மத்தேயு 12

Matthew 12
அத்தியாயம் 12

ஓய்வுநாளின் தேவன்

அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் வயல்வழியே போனார்; அவருடைய சீடர்கள் பசியாக இருந்து, கதிர்களைப் பறித்து, சாப்பிடத் தொடங்கினார்கள். உபா 23:25லூக் 6:1-5மாற் 2:23-28 பரிசேயர்கள் அதைக் கண்டு, அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை உம்முடைய சீடர்கள் செய்கிறார்களே என்றார்கள். மத் 12:10யோவா 7:21-24யாத் 20:9-11யாத் 31:15-17லூக் 13:10-17லூக் 14:3மாற் 3:2-5யாத் 23:12 அதற்கு அவர்: தாவீதும் அவனோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? 1 சாமு 21:3-6லூக் 6:3மாற் 2:25-26மத் 21:16மாற் 12:10மத் 12:5மத் 22:31மாற் 12:26 அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் புசிக்கக்கூடாத தேவ சமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடு இருந்தவர்களும் புசித்தார்களே. லேவி 24:5-9யாத் 25:30லேவி 8:31யாத் 29:32-33 அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? எண் 28:9-10யோவா 7:22-23நெகே 13:17எசேக் 24:21 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 12:41-421 பேது 2:4-52 நாளாக 6:18எபே 2:20-22ஆகா 2:7-9யோவா 2:19-21மல்கி 3:1கொலோ 2:9 பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். ஓசி 6:6மத் 9:13மீகா 6:6-8ஏசா 1:11-17நீதி 17:15அப் 13:27மத் 22:29யாக் 5:6 மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார். லூக் 6:5மாற் 2:28யோவா 5:17-23மாற் 9:4-7மத் 9:6மத் 8:20வெளி 1:101 கொரி 16:2 அவர் அந்த இடத்தைவிட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்திற்கு வந்தார். லூக் 6:6-11மாற் 3:1-6 அங்கே சூம்பின கையையுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சுகமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள். லூக் 13:14யோவா 9:16யோவா 8:6யோவா 5:10லூக் 11:54மத் 22:17-18ஏசா 32:6லூக் 14:3-6 அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? உபா 22:4லூக் 14:5லூக் 13:15-17யாத் 23:4-5 ஆட்டைவிட மனிதனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மை செய்வது நியாயம்தான் என்று சொன்னார். மத் 6:26லூக் 6:9மத் 10:31மாற் 3:4லூக் 12:24 பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது. லூக் 13:13அப் 3:7-8 அப்பொழுது, பரிசேயர்கள் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை செய்தார்கள். யோவா 11:53யோவா 10:39யோவா 5:18லூக் 6:11மாற் 3:6மத் 26:4யோவா 11:57மத் 27:1

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியன்

இயேசு அதை அறிந்து, அந்த இடத்தைவிட்டு விலகிப்போனார். திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அவர்களெல்லோரையும் அவர் சுகமாக்கி, மாற் 3:7-12மத் 10:23யோவா 11:54யோவா 7:1மத் 19:2யோவா 10:40-42மத் 4:23-25மாற் 6:56 தம்மைப் பிரசித்தப்படுத்தாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாகக் கட்டளையிட்டார். மத் 8:4மத் 9:30மத் 17:9லூக் 5:14-15மாற் 7:36 ஏசாயா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் சொன்னதாவது: ஏசா 42:1-4ஏசா 42:9ஏசா 41:22-23ஏசா 44:26யோவா 12:38மத் 13:35மத் 21:4அப் 13:27

“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், ஏசா 42:1லூக் 4:18அப் 10:38யோவா 3:34ஏசா 61:1-31 பேது 2:42 பேது 1:17அப் 11:18

என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்;

என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன்,

அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார்.

வாக்குவாதம் செய்யவும் மாட்டார், மத் 11:292 தீமோ 2:24-25யோவா 18:36-382 கொரி 10:1லூக் 17:20சகரி 9:9

சத்தமிடவும் மாட்டார்;

அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.

அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், ஏசா 42:3-4எசேக் 34:16ஏசா 61:1-3லூக் 4:18சங் 147:3புலம் 3:31-342 கொரி 2:7எபி 12:12-13

மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.

அவருடைய நாமத்தின்மேல் உலகிலுள்ளோர் நம்பிக்கையாக இருப்பார்கள்” என்பதே. ஏசா 11:10ரோம 15:12-13ஏசா 42:4கொலோ 1:27எபே 1:12-13

இயேசுவும் பெயெல்செபூலும்

அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார். லூக் 11:14-15ஏசா 29:18மாற் 7:35-37அப் 26:18ஏசா 35:5-6மாற் 3:11மத் 4:24மத் 9:32-34 மக்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். மத் 9:27யோவா 4:29மத் 22:42-43யோவா 7:40-42மத் 15:30-31மத் 21:9மத் 9:33மத் 15:22 பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள். மாற் 3:22மத் 9:34லூக் 11:15 இயேசு அவர்கள் யோசனைகளை அறிந்து, அவர்களைப் பார்த்து: தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாகப்போகும்; தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. கலா 5:15எரே 17:10மத் 9:41 கொரி 2:11ஏசா 9:21லூக் 11:17-22மாற் 3:23-27சங் 139:2 சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? கொலோ 1:131 யோவா 5:19யோவா 12:31வெளி 20:2-32 கொரி 4:4யோவா 14:30யோவா 16:11மத் 4:10 நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள். அப் 19:13-16மாற் 9:38-39லூக் 11:19லூக் 9:49-50ரோம 3:19மத் 12:41-42லூக் 19:22 நான் தேவனுடைய ஆவியானவராலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடம் வந்திருக்கிறதே. லூக் 11:20தானி 7:14அப் 10:38மத் 6:33கொலோ 1:13மத் 21:43லூக் 16:16லூக் 17:20-21 அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டிற்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடமுடியும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். ஏசா 49:24மாற் 3:27லூக் 11:21-221 யோவா 4:4வெளி 20:7-91 யோவா 3:8ஏசா 53:12வெளி 20:1-3 என்னோடு இராதவன் எனக்கு விரோதியாக இருக்கிறான்; என்னோடு சேர்க்காதவன் சிதறடிக்கிறான். மாற் 9:40லூக் 11:23யோசு 24:151 யோவா 2:19லூக் 9:50மத் 6:242 கொரி 6:15-16வெளி 3:15-16 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்த நிந்தனையும் மனிதர்களுக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான நிந்தனையோ மனிதர்களுக்கு மன்னிக்கப்படுவதில்லை. லூக் 12:10மாற் 3:28-30எபி 10:29எபி 10:261 தீமோ 1:13-15அப் 7:51மத் 12:31-321 யோவா 5:16 எவனாவது மனிதகுமாரனுக்கு விரோதமாக வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாவது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. மாற் 3:29எபி 10:26-29எபி 6:4-6லூக் 12:10மத் 12:311 தீமோ 1:13யோவா 7:39அப் 3:19

மரங்களும் அதின் கனிகளும்

மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். லூக் 6:43-44மத் 7:16-20யாக் 4:8யோவா 15:4-7மத் 3:8-10ஆமோ 5:15லூக் 11:39-40லூக் 3:9 விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாக இருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். லூக் 6:45மத் 15:18எபே 4:291 சாமு 24:13யாக் 3:5-8சங் 140:2-31 யோவா 3:10ஏசா 32:6 நல்ல மனிதன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனிதன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். கொலோ 4:6நீதி 15:4நீதி 15:28கொலோ 3:16நீதி 25:11-12மத் 12:34எபே 4:29நீதி 10:20-21 மனிதர்கள் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும்குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். பிரச 12:14ரோம 2:16வெளி 20:12யூதா 1:14-15எபே 6:4-6 ஏனென்றால், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். நீதி 13:3யாக் 2:21-25

யோனாவின் அடையாளம்

அப்பொழுது, வேதபண்டிதர்களிலும் பரிசேயர்களிலும் சிலர் அவரைப் பார்த்து: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள். 1 கொரி 1:22மாற் 8:11-12யோவா 2:18லூக் 11:16லூக் 11:29யோவா 4:48மத் 16:1-4யோவா 6:30 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. மத் 16:4லூக் 11:29-32ஏசா 57:3யாக் 4:4மாற் 8:38 யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனா 1:17மத் 27:63-64யோவா 2:19மத் 16:21மத் 17:23மத் 27:40யோனா 2:2-6சங் 63:9 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். மத் 12:42எபி 11:7எபி 3:5-6எரே 3:11யோவா 3:31யோனா 1:2லூக் 11:32மத் 12:6 தென்தேசத்து ராணி பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனைவிட பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராணி இந்தச் சந்ததியாரோடு எழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 1 இராஜா 10:1-132 நாளாக 9:1-12எபி 1:2-4லூக் 11:31-32யோவா 1:14மத் 17:51 இராஜா 10:241 இராஜா 5:12 அசுத்தஆவி ஒரு மனிதனைவிட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: லூக் 11:24-26லூக் 8:28-32மத் 8:29ஆமோ 8:11-13மாற் 5:7-131 பேது 5:8ஏசா 35:6-7யோபு 2:2 நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதைப் பார்த்து, 1 யோவா 4:41 கொரி 11:191 யோவா 2:19யூதா 1:4-5சங் 81:11-12வெளி 13:8-91 தீமோ 6:9-102 தெச 2:9-12 திரும்பிப்போய், தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடு அழைத்துக்கொண்டுவந்து, உள்ளே நுழைந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனிதனுடைய முன்னிலைமையைவிட அவனுடைய பின்னிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியார்களுக்கும் நடக்கும் என்றார். லூக் 11:26எபி 10:26-31எபி 6:4-8மாற் 5:92 பேது 2:14-22யோவா 15:22-24யூதா 1:10-13மாற் 16:9

இயேசுவின் தாயாரும், சகோதரர்களும்

இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். மத் 13:55யோவா 2:12யோவா 7:3யோவா 7:5மாற் 3:31-35லூக் 8:19-21மாற் 6:3அப் 1:14 அப்பொழுது, ஒருவன் அவரைப் பார்த்து: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மோடு பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் மறுமொழியாக: என் தாயார் யார்? என் சகோதரர்கள் யார்? என்று சொல்லி, மாற் 3:32-33மத் 10:37உபா 33:9லூக் 2:522 கொரி 5:16யோவா 2:3-4லூக் 2:49 தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! மாற் 3:34யோவா 17:20யோவா 17:8-9யோவா 20:17-20மத் 28:7 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாகவும் இருக்கிறான் என்றார். லூக் 8:21மாற் 3:35யோவா 15:141 யோவா 3:23-24லூக் 11:27-28மத் 28:101 யோவா 2:17எபி 2:11-17