எபிரெயர் 7

Hebrews 7
அத்தியாயம் 7

ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கு

இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். ஆதி 14:18-20எபி 6:20மீகா 6:6சங் 57:2தானி 5:18ஆதி 16:14-16மாற் 5:7சங் 76:2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதல் பெயராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும். எண் 18:211 நாளாக 22:91 சாமு 8:151 சாமு 8:172 சாமு 23:32 சாமு 8:15ஆதி 28:22சங் 45:4-7 இவன் தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் வாழ்நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவனாக, தேவனுடைய குமாரனைப்போல என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். எபி 7:17யாத் 6:20-27எபி 7:23-28எபி 7:6மத் 4:31 நாளாக 6:1-3யாத் 6:18 இவன் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம்கூட கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான். ஆதி 14:20அப் 2:29அப் 7:8-9கலா 3:28-29ஆதி 12:2ஆதி 17:5-6யாக் 2:23ரோம 4:11-13 லேவியின் குமாரர்களில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் வம்சத்திலிருந்து வந்த தங்களுடைய சகோதரர்களான மக்களிடம் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைப் பெற்றிருக்கிறார்கள். லேவி 27:30-332 நாளாக 31:4-6எண் 16:10-11எண் 18:21-321 இராஜா 8:19எபி 7:10நெகே 13:10எண் 17:3-10 ஆனாலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த அவனை ஆசீர்வதித்தான். ரோம 4:13ஆதி 13:14-17ஆதி 17:4-8எபி 7:3-4எபி 11:17அப் 3:25கலா 3:16ஆதி 12:2 சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதில் சந்தேகம் இல்லை. 2 நாளாக 30:27ஆதி 48:15-201 இராஜா 8:551 தீமோ 3:162 கொரி 13:142 சாமு 6:20ஆதி 27:20-40லூக் 24:50-51 அன்றியும், இங்கே, தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள்; அங்கேயோ, ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன், உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன். எபி 6:20எபி 5:6வெளி 1:18எபி 7:23யோவா 14:19எபி 3:16எபி 9:24-25யோவா 14:6 அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் முற்பிதாவாகிய ஆபிரகாமின் சரீரத்தில் இருந்ததினால், ரோம 5:12ஆதி 14:20எபி 7:4 தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாகத் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். ஆதி 35:11ஆதி 46:26எபி 7:51 இராஜா 8:19

மெல்கிசேதேக்கைப்போல இயேசு

அல்லாமலும், இஸ்ரவேல் மக்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்கு உட்பட்டிருந்துதான் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்குடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியது என்ன? எபி 8:7கலா 2:21கலா 4:9எபி 7:17-19எபி 5:6எபி 7:15எபி 7:21எபி 8:10-13 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருந்தால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும். எரே 31:31-34ஏசா 66:21அப் 6:13-14எசேக் 16:61 இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே. எபி 7:11எபி 7:142 நாளாக 26:16-21எண் 17:5எண் 16:40 நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினார் என்பது தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரின் ஆசாரியத்துவத்தைப்பற்றி மோசே ஒன்றும் சொல்லவில்லையே. மீகா 5:2ஏசா 11:1லூக் 3:33வெளி 5:5ஆதி 49:10வெளி 22:16ரோம 1:3எபே 1:3 அல்லாமலும், மெல்கிசேதேக்கைப்போல வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது. சங் 110:4எபி 7:11எபி 7:17-21எபி 7:3 அவர் சரீர சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் ஆசாரியர் ஆகாமல், கொலோ 2:20கலா 4:3கலா 4:9வெளி 1:18கொலோ 2:14எபி 10:1எபி 7:28எபி 7:3 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். சங் 110:4எபி 5:6எபி 7:21எபி 7:15எபி 5:10எபி 6:20 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயன் இல்லாததுமாக இருந்ததினால் மாற்றப்பட்டது. ரோம 8:3அப் 13:39கலா 4:9எபி 7:11-12எபி 7:19எபி 8:7-131 தீமோ 4:8கலா 3:17 நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, ஆனால், சிறந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; அந்த நம்பிக்கையினாலே தேவனுக்கு அருகில் சேருகிறோம். அப் 13:39எபி 4:16எபி 9:9ரோம 8:3எபி 10:1எபி 11:40எபி 6:18ரோம 5:2 அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எபி 5:6எண் 18:7சங் 110:4 எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, சங் 110:4எபி 7:17எபி 6:16-181 சாமு 15:29 அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார். 1 கொரி 11:25எபி 8:6-12ஆதி 44:32எபி 12:24எபி 13:20எபி 9:15-23லூக் 22:20ஆதி 43:9 அன்றியும், அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால், அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள். நெகே 12:10-111 நாளாக 6:3-14எபி 7:8 ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. எபி 7:28யோவா 12:34ஏசா 9:6-7வெளி 1:18எபி 13:8எபி 7:8-251 சாமு 2:35ரோம 6:9 மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார். ரோம 8:341 யோவா 2:1-21 தீமோ 2:5யோவா 14:6யூதா 1:24எபே 2:18ஏசா 45:22ரோம 5:2 பரிசுத்தமுள்ளவரும், குற்றம் இல்லாதவரும், மாசு இல்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார். 2 கொரி 5:211 பேது 2:22எபி 4:14-151 யோவா 2:2எபி 8:1எபி 1:31 யோவா 3:5எபே 4:8-10 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முதலில் தன் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் தினமும் பலியிடவேண்டியதில்லை; ஏனென்றால், தம்மைத்தாமே பலியிட்டபோதே இதை ஒரேமுறை செய்துமுடித்தார். எபி 9:12எபி 9:28எபி 9:14எபே 5:2எபி 10:6-12எபி 5:3ரோம 6:10தீத் 2:14 நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. எபி 2:10எபி 1:2எபி 7:21எபி 5:1-2லூக் 13:32சங் 110:4யாத் 32:21-22எபி 3:6