பவுலின் ஆவிக்குரிய வல்லமை
உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாகவும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்புடனும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்வைத்து உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 2 கொரி 10:10மத் 11:29கலா 5:2ரோம 12:1ஏசா 42:3-42 கொரி 12:7-91 கொரி 2:32 கொரி 11:30 எங்களை சரீரத்தின்படி நடக்கிறவர்கள் என்று நினைக்கிற சிலரைக்குறித்து நான் கண்டிப்புடன் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிற தைரியத்தோடு, உங்கள் முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாக இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். 2 கொரி 13:102 கொரி 13:2கலா 5:16-25எபே 2:2-31 கொரி 4:18-212 கொரி 12:13-202 கொரி 11:9-13ரோம 8:1 நாங்கள் சரீரத்தில் நடக்கிறவர்களாக இருந்தும் சரீரத்தின்படி போர் செய்கிறவர்கள் இல்லை. 2 கொரி 10:41 பேது 4:1-2கலா 2:20ரோம 8:132 தீமோ 2:3-41 தீமோ 1:182 தீமோ 4:7எபி 12:1 எங்களுடைய போராயுதங்கள் சரீரத்திற்கு உரியவைகளாக இல்லாமல், அரண்களை அழிக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாக இருக்கிறது. 2 கொரி 6:7எபே 6:13-18எரே 1:101 கொரி 2:51 சாமு 17:45-502 கொரி 13:3-41 தீமோ 1:18சகரி 4:6-7 அவைகளால் நாங்கள் வாக்குவாதங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாக எழும்புகிற எல்லா மேட்டிமையையும் அழித்து, எல்லா எண்ணங்களையும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படியுமாறு சிறைப்படுத்துகிறவர்களாக இருக்கிறோம். எபி 4:12ஏசா 55:71 பேது 1:14-15ரோம 7:23மத் 15:19ரோம 1:21எரே 4:141 கொரி 3:19 உங்களுடைய கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்கும் தகுந்த நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாக இருக்கிறோம். 2 கொரி 2:9எண் 16:26-302 கொரி 7:151 கொரி 5:3-52 கொரி 13:2அப் 5:3-112 கொரி 13:10அப் 13:10-11 வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவிற்குரியவன் என்று நம்பினால், தான் கிறிஸ்துவிற்குரியவனாக இருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவிற்குரியவர்கள் என்று அவன் தனக்குள்ளே சிந்திக்கட்டும். யோவா 7:241 கொரி 14:372 கொரி 5:122 கொரி 11:231 கொரி 3:231 கொரி 9:11 யோவா 4:61 கொரி 1:12 மேலும், உங்களை அழிக்கிறதற்காக அல்ல, உங்களை உறுதியாகக் கட்டி எழுப்புகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை. 2 கொரி 13:102 தீமோ 1:122 கொரி 1:242 கொரி 12:62 கொரி 13:2-32 கொரி 13:8கலா 1:12 கொரி 7:14 நான் கடிதங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாகத் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 1 கொரி 4:19-211 கொரி 4:52 கொரி 10:10 அவனுடைய கடிதங்கள் கடினமானவையும் பலமும் உள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமாகவும் இருக்கிறது என்கிறார்களே. 1 கொரி 1:17யாத் 4:102 கொரி 11:62 கொரி 12:5-9கலா 4:13-14எரே 1:61 கொரி 2:1-41 கொரி 1:21 அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்தில் இருக்கும்போது எழுதுகிற கடிதங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோமோ அப்படிப்பட்டவர்களாகவே அருகில் இருக்கும்போதும், செய்கையிலும் இருப்போம் என்று சிந்திக்கட்டும். 2 கொரி 12:202 கொரி 13:102 கொரி 13:2-31 கொரி 4:19-20 எனவே, தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிற சிலருக்கு நாங்கள் எங்களை சரியாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களையே அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்திமான்கள் இல்லை. நீதி 27:2நீதி 26:122 கொரி 10:18லூக் 18:11ரோம 15:182 கொரி 3:1நீதி 25:272 கொரி 5:12 நாங்கள் அளவிற்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம் வந்தடைவதற்காக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். 1 பேது 4:10ரோம 12:62 கொரி 10:14-15எபே 4:7ரோம 12:3ரோம 15:201 கொரி 12:11ஏசா 28:17 உங்களிடம் வந்தடையாதவர்களாக நாங்கள் அளவிற்கு மிஞ்சிப்போகிறது இல்லை; நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்து உங்களிடம் வந்தோமே. ரோம 1:161 கொரி 4:151 தீமோ 1:111 கொரி 2:101 கொரி 3:5-61 கொரி 9:1-22 கொரி 2:122 கொரி 3:1-3 எங்களுடைய அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்கு உட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம். 2 தெச 1:3ரோம 15:202 கொரி 10:13அப் 5:13 ஆனாலும் உங்களுடைய விசுவாசம் பெருகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்பால் உள்ள இடங்களில் நற்செய்தியைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்களுடைய அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோம் என்று நம்பிக்கையாக இருக்கிறோம். ரோம 15:24-28அப் 19:21 மேன்மைபாராட்டுகிறவன் கர்த்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டவேண்டும். எரே 9:23-241 கொரி 1:31யாக் 1:9-10ஏசா 65:16சங் 105:31 கொரி 1:29எரே 4:2பிலி 3:3 தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். நீதி 21:2லூக் 16:151 கொரி 4:5ரோம 2:292 கொரி 10:12யோவா 12:43லூக் 18:10-14யோவா 5:42-44