திருமணவிருந்து பற்றிய உவமை
இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்: மத் 20:1-16மத் 12:43-45லூக் 14:16லூக் 8:10மத் 13:3-11மத் 21:28-46மத் 9:15-17மாற் 4:33-34 பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது. மத் 13:24வெளி 19:7-9எபே 5:24-322 கொரி 11:2சங் 45:10-16யோவா 3:29-30லூக் 14:16-24மத் 13:31-33 அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள். வெளி 22:17யோவா 5:40லூக் 14:15-17ஓசி 11:7மத் 3:2சங் 81:10-12ரோம 10:211 சாமு 9:13 அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். அப் 13:46யோவா 6:50-57மத் 21:361 கொரி 5:7-8அப் 1:8அப் 11:19-20அப் 28:17-31லூக் 10:1-16 அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள். எபி 2:3லூக் 14:18-201 யோவா 2:15-161 தீமோ 6:9-102 தீமோ 3:4அப் 2:13அப் 24:25ஆதி 19:14 மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். யோவா 15:19-201 தெச 2:14-15அப் 4:1-3அப் 5:40-41அப் 7:51-57அப் 8:1யோவா 16:2-3மத் 10:12-18 ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். லூக் 19:271 பேது 4:17-18யோவே 2:25லூக் 21:241 தெச 2:16தானி 9:26உபா 28:49-68ஏசா 13:2-5 அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள். 2 தெச 1:5அப் 13:46வெளி 3:4லூக் 20:35வெளி 22:14லூக் 21:36மத் 10:11-13மத் 10:37-38 ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான். லூக் 14:21-24மாற் 16:15-16நீதி 1:20-23அப் 13:47எபே 3:8எசேக் 21:21ஏசா 55:1-3ஏசா 55:6-7 அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது. 1 கொரி 6:9-111 யோவா 2:192 கொரி 12:21மத் 13:47-48வெளி 19:6-9வெளி 2:20-23வெளி 7:9மத் 22:11-12 விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து: வெளி 19:8வெளி 3:4-5எபி 4:12-13சகரி 3:3-4கொலோ 3:10-11எபே 4:24வெளி 16:15ரோம 13:14 நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். 1 சாமு 2:9யோபு 5:16மத் 20:13அப் 5:2-11எரே 2:23எரே 2:26மத் 26:50சங் 107:42 அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். மத் 8:12மத் 25:302 பேது 2:172 பேது 2:42 தெச 1:9யூதா 1:6லூக் 13:28மத் 13:42 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். 2 பேது 1:10லூக் 13:23-24வெளி 17:14மத் 7:13-14மத் 20:16மத் 24:22
இராயனுக்கு வரி செலுத்துதல்
அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து, லூக் 20:20-26மாற் 12:13-17சங் 2:2சங் 56:5-7சங் 59:3எபி 12:3ஏசா 29:21எரே 18:18 தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். மாற் 3:6லூக் 20:21மாற் 12:14மாற் 8:151 யோவா 5:20எரே 9:3-5யோவா 14:6யோவா 18:37 ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். லூக் 2:1ரோம 13:6-7மத் 17:25அப் 28:22அப் 17:7அப் 25:8அப் 5:37உபா 17:14-15 இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? யோவா 2:25யோவா 8:6லூக் 5:22அப் 5:9வெளி 2:23லூக் 10:25லூக் 20:23லூக் 9:47 வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். மத் 20:2மத் 18:28வெளி 6:6 அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். லூக் 20:24 இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். ரோம 13:7நீதி 24:21அப் 4:191 பேது 2:13-17மல்கி 1:6-8மத் 22:37தானி 6:20-23அப் 5:29 அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள். மாற் 12:12அப் 6:10கொலோ 4:6லூக் 20:25-26மத் 10:16மத் 22:33மத் 22:46நீதி 26:4-5
உயிர்த்தெழுதலில் திருமணம்
உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து: அப் 4:1அப் 23:6-8லூக் 20:27-40மத் 3:7மாற் 12:18-271 கொரி 15:12-14அப் 5:172 தீமோ 2:18 போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. உபா 25:5-10லூக் 20:28மத் 22:16மத் 7:21மாற் 12:19ரூத் 1:11ஆதி 38:11ஆதி 38:8 எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான். எபி 9:27லூக் 20:29-33மாற் 12:19-23 அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள். எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள். ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள். யோவா 20:9ரோம 15:4லூக் 1:37தானி 12:2-3எரே 32:17ஏசா 26:19பிலி 3:21சங் 17:15 உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்; லூக் 20:34-36மாற் 12:24-251 கொரி 7:29-31யோவா 5:28-29மத் 24:381 யோவா 3:1-2மத் 13:43சங் 103:20 மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? மத் 21:16மத் 12:3மத் 12:7மத் 21:42மத் 9:13 தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார். யாத் 3:6மாற் 12:26-27அப் 7:32லூக் 20:37-38யாத் 3:15-16எபி 11:16 மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். யோவா 7:46லூக் 2:47லூக் 20:39-40லூக் 4:22மத் 22:22மத் 7:28-29மாற் 12:17மாற் 6:2
பிரதானக் கட்டளை
அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். மாற் 12:28-31மத் 25:3-5ஏசா 41:5-7யோவா 11:47-50மத் 12:14அப் 19:23-28அப் 21:28-30அப் 5:24-28 அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: லூக் 7:30லூக் 10:25-37லூக் 11:45-46லூக் 11:52லூக் 14:3மத் 22:18தீத் 3:13மாற் 10:2 போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான். மாற் 12:28-33மத் 5:19-20லூக் 11:42மத் 23:23-24ஓசி 8:12மத் 15:6 இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக; மாற் 12:29-30லூக் 10:27உபா 6:5உபா 10:12மாற் 12:33உபா 30:61 யோவா 5:2-5எபி 10:16-17 இது முதலாம் பெரிய கட்டளை. இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே. மாற் 12:31லூக் 10:27-37லேவி 19:18ரோம 13:9-10கலா 5:14மத் 19:19ரோம 15:2யாக் 2:8 இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். ரோம 13:9மத் 7:121 யோவா 4:19-21யாக் 2:81 யோவா 4:7-11யோவா 1:171 தீமோ 1:5ரோம 3:19-21
தாவீதின் குமாரனாகிய இயேசு
பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: லூக் 20:41-44மாற் 12:35-37மத் 22:34மத் 22:15 கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். எரே 23:5-6ஆமோ 9:11எசேக் 34:23-24யோவா 6:68-69மத் 16:13-17ஏசா 11:1-4ஏசா 7:13-14ஏசா 9:6-7 அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? 2 சாமு 23:2வெளி 4:2எபி 3:7மாற் 12:362 பேது 1:21அப் 1:16அப் 2:30-31லூக் 2:26-27 நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. சங் 110:1எபி 1:13அப் 2:34-351 கொரி 15:25எபி 1:3எபி 10:12-13எபி 12:2ஆதி 3:15 தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார். வெளி 22:16ரோம 1:3-4யோவா 8:581 தீமோ 3:16பிலி 2:6-8எபி 2:14ரோம 9:5 அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை. மாற் 12:34லூக் 20:40லூக் 14:6அப் 4:14ஏசா 50:2-9யோவா 8:7-9யோபு 32:15-16லூக் 13:17