லூக்கா 13

Luke 13
அத்தியாயம் 13

மனந்திரும்புங்கள்

அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். 1 பேது 4:17-18புலம் 2:20அப் 5:37எசேக் 9:5-7மத் 27:2 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? யோவா 9:2அப் 28:4யோபு 22:5-16லூக் 13:4 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள். அப் 3:19மத் 3:2அப் 2:38-40லூக் 13:5வெளி 2:21-22லூக் 21:22-24லூக் 23:28-30மத் 12:45 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? நெகே 3:15யோபு 1:19மத் 6:12மத் 18:241 இராஜா 20:30யோவா 9:11யோவா 9:7லூக் 7:41-42 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார். எசேக் 18:30லூக் 13:3ஏசா 28:10-13 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை. யோவா 15:16கலா 5:22ஏசா 5:1-4மத் 21:19-20எரே 2:21மாற் 11:12-14சங் 80:8-13பிலி 4:17 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். மத் 7:19யோவா 15:6லூக் 3:9யோவா 15:2ரோம 2:4-5யாத் 32:10லேவி 19:23மத் 3:9-10 அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன், ரோம 10:12 பேது 3:9யோவே 2:17யாத் 34:9எரே 15:1யோசு 7:7-9சங் 106:23ரோம 11:14 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். யோவா 15:2எபி 6:81 தெச 2:15எஸ்றா 9:14-15சங் 69:22-28தானி 9:5-8வெளி 16:5-7வெளி 15:3-4

ஓய்வுநாளில் சுகமாக்கப்பட்டப் பெண்

ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். மத் 4:23லூக் 4:44லூக் 4:15-16 அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள். லூக் 8:2லூக் 13:16லூக் 8:27லூக் 8:43அப் 4:22மாற் 9:21சங் 6:2யோவா 5:5-6 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, சங் 107:20மத் 8:16ஏசா 65:1யோவே 3:10லூக் 13:16லூக் 6:8-10 அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். சங் 107:20-22மாற் 16:18மாற் 5:23லூக் 18:43லூக் 4:40மாற் 6:5மாற் 8:25சங் 103:1-5 இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான். யாத் 20:9யோவா 9:14-16மத் 12:2யோவா 5:15-16லூக் 14:3-6லூக் 6:11லூக் 6:7லூக் 8:41 கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? லூக் 14:5யோவா 7:21-24அப் 13:9-10லூக் 6:42அப் 8:20-23ஏசா 29:20யோபு 34:30லூக் 12:1 இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார். மாற் 2:27லூக் 19:9லூக் 3:82 தீமோ 2:26அப் 13:26யோவா 8:44லூக் 13:11-12மத் 4:10 அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள். 1 பேது 3:16சங் 132:182 தீமோ 3:9அப் 3:9-11அப் 4:21யாத் 15:11ஏசா 4:2ஏசா 45:24

கடுகுவிதை, புளித்த மாவு

அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்? மாற் 4:30-34லூக் 17:21மத் 13:31-32லூக் 13:20மாற் 4:26மத் 13:24புலம் 2:13லூக் 7:31 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார். தானி 4:12தானி 2:44-45தானி 4:21எசேக் 17:22-24மத் 13:31-32மாற் 4:31-32சகரி 2:11அப் 2:41 மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார். மத் 13:331 கொரி 5:61 தெச 5:23-24யாக் 1:21யோவா 15:2யோவா 4:14பிலி 1:6பிலி 1:9-11

இடுக்கமான வாசல்

அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார். லூக் 9:51மத் 9:35மாற் 10:32-34லூக் 4:43-44அப் 10:38மாற் 6:6 அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: மத் 7:14மத் 22:14யோவா 21:21-22லூக் 12:13-15மத் 20:16மத் 24:3-5அப் 1:7-8லூக் 21:7-8 இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மத் 7:13-142 பேது 1:101 கொரி 9:24-27எபி 4:11லூக் 21:36எசேக் 33:31பிலி 2:12-13நீதி 21:25 வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். லூக் 13:27மத் 25:10-12மத் 7:21-23லூக் 6:46ஏசா 55:62 கொரி 6:2எபி 12:17எபி 3:7-8 அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஏசா 58:2தீத் 1:162 தீமோ 3:5 ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். சங் 6:8மத் 25:41மத் 7:22-23சங் 119:115சங் 1:62 தீமோ 2:19ஓசி 9:12லூக் 13:25 நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். மத் 8:11-12மத் 22:13மத் 25:30லூக் 14:15லூக் 16:23லூக் 23:42-43மத் 13:42மத் 13:50 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். ஏசா 43:6ஏசா 49:6ஏசா 66:18-20மல்கி 1:11ஏசா 54:2-3அப் 28:28எபே 3:6-8மாற் 13:27 அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார். மத் 19:30மத் 20:16மத் 21:28-31மாற் 10:31மத் 3:9-10மத் 8:11-12

எருசலேமுக்காகப் புலம்புதல்

அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள். நெகே 6:9-11ஆமோ 7:12-13மத் 14:1சங் 11:1-2லூக் 3:1 அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன். எபி 2:10எபி 5:9யோவா 17:4-5யோவா 11:8-10எசேக் 13:4லூக் 9:7-9எபி 7:28யோவா 10:32 இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள். லூக் 9:53மத் 21:11யோவா 4:34மத் 20:18அப் 13:27யோவா 12:35யோவா 9:4அப் 10:38 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது. மத் 23:37-39உபா 32:11-12அப் 7:52ஏசா 30:15லூக் 19:41-42ஓசி 11:2எரே 6:16எரே 7:23-24 இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். சங் 118:26மாற் 11:9-10யோவா 12:13மத் 21:9ஓசி 3:4-5ஏசா 52:7யோவா 12:35-36யோவா 14:19-23