பவுலுடைய தரிசனமும், முள்ளும்
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். கலா 1:121 யோவா 5:202 கொரி 12:71 கொரி 10:232 கொரி 12:112 கொரி 8:10அப் 18:9அப் 22:17-21 கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார். அப் 22:171 தெச 4:17எசேக் 8:1-3வெளி 4:22 கொரி 11:11ஏசா 57:151 இராஜா 18:12ஏசா 45:24-25 அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன். அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார். லூக் 23:43எசேக் 31:9வெளி 2:7 இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன். 1 கொரி 2:32 கொரி 11:302 கொரி 12:9-10 சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன். 2 கொரி 11:162 கொரி 10:8-102 கொரி 11:312 கொரி 12:111 கொரி 3:51 கொரி 3:9-102 கொரி 1:182 கொரி 12:7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது. எண் 33:55நியாயாதி 2:32 நாளாக 32:25-261 கொரி 5:5கலா 4:13ஆதி 32:311 தீமோ 3:6தானி 5:20 அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். எபி 5:7மத் 26:39-441 சாமு 15:112 சாமு 12:16-18சங் 77:2-11மத் 20:21-22உபா 3:23-27 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன். பிலி 4:132 கொரி 12:10ஏசா 40:29-31எபே 3:16யோசு 1:9ஏசா 43:21 கொரி 10:13எபி 4:16 அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். 2 கொரி 12:9எபே 6:10ரோம 5:32 கொரி 13:4யாக் 1:21 பேது 1:6-72 கொரி 6:4லூக் 6:22
கொரிந்தியர்கள் மீதான பவுலின் கரிசனை
மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே. 2 கொரி 11:51 கொரி 15:8-102 கொரி 11:1எபே 3:81 கொரி 3:221 கொரி 3:4-72 கொரி 1:62 கொரி 11:16-17 அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே. ரோம 15:18-192 கொரி 4:21 கொரி 1:5-71 கொரி 14:181 கொரி 9:1-22 கொரி 11:42 கொரி 11:6யோவா 4:48 எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாக இருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்திற்காக என்னை மன்னியுங்கள். 1 கொரி 9:121 கொரி 9:61 கொரி 9:15-182 கொரி 11:7-92 கொரி 12:14 இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். நீதி 19:14ஆதி 24:35-361 கொரி 10:33ஆதி 31:14-151 கொரி 10:24நீதி 13:222 கொரி 1:15எசேக் 34:2 எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். 1 தெச 2:82 கொரி 1:6கொலோ 1:24பிலி 2:172 தீமோ 2:102 கொரி 2:32 கொரி 6:12-13எபி 13:17 அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம். 1 தெச 2:31 தெச 2:52 கொரி 1:122 கொரி 10:2-32 கொரி 11:9-102 கொரி 12:132 கொரி 4:22 கொரி 7:2 நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா? 1 கொரி 16:101 கொரி 4:172 கொரி 12:182 கொரி 9:52இராஜா 5:162இராஜா 5:20-27 தீத்து உங்களிடம் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனோடுகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடம் ஏதாவது நன்மையைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியை உடையவர்களாக, ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம் அல்லவா? 2 கொரி 8:6ரோம 4:121 பேது 2:211 சாமு 12:3-42 கொரி 2:12-132 கொரி 7:22 கொரி 7:62 கொரி 8:16-23 நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம். ரோம 9:11 கொரி 14:262 கொரி 10:81 கொரி 10:141 கொரி 10:331 கொரி 9:12-232 கொரி 11:102 கொரி 11:31 ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்; 1 பேது 2:1கலா 5:19-211 கொரி 1:11ரோம 1:29கலா 5:15யூதா 1:16நீதி 16:28யாக் 4:1-5 மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன். 2 கொரி 13:21 கொரி 5:11 கொரி 5:9-111 பேது 4:2-3கொலோ 3:5கலா 5:19வெளி 21:8யூதா 1:23