2 தீமோத்தேயு 3

2 Timothy 3
அத்தியாயம் 3

கடைசிகாலங்கள்பற்றின முன்னறிவிப்பு

மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. 2 பேது 3:32 தீமோ 4:31 தீமோ 4:1-31 யோவா 2:182 தெச 2:3-12யூதா 1:17மீகா 4:1ஏசா 2:2 எப்படியென்றால், மனிதர்கள் தற்பிரியர்களாகவும், பணப்பிரியர்களாகவும், வீம்புக்காரர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், நிந்திக்கிறவர்களாகவும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி இல்லாதவர்களாகவும், பரிசுத்தமில்லாதவர்களாகவும், பிலி 2:21ரோம 1:29-31யூதா 1:16சங் 10:32 தீமோ 3:42 பேது 2:14-151 தீமோ 6:102 பேது 2:18 மெய்யான அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்காதவர்களாகவும், அவதூறு செய்கிறவர்களாகவும், இச்சையடக்கம் இல்லாதவர்களாகவும், கொடுமை செய்கிறவர்களாகவும், நல்லவைகளை வெறுக்கிறவர்களாகவும், யூதா 1:18ரோம 1:31மத் 10:212 பேது 2:141 தீமோ 3:11தானி 8:23மத் 4:1லூக் 10:16 துரோகிகளாகவும், துணிகரம் உள்ளவர்களாகவும், இறுமாப்பு உள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாக இல்லாமல் சுகபோகப்பிரியர்களாகவும், 1 தீமோ 3:6யூதா 1:4பிலி 3:18-192 பேது 2:10-22யூதா 1:8-9யூதா 1:19ரோம 16:181 தீமோ 5:6 தேவ பக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு. ஏசா 29:13தீத் 1:16மத் 23:27-281 தீமோ 5:8ரோம 2:20-24மத் 7:15தீத் 3:10எசேக் 33:30-32 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு, யூதா 1:42 பேது 3:17தீத் 3:3யூதா 1:18தீத் 1:11மாற் 4:191 கொரி 12:22 பேது 2:18 எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாக இருக்கிற பெண்களுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். 2 தீமோ 4:3-4எபே 4:141 தீமோ 2:42 தீமோ 2:25எபி 5:11யோவா 5:44நீதி 14:61 கொரி 3:1-4 யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்துநின்றதுபோல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்துநிற்கிறார்கள்; இவர்கள் தீய சிந்தையுள்ள மனிதர்கள், விசுவாச காரியத்தில் பரீட்சைக்கு நிற்காதவர்கள். அப் 13:8-11யாத் 7:11வெளி 2:201 தீமோ 6:51 யோவா 4:12 பேது 2:142 தீமோ 4:15எபே 4:14 ஆனாலும், இவர்கள் அதிகமாகப் பலப்படுவதில்லை; அந்த இருவருடைய அறிவீனம் எல்லோருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய அறிவீனமும் வெளிப்படும். 2 தீமோ 3:8யாத் 7:12எரே 28:15-17யாத் 9:111 இராஜா 22:25அப் 13:11அப் 19:15-17யாத் 8:18-19

தீமோத்தேயுவிற்கு பவுலின் அறிவுரைகள்

நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும், 1 தீமோ 6:11தீத் 2:72 பேது 1:5-71 தீமோ 4:6பிலி 2:22எபி 13:91 தீமோ 4:12-13அப் 11:23 அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாக அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவைகள் எல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றினார். சங் 34:192 கொரி 11:23-28அப் 14:5-6அப் 13:452 பேது 2:9அப் 13:50-51அப் 14:1-2அப் 14:19-21 அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள். 1 பேது 3:141 பேது 4:12-161 பேது 2:20-21அப் 14:22மத் 16:24மத் 5:10-12யோவா 16:21 பேது 5:9-10 பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவும் இருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள். 1 தீமோ 4:1தீத் 3:32 தீமோ 3:82 பேது 2:202 பேது 3:32 தெச 2:6-112 தீமோ 2:16-17எசேக் 14:9-10 நீ கற்று உறுதிசெய்துகொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை யாரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், 1 தெச 2:132 தீமோ 2:22 தீமோ 1:131 தெச 1:5எபி 10:22எபி 6:111 தீமோ 4:162 தீமோ 3:15 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். சங் 119:98-99லூக் 24:45நீதி 22:62 பேது 1:20-21மத் 22:291 கொரி 15:3-4லூக் 24:272 தீமோ 1:5 வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, ரோம 15:4எபி 4:122 பேது 1:19-21மாற் 12:24சங் 19:7-11நீதி 6:23சங் 119:92 தீமோ 4:2 அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது. 2 தீமோ 2:212 கொரி 9:8எபே 2:101 தீமோ 6:11எபி 10:24தீத் 2:14அப் 9:36தீத் 3:1