நீதிமொழிகள் 20

Proverbs 20
அத்தியாயம் 20

தீமையைத் தவிர்த்தல்

திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்; எபே 5:18ஓசி 4:11ஏசா 28:71 கொரி 6:10நீதி 31:4கலா 5:21ஆப 2:15-162 சாமு 11:13

அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்; நீதி 19:12பிரச 10:41 இராஜா 2:23நீதி 8:36ஆமோ 3:8ஓசி 11:10நீதி 16:14-15ஆப 2:10

அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான்.

வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை; நீதி 16:32நீதி 17:14நீதி 19:11எபே 4:32நீதி 14:29நீதி 18:6யாக் 4:1எபே 1:6-8

மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.

சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்; நீதி 10:4நீதி 19:15நீதி 13:4மத் 25:24-28மத் 25:3-102 பேது 1:5-11நீதி 26:13-16நீதி 19:24

அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.

மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது; 1 கொரி 2:11நீதி 18:4சங் 64:6

புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.

மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்; சங் 12:1மத் 6:2லூக் 18:8லூக் 22:33நீதி 27:2லூக் 18:11நீதி 25:14எரே 5:1

உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்?

நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்; சங் 112:2சங் 37:26எரே 32:392 கொரி 1:12அப் 2:393 யோவா 1:3-4நீதி 13:22நீதி 19:1

அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள்.

நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா நீதி 25:5நீதி 20:26நீதி 29:14சங் 99:4சங் 92:91 சாமு 23:3-42 சாமு 23:4ஏசா 32:1

தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான்.

என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன், பிரச 7:201 யோவா 1:8-101 இராஜா 8:46யோபு 14:4யோபு 15:141 கொரி 4:4யாக் 3:2யோபு 25:4

என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்?

வெவ்வேறான நிறைகல்லும், நீதி 11:1நீதி 20:23உபா 25:13-15லேவி 19:35மீகா 6:10-11நீதி 16:11ஆமோ 8:4-7வெளி 21:8

வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.

பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, மத் 7:16லூக் 6:43-44நீதி 21:8லூக் 2:46-47லூக் 1:15சங் 51:5சங் 58:3லூக் 1:66

அதின் செயலினால் வெளிப்படும்.

கேட்கிற காதும், காண்கிற கண்ணும் மத் 13:13-16சங் 94:9சங் 119:18எபே 1:17-18யாத் 4:11அப் 26:18

ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார்.

தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; நீதி 19:15ரோம 12:11நீதி 10:4நீதி 12:11ரோம 13:112 தெச 3:10எபே 5:14யோனா 1:6

கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.

வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; 1 தெச 4:6ஓசி 12:7-8பிரச 1:10

போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.

பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; நீதி 25:12நீதி 8:11நீதி 16:16நீதி 16:24பிரச 12:9-11நீதி 15:7நீதி 3:15ரோம 10:14-15

அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம்.

அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்; நீதி 27:13யாத் 22:26-27நீதி 11:15நீதி 22:26-27நீதி 2:16நீதி 23:27நீதி 5:3நீதி 7:10

அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள்.

வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்; பிரச 11:9நீதி 9:17-18யோபு 20:12-20புலம் 3:15-16எபி 11:25ஆதி 3:6-7நீதி 4:17

பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.

ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்; லூக் 14:31நீதி 15:22நீதி 24:6நியாயாதி 1:1-2நீதி 11:14நியாயாதி 20:182 சாமு 2:26-27நியாயாதி 20:7

நல்யோசனை செய்து யுத்தம்செய்.

தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; நீதி 11:13நீதி 13:3நீதி 18:8ரோம 16:18லேவி 19:16நீதி 24:21நீதி 16:29நீதி 26:20-22

ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே.

தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய யாத் 21:17நீதி 30:11நீதி 30:17உபா 27:16யூதா 1:13லேவி 20:9மத் 15:4நீதி 24:20

தீபம் காரிருளில் அணைந்துபோகும்.

ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது. 1 தீமோ 6:9நீதி 13:22நீதி 28:8ஆப 2:6யோபு 27:16-17நீதி 23:4நீதி 28:20நீதி 28:22

தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; ரோம 12:17-191 தெச 5:15நீதி 24:29நீதி 17:131 பேது 3:9உபா 32:351 பேது 2:23மத் 5:39

யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.

வெவ்வேறான நிறைகற்கள் நீதி 20:10ஓசி 12:7எசேக் 45:10நீதி 11:1ஆமோ 8:5

யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;

கள்ளத்தராசு நல்லதல்ல.

யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்; நீதி 16:9எரே 10:23சங் 25:12சங் 37:23சங் 25:4நீதி 14:8தானி 5:23அப் 17:28

ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி?

பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், பிரச 5:4-6மத் 5:33லேவி 27:9-10எண் 30:2-16லேவி 5:15மல்கி 3:8-10நீதி 18:7லேவி 22:10-15

மனிதனுக்குக் கண்ணியாக இருக்கும்.

ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து, நீதி 20:82 சாமு 12:312 சாமு 4:9-12ஏசா 28:27-28சங் 101:5-8

அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.

மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது; 1 கொரி 2:11எபி 4:12-13யோபு 32:81 யோவா 3:19-21ஆதி 2:7ரோம 2:152 கொரி 4:2-6நீதி 20:30

அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.

தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; நீதி 16:12நீதி 29:14சங் 101:1சங் 26:1ஏசா 16:5நீதி 16:6சங் 21:7சங் 61:7

தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான்.

வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; 1 யோவா 2:14நீதி 16:31லேவி 19:32எரே 9:23-24

முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.

காயத்தின் தழும்புகளும், எபி 12:10நீதி 22:15நீதி 19:25ஏசா 53:5ஏசா 27:9

உள்ளத்தில் உறைக்கும் அடிகளும்,

பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.