லூக்கா 14

Luke 14
அத்தியாயம் 14

பரிசேயன் வீட்டில் இயேசு

ஒரு ஓய்வுநாளிலே பரிசேயர்களில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் உணவு உட்கொள்ளும்படிக்குச் சென்றிருந்தார். மாற் 3:2லூக் 20:20லூக் 6:7நீதி 23:7சங் 41:6சங் 62:4சங் 64:5-61 கொரி 9:19-22 அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனிதன் அவருக்கு முன்பாக இருந்தான். அவனுக்கு என்ன செய்வாரோவென்று மக்கள் அவர்மேல் நோக்கமாக இருந்தார்கள். இயேசு நியாயப்பண்டிதர்களையும் பரிசேயர்களையும் பார்த்து: ஓய்வுநாளிலே சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். லூக் 6:9மத் 12:10யோவா 7:23லூக் 13:14-16மாற் 3:4லூக் 11:44-45மத் 12:2மத் 22:35 அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சுகமாக்கி, அனுப்பிவிட்டு, மத் 21:25-27மத் 22:46 அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார். லூக் 13:15யாத் 23:4-5மத் 12:11-12தானி 4:24 அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போனது. லூக் 20:40அப் 6:10லூக் 13:17லூக் 20:26லூக் 21:15மத் 22:46 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: பிலி 2:3லூக் 11:43மத் 23:6லூக் 20:46மாற் 12:38-393 யோவா 1:9அப் 8:18-19எசேக் 17:2 ஒருவனால் திருமணவிருந்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னைவிட மதிப்புக்குரியவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். நீதி 25:6-7 அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். நீதி 16:18நீதி 11:2நீதி 3:35தானி 4:30-34எஸ்த 6:6-12எசேக் 28:2-10 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, கடைசி இடத்தில்போய் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: நண்பனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குப் பெருமையுண்டாகும். நீதி 25:6-7நீதி 15:33ஏசா 60:141 சாமு 15:17வெளி 3:9 தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக் 18:14மத் 23:12நீதி 29:23யாக் 4:61 பேது 5:5சங் 138:6நீதி 18:12யாக் 4:10 அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் நண்பர்களையாவது உன் சகோதரர்களையாவது, உன் உறவினர்களையாவது, செல்வமுள்ள அண்டை வீட்டாரையாவது அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப்பதில் செய்ததாகும். யாக் 2:1-6மத் 5:46லூக் 6:32-36நீதி 22:16நீதி 14:20மத் 6:1-4லூக் 1:53சகரி 7:5-7 நீ விருந்து பண்ணும்போது ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் அழைப்பாயாக. லூக் 14:21ஏசா 58:10ஏசா 58:7நீதி 14:31யோபு 29:15-16எபி 13:2யோபு 31:16-20நெகே 8:10 அப்பொழுது நீ பாக்கியவானாக இருப்பாய்; அவர்களால் உனக்குத் திரும்பச் செய்யமுடியாது; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு திரும்பச்செய்யப்படும் என்றார். நீதி 19:17அப் 24:15யோவா 5:29மத் 25:34-40மத் 6:4தானி 12:2-3லூக் 20:35-36மத் 10:41-42

விருந்துசாலைபற்றிய உவமை

அவரோடுகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் உணவு உட்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றான். வெளி 19:9லூக் 13:29லூக் 22:30மத் 25:10யோவா 6:27-59லூக் 12:37மத் 8:11 அதற்கு அவர்: ஒரு மனிதன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். மத் 22:2-14வெளி 22:17ஏசா 55:1-7ஏசா 25:6-7லூக் 14:16-24வெளி 3:20நீதி 9:1-2உன்னத 5:1 விருந்து நேரத்தில் தன் வேலைக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில்போய், எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது வாருங்கள் என்று சொல்லென்று அவனை அனுப்பினான். நீதி 9:1-5யோவா 7:37லூக் 3:4-6மத் 10:1-4மத் 22:3-42 கொரி 5:18அப் 13:26அப் 2:38-39 அவர்களெல்லோரும் சாக்குப்போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலை வாங்கியிருக்கிறேன், நான் கட்டாயமாகப்போய் அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 1 தீமோ 6:9-10லூக் 17:26-31லூக் 18:241 யோவா 2:15-162 தீமோ 4:4அப் 18:5-6ஏசா 28:12-13ஏசா 29:11-12 வேறொருவன்: ஐந்து ஏர்மாடுகள் வாங்கியிருக்கிறேன், அதை ஓட்டிப்பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: எனக்கு இப்போதுதான் திருமணம் முடிந்திருக்கிறது, அதினால் நான் வரக்கூடாது என்றான். உபா 24:51 கொரி 7:331 கொரி 7:29-31லூக் 14:26-28லூக் 18:29-30 அந்த வேலைக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் வேலைக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாகப்போய், ஏழைகளையும் நடக்கமுடியாதவர்களையும், முடவர்களையும், பார்வையற்றவர்களையும் இங்கே அழைத்துக்கொண்டுவா என்றான். லூக் 14:13மத் 11:5யாக் 2:5யோவா 9:39லூக் 14:24மத் 22:7-81 சாமு 2:8எபி 2:3 வேலைக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். யோவா 14:21 தீமோ 2:5-6கொலோ 2:9எபே 3:8சங் 130:7வெளி 7:4-91 யோவா 2:2அப் 1:1-9 அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா; மத் 22:9-10கொலோ 1:282 கொரி 5:11அப் 13:47-482 கொரி 5:202 தீமோ 4:2அப் 18:6அப் 28:28 அழைக்கப்பட்டிருந்த அந்த மனிதர்களில் ஒருவன்கூட என் விருந்தை ருசிபார்ப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார். மத் 21:43அப் 13:46மத் 22:8யோவா 3:36யோவா 8:24எபி 12:25-26யோவா 3:19மத் 23:38-39

சீடர்களாக இருப்பது

பின்பு அநேக மக்கள் அவரோடுகூடப் பயணமாகப் போகும்போது, அவர்களிடமாக அவர் திரும்பிப்பார்த்து: யோவா 6:24-27லூக் 12:1 யாராவது ஒருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான். மத் 10:37யோவா 12:25பிலி 3:8அப் 20:24சங் 73:25-26வெளி 12:11உபா 13:6-8உபா 33:9 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என் பின்னே வராதவன் எனக்குச் சீடனாக இருக்கமுடியாது. மத் 10:38லூக் 9:23-25மத் 16:24-26மாற் 10:21மாற் 8:34-372 தீமோ 3:12அப் 14:22மத் 13:21 உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்டவிருப்பமாக இருந்து, நீதி 24:27மத் 10:22யோசு 24:19-24லூக் 14:33அப் 21:13மத் 20:22-23மத் 8:201 தெச 3:4-5 அஸ்திபாரம் போட்டப்பின்பு வேலையை முடிக்கமுடியாமற்போனால், பார்க்கிறவர்களெல்லோரும்: இந்த மனிதன் கட்டத்தொடங்கி, முடிக்க முடியாமற்போனான் என்று சொல்லி தன்னை ஏளனமாக பேசாதபடிக்கு, அதைக் கட்டிமுடிப்பதற்கு தனக்கு வேண்டிய பொருளாதாரம் உண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செலவாகும் தொகையைக் கணக்குப்பார்க்காமல் இருப்பானோ? எபி 6:112 யோவா 1:82 பேது 2:19-22எபி 6:4-81 கொரி 3:11-14அப் 1:18-19எபி 10:38மத் 27:3-8 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடு போர்செய்யப்போகிறபோது, தன்மேல் இருபதாயிரம் போர்வீரர்களோடு வருகிற அவனைத் தான் பத்தாயிரம் போர்வீரர்களைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்னமே உட்கார்ந்து ஆலோசனை செய்யாமலிருப்பானோ? நீதி 20:18நீதி 25:81 இராஜா 20:112இராஜா 18:20-22 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, தூதுவரை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. அப் 12:201 இராஜா 20:31-342இராஜா 10:4-5யாக் 4:6-10யோபு 40:9லூக் 12:58மத் 5:25 அப்படியே உங்களில் எவனாவது தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீடனாக இருக்கமாட்டான். பிலி 3:7-81 யோவா 2:15-16லூக் 5:28லூக் 14:26லூக் 18:28-30லூக் 18:22-23லூக் 5:11அப் 5:1-5 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? மத் 5:13கொலோ 4:6மாற் 9:49-50எபி 2:4-8 அது நிலத்துக்காவது எருவுக்காவது உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார். மத் 11:15வெளி 2:11வெளி 2:7லூக் 9:44மத் 13:9வெளி 2:29யோவா 15:6லூக் 8:8