என்றான். யோவா 9:40மத் 22:351 இராஜா 22:8ஆமோ 7:10-13எரே 20:8எரே 6:10யோவா 7:48யோவா 7:7 அதற்கு இயேசு: நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, சுமக்க இயலாத சுமைகளை மனிதர்கள்மேல் சுமத்துகிறீர்கள்; ஆனால், நீங்களோ உங்களுடைய விரல்களினால்கூட அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள். மத் 23:2-4ஏசா 10:1லூக் 11:52கலா 6:13லூக் 11:45ஏசா 58:6 உங்களுக்கு ஐயோ, உங்களுடைய முற்பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 1 தெச 2:15அப் 7:51மத் 23:29-33 ஆகவே, உங்களுடைய முற்பிதாக்களுடைய செயல்களுக்கு நீங்களும் உடன்பட்டவர்கள் என்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்களுடைய முற்பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 2 நாளாக 36:16யாக் 5:10அப் 7:51-52மத் 21:35-38மத் 23:31எபி 11:35-38எசேக் 18:19யோசு 24:22 ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்; 1 கொரி 1:30கொலோ 2:3எபே 4:111 கொரி 1:24அப் 22:20அப் 7:57அப் 8:3அப் 9:1-2 ஆபேலின் இரத்தத்திலிருந்து பலிபீடத்திற்கும் தேவ ஆலயத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றத்திலிருந்து சிந்தப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்த வம்சத்தாரிடம் கேட்கப்படுவதற்காக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. ஆதி 9:5-62இராஜா 24:4வெளி 18:20-24எண் 35:33ஏசா 26:21எரே 51:56எரே 7:29சங் 9:12 நிச்சயமாகவே இந்த வம்சத்தாரிடம் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 2 நாளாக 24:20-22எபி 11:4மத் 23:351 யோவா 3:12ஆதி 4:8-11சகரி 1:1எபி 12:24எரே 7:28 நியாயப்பண்டிதர்களே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உள்ளே செல்வதில்லை, உள்ளே செல்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார். மத் 23:13மல்கி 2:7அப் 4:17-18லூக் 11:45-46யோவா 9:24-34யோவா 7:47-52அப் 5:40லூக் 19:39-40 இவைகளை இயேசு அவர்களுக்குச் சொல்லும்போது, வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டுவதற்காக, அவர் வார்த்தைகளில் ஏதாவது பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று முயற்சிசெய்து அவரை மிகவும் நெருக்கவும், 1 கொரி 13:5ஏசா 9:12எரே 18:18எரே 20:10லூக் 20:20லூக் 20:27சங் 22:12-13 அநேக விஷயங்களைக்குறித்துப் பேச அவரைத் தூண்டவும் தொடங்கினார்கள். மாற் 12:13மத் 22:15மத் 22:35லூக் 20:20மத் 22:18சங் 37:32-33சங் 56:5-6மாற் 3:2