மாற்கு 7

Mark 7
அத்தியாயம் 7

யூதர்களும் பாரம்பரியமும்

எருசலேமில் இருந்து வந்த பரிசேயர்களும், வேதபண்டிதர்களில் சிலரும் அவரிடம் கூடிவந்தார்கள். மத் 15:1-20மாற் 3:22லூக் 11:53-54லூக் 5:17 அப்பொழுது அவருடைய சீடர்களில் சிலர் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறதை அவர்கள் பார்த்து குற்றஞ்சாட்டினார்கள். அப் 10:28மத் 7:3-5ரோம 14:14அப் 10:14-15அப் 11:8தானி 6:4-5மத் 23:23-25 ஏனென்றால், யூதர்கள் அனைவரும் முக்கியமாக பரிசேயர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைபிடித்து, அடிக்கடி கைகளைக் கழுவினாலொழிய சாப்பிடமாட்டார்கள்; கலா 1:14மாற் 7:13கொலோ 2:21-23கொலோ 2:81 பேது 1:18மத் 15:2-6மாற் 7:5மாற் 7:7-10 கடைவீதிகளுக்குச் சென்று திரும்பி வரும்போதும் குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும், கிண்ணங்களையும், செப்புக்குடங்களையும், இருக்கைகளையும் கழுவுகிறதோடு மட்டுமல்லாமல், வேறு அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருவார்கள். எபி 9:10லூக் 11:38-39மத் 23:25ஏசா 1:16யாக் 4:8எரே 4:14யோவா 2:61 யோவா 1:7 அப்பொழுது, அந்தப் பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் அவரைப் பார்த்து: உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். 2 தெச 3:6அப் 21:21அப் 21:24கலா 1:14மத் 15:2மாற் 2:16-18ரோம 4:122 தெச 3:11 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஏசா 29:13தீத் 1:16மத் 15:7-9எசேக் 33:312 தீமோ 3:5மத் 23:13-15யாக் 2:14-17யோவா 5:42

இந்த மக்கள் தங்களுடைய உதடுகளினால் என்னை கனம்பண்ணுகிறார்கள்;

அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது என்றும்,

மனிதர்களுடைய கட்டளைகளைப் போதனைகளாகப் போதித்து, ஏசா 29:13மத் 15:9கொலோ 2:22யாக் 1:26மத் 6:71 தீமோ 4:1-3தீத் 3:91 சாமு 12:21

வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறபடி, மாயக்காரர்களாகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாகத் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்.

நீங்கள் தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிவிட்டு, மனிதர்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடித்துவருகிறவர்களாக, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் கடைபிடித்துவருகிறீர்கள்” என்றார். மாற் 7:3-4ஏசா 1:12 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிப்பதற்காக தேவனுடைய கட்டளைகளை நிராகரித்தது நன்றாக இருக்கிறது. ஏசா 29:13கலா 2:21எரே 44:16-17ஏசா 24:5மத் 15:3-6சங் 119:126மாற் 7:13மாற் 7:3 எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. யாத் 21:17யாத் 20:12உபா 5:16லேவி 20:9மத் 15:4மாற் 10:19உபா 27:16நீதி 20:20 நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது பார்த்து: உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாக தேவனுக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை முடிந்தது என்று சொல்லி, மத் 23:181 தீமோ 5:4-8மத் 15:5 அவனை இனி தன் தகப்பனுக்கோ தன் தாய்க்கோ எந்தவொரு உதவியும் செய்யவிடாமல்; நீங்கள் போதித்த உங்களுடைய பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமதிக்கிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்ற அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார். மாற் 7:9தீத் 1:14ஏசா 8:20மத் 5:17-20ஓசி 8:12எரே 8:8-9மத் 15:6எசேக் 18:14 பின்பு அவர் மக்கள் எல்லோரையும் வரவழைத்து அவர்களைப் பார்த்து: நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைக்கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். மத் 15:10நீதி 8:5அப் 8:30ஏசா 6:91 இராஜா 18:211 இராஜா 22:28லூக் 12:54-57சங் 94:8 மனிதனுக்கு வெளியிலிருந்து அவனுக்குள்ளே போகிறது அவனைத் தீட்டுப்படுத்தாது; அவன் மனதிலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். நீதி 4:23லேவி 11:42-47தீத் 1:15எபி 13:9மத் 12:34எபி 9:10மாற் 7:18-23ரோம 14:17 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார். அவர் மக்களைவிட்டு வீட்டிற்குள் சென்றபோது, அவருடைய சீடர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். மத் 15:15மத் 13:36மாற் 9:28மத் 13:10மாற் 4:10மாற் 4:34 அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா? வெளியிலிருந்து மனிதனுக்குள்ளே போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? மத் 15:16-17எபி 5:11ஏசா 28:9-10லூக் 24:25மத் 16:111 கொரி 3:2எரே 5:4-5யோவா 3:10 அது அவன் இருதயத்திற்குள் போகாமல் வயிற்றுக்குள்ளே போகிறது; அதிலிருந்து எல்லா அசுத்தங்களும் ஆசனவழியாக வெளியேபோகும். மத் 15:171 கொரி 6:13அப் 10:15அப் 11:9கொலோ 2:16கொலோ 2:21-22லூக் 11:41ரோம 14:1-12 மனிதனுக்குள்ளேயிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும். யாக் 3:6யாக் 1:14-15யாக் 4:1மாற் 7:15மத் 12:34-37சங் 41:6மீகா 2:1எபி 7:6 எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், எரே 17:9யாக் 4:1-3ரோம 8:7-8கலா 5:19-21மத் 15:19அப் 8:22எசேக் 38:10யாக் 2:4 திருட்டும், பொருளாசைகளும், துஷ்டகுணங்களும், கபடும், காமமும், வன்கண்ணும், அவதூறும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். மத் 20:151 பேது 2:151 பேது 5:52 கொரி 10:5பிரச 7:25மத் 6:23ஒபதி 1:3-41 சாமு 18:8-9 பொல்லாதவைகளாகிய இவைகள் எல்லாம் மனதிலிருந்து புறப்பட்டு மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்றார். மாற் 7:151 கொரி 3:17தீத் 1:15யூதா 1:8மாற் 7:18

சீரோபேனிக்கியா தேசத்துப் பெண்

பின்பு, அவர் எழுந்து அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில்போய், ஒரு வீட்டிற்குள் சென்று, அவர் அங்கே இருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பியும், அவர் மறைவாக இருக்கமுடியாமல்போனது. மத் 15:21-28மத் 11:21எசேக் 28:2மாற் 6:31-32மாற் 3:7-81 தீமோ 5:25மத் 9:28எசேக் 28:21-22 அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய், இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். மத் 15:22அப் 10:25-26மாற் 1:40மாற் 5:22-23மாற் 5:33மாற் 9:17-23லூக் 17:16வெளி 22:8-9 அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள். மத் 15:22கொலோ 3:11கலா 3:28ஏசா 49:12 இயேசு அவளைப் பார்த்து: முதலில் பிள்ளைகள் திருப்தியாகட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லது இல்லை என்றார். மத் 15:23-28மத் 7:6அப் 22:21எபே 2:12மத் 10:5ரோம 15:8 அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும், மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். ரோம 10:12ரோம 3:29அப் 11:17-18ஏசா 45:22லூக் 15:30-32லூக் 7:6-8எபே 2:12-14எபே 3:8 அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார். மத் 5:3ஏசா 66:2மத் 8:9-131 யோவா 3:8ஏசா 57:15-16 அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். 1 யோவா 3:8யோவா 4:50-52

கிறிஸ்து வியாதிஸ்தர்களை சுகப்படுத்துதல்

மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின்வழியாகக் கலிலேயாக்கடலின் அருகே வந்தார். மாற் 5:20மத் 15:29-31மத் 4:25மாற் 7:24மத் 11:21மத் 4:18 அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். லூக் 11:14மாற் 5:23மத் 9:32-33 அப்பொழுது, அவர் அவனை மக்கள் கூட்டத்தைவிட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாக்கைத் தொட்டு; மாற் 8:23யோவா 9:6-7மாற் 5:401 இராஜா 17:19-222இராஜா 4:33-342இராஜா 4:4-6 வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தம். யோவா 11:41மாற் 5:41அப் 9:34அப் 9:40யோவா 11:33மாற் 6:41யோவா 11:43மாற் 8:12 உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாக்கின் கட்டும் அவிழ்ந்து, அவன் தெளிவாகப் பேசினான். ஏசா 35:5-6ஏசா 32:3-4மத் 11:5மாற் 2:12சங் 33:9 அதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆனாலும் எவ்வளவு அதிகமாக அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதைப் பிரசித்தப்படுத்தி, மத் 8:4மாற் 1:44-45மாற் 3:12மாற் 5:43மாற் 8:26 எல்லாவற்றையும் நன்றாகச் செய்தார்; காதுகேட்காதவர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேலும் ஆச்சரியப்பட்டார்கள். மாற் 6:51யாத் 4:10-11மாற் 4:41மாற் 5:42ஆதி 1:31மாற் 2:12சங் 139:14அப் 14:11