ஞானமுள்ளவனும், ஞானமற்றவனும்
செத்த ஈக்கள் நறுமணத் தைலக்காரனுடைய நறுமணத் தைலத்தை நாறிக் கெட்டுப்போகச்செய்யும்; ஞானத்திலும் மதிப்பிலும் பெயர்பெற்றவனைச் சிறிய மதியீனமும் அப்படியே செய்யும். மத் 5:13-16கலா 2:12-14யாத் 30:25நெகே 13:262 நாளாக 19:2யாத் 30:34-35நெகே 6:13 ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும். பிரச 10:14லூக் 12:18-20பிரச 10:10லூக் 14:28-32நீதி 14:8நீதி 17:16பிரச 9:10 மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான். நீதி 18:2நீதி 13:161 பேது 4:4பிரச 5:3நீதி 18:6 அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன்னுடைய இடத்தைவிட்டு விலகாதே; சாந்தம் 1 பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும். நீதி 25:15பிரச 8:31 சாமு 25:24-44 நான் சூரியனுக்குக்கீழே பார்த்த ஒரு தீங்கும் உண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தவறே. பிரச 5:13பிரச 6:1பிரச 3:16பிரச 4:1பிரச 4:7பிரச 9:3 மூடர்கள் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். நீதி 28:12நீதி 29:2எஸ்த 3:1சங் 12:81 இராஜா 12:13-14நீதி 28:28நியாயாதி 9:14-20யாக் 2:3-5 வேலைக்காரர்கள் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்கள்போல் தரையிலே நடக்கிறதையும் பார்த்தேன். நீதி 19:10எஸ்த 6:8நீதி 30:22 படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். நீதி 26:27சங் 7:15-16ஆமோ 5:19எஸ்த 7:102 சாமு 17:23ஆமோ 9:3சங் 9:15-16நியாயாதி 9:5 கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் அடிபடுவான். இரும்பு ஆயுதம் மழுங்கலாக இருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைச் செலவிடவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானமே முக்கியம். யாக் 1:5கொலோ 4:5பிரச 10:151 கொரி 14:20எபே 5:15-171 இராஜா 3:9பிரச 9:15-17அப் 6:1-9 தடை செய்யப்படாத பாம்பு கடிக்குமே, கோள்சொல்லுகிறவனும் அதற்கு ஒப்பானவன். எரே 8:17சங் 58:4-5சங் 52:2சங் 64:3யாக் 3:6நீதி 18:21 ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். கொலோ 4:6லூக் 4:22நீதி 15:2நீதி 22:11எபே 4:29நீதி 10:13-14நீதி 10:20-21நீதி 10:31-32 அவன் வாய்மொழிகளின் ஆரம்பம் மதியீனமும், அவனுடைய வாக்குகளின் முடிவு கொடிய பைத்தியமாக இருக்கும். 1 சாமு 25:10-11நீதி 29:91 சாமு 20:26-331 சாமு 22:16-181 சாமு 22:7-82இராஜா 6:272இராஜா 6:312 சாமு 19:41 மூடன் மிகுதியாகப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனிதன் அறியான்; தனக்குப்பிற்பாடு நடக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்? நீதி 15:2பிரச 3:22பிரச 5:3பிரச 6:12பிரச 8:7யாக் 4:13-14யோபு 35:16நீதி 10:19 ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் சோர்வடையச்செய்யும். ஏசா 57:1எரே 50:4-5பிரச 10:3ஏசா 35:8-10சங் 107:4சங் 107:7பிரச 10:10ஆப 2:6 ராஜா சிறுபிள்ளையுமாக 2, பிரபுக்கள் அதிகாலமே சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, உனக்கு ஐயோ, ஏசா 3:12ஏசா 5:11-12ஏசா 3:4-5நீதி 20:1-22 நாளாக 13:7எரே 21:122 நாளாக 36:22 நாளாக 36:5 ராஜா உயர்ந்த குடிமகனுமாகவும், பிரபுக்கள் வெறிக்கச் சாப்பிடாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, நீ பாக்கியமுள்ளது. நீதி 31:4-5உபா 14:26பிரச 10:6-7ஏசா 5:11எரே 30:21நீதி 28:2-3 மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும். நீதி 14:1நீதி 20:4நீதி 24:30-34எபி 6:11நீதி 21:25நீதி 23:212 பேது 1:5-10நீதி 12:24 விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும். சங் 104:151 பேது 4:3பிரச 2:1-2பிரச 7:11-12ஏசா 23:18ஏசா 24:11லூக் 12:19பிலி 4:15-19 ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும். அப் 23:5லூக் 12:2-32இராஜா 6:12பிரச 7:21-22யாத் 22:28ஏசா 8:21லூக் 19:40லூக் 10:40