லூக்கா 3

Luke 3
அத்தியாயம் 3

யோவான்ஸ்நானனின் பிரசங்கம்

திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும், ஆதி 49:10லூக் 23:6-11அப் 4:27லூக் 2:1லூக் 23:24லூக் 9:7மத் 27:2மாற் 6:17 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது. அப் 4:6யோனா 1:1யோவா 18:24லூக் 1:80யோவா 18:13-14மத் 26:3மத் 3:1-10மீகா 1:1 அப்பொழுது: லூக் 1:77அப் 13:24மத் 3:5-6அப் 19:4மத் 3:11அப் 22:16யோவா 1:31-33யோவா 3:26

“கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்,

அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,

பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், ஏசா 40:3-5யோவா 1:23யோவா 1:26-36லூக் 1:76-79ஏசா 62:10யோவா 1:7யோவா 3:28-36ஏசா 57:14

எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும்,

கோணலானவைகள் நேராகும்,

கரடானவைகள் சமமாகும் என்றும்,

மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், ஏசா 40:4ஏசா 42:16ஏசா 45:2ஏசா 49:11எசேக் 17:24எபி 12:12-13லூக் 1:51-53ஏசா 2:11-17

வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்”

என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,

அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான். ஏசா 52:10ஏசா 40:5சங் 98:2-3ஏசா 49:6ரோம 10:18லூக் 2:10-11லூக் 2:30-32ரோம 10:12 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்? மத் 23:331 தெச 1:10மத் 12:341 யோவா 3:8எபி 6:18அப் 13:10ஆதி 3:15ஏசா 59:5

மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். எசேக் 18:27-31அப் 26:20ஏசா 1:16-18கலா 5:22-24மத் 21:43எபி 6:7-8யோசு 4:3-8லூக் 19:40 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான். மத் 7:19யோவா 15:6ஏசா 10:33-34லூக் 13:9மத் 3:10லூக் 13:7தானி 4:23எசேக் 31:18 அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அப் 2:37லூக் 3:14அப் 16:30அப் 9:6லூக் 3:12லூக் 3:8 அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான். ஏசா 58:7-111 யோவா 3:171 தீமோ 6:18லூக் 18:221 யோவா 4:20யாக் 1:27யாக் 2:15-26தானி 4:27 வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். லூக் 7:29லூக் 15:1-2லூக் 18:13மத் 21:31-32 அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். லூக் 19:8எபே 4:281 கொரி 6:10ஏசா 1:16-17மீகா 6:8தீத் 2:11-12மத் 7:12ஏசா 55:6-7 போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான். எபி 13:5-6யாத் 20:161 தீமோ 6:8-10யாத் 23:1பிலி 4:11லேவி 19:11ரோம 13:9-10லூக் 19:8 யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது, யோவா 10:24யோவா 3:28-29யோவா 1:19-28 யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். மத் 3:11அப் 1:5அப் 11:15-16யோவா 1:33யோவா 1:26அப் 19:4-5யோவே 2:28-29அப் 2:3-4 தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். எரே 15:7மத் 13:30மீகா 4:12சங் 1:4ஏசா 30:24மத் 3:12சங் 21:9-10மாற் 9:43-49 வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான். அப் 2:40யோவா 1:29யோவா 1:34யோவா 3:29-36யோவா 1:15 தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது, லூக் 3:1மத் 14:3-4மாற் 6:17-18மத் 11:2நீதி 15:12நீதி 9:7-8 ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான். 1 தெச 2:15-162 நாளாக 24:17-222 நாளாக 36:162இராஜா 24:4எரே 2:30மத் 23:31-33நெகே 9:26வெளி 16:6

இயேசுவின் ஞானஸ்நானமும் வம்சவரலாறும்

மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது; யோவா 1:32-34மத் 3:13-17யோவா 12:27-28லூக் 5:16மாற் 1:9-11மத் 14:23லூக் 9:28-29லூக் 9:18 பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது. சங் 2:72 பேது 1:17-18ஏசா 42:1யோவா 1:32லூக் 9:34-35மத் 17:5மத் 3:17அப் 10:38 அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்; லூக் 4:22மத் 13:55யோவா 6:42எண் 4:3அப் 1:1ஆதி 41:46மத் 1:16மத் 4:17 ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன். நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன். யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன். மத் 1:12 நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன். யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன். லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன். எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன். 1 நாளாக 3:52 சாமு 5:141 நாளாக 14:4சகரி 12:12 தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன். ரூத் 4:18-22ஏசா 11:1-2மத் 1:3-61 நாளாக 2:10-151 இராஜா 12:161 சாமு 17:581 சாமு 20:31அப் 13:22-23 நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன். 1 நாளாக 2:4-51 நாளாக 2:9-101 நாளாக 9:4ரூத் 4:12ஆதி 29:35ஆதி 38:29ஆதி 46:12ஆதி 49:8 யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன். ஆதி 21:3யோசு 24:21 நாளாக 1:34அப் 7:8மத் 1:21 நாளாக 1:24-28ஆதி 25:26ஆதி 11:24-32 நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன். ஆதி 10:24-25ஆதி 11:12-21 சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன். ஆதி 10:21-22ஆதி 5:28-32ஆதி 9:11 பேது 3:202 பேது 2:5எசேக் 14:14ஆதி 11:10-26எபி 11:7 லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன். 1 நாளாக 1:1-3ஆதி 5:6-28 ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன். ஆதி 2:7ஏசா 64:81 கொரி 15:451 கொரி 15:47ஆதி 4:25அப் 17:26-29ஆதி 1:26-27