யெகோவா சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, மலைகளுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கட்டும். எரே 22:29உபா 32:1மீகா 1:2எசேக் 36:1சங் 50:4உபா 4:26ஏசா 1:2எசேக் 36:8 மலைகளே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, யெகோவாவுடைய வழக்கைக் கேளுங்கள்; யெகோவாவுக்கு அவருடைய மக்களோடு வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலர்களோடு அவர் வழக்காடுவார். ஓசி 12:2ஓசி 4:1ஏசா 1:182 சாமு 22:16உபா 32:22நீதி 8:29சங் 104:52 சாமு 22:8 என் மக்களே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை வருத்தப்படுத்தினேன்? எனக்கு எதிரே பதில் சொல். எரே 2:5ஏசா 43:22-23எரே 2:31சங் 81:13சங் 50:7மீகா 6:5ரோம 3:19ரோம 3:4-5 நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரவழைத்து, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே, ஆரோன், மிரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன். உபா 7:8யாத் 12:51சங் 136:10-112 சாமு 7:23ஆமோ 2:10யாத் 15:20-21யாத் 20:2ஏசா 63:9-12 என் மக்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் செய்த யோசனை இன்னதென்றும், பேயோரின் மகனாகிய பிலேயாம் அவனுக்கு மறுமொழியாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் 1 தொடங்கி கில்கால்வரை நடந்தது இன்னதென்றும், நீ யெகோவாவுடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள். யோசு 5:9-10எண் 25:1நியாயாதி 5:112 பேது 2:15உபா 16:3யோசு 4:19யோசு 24:9-101 யோவா 1:9 என்னத்தைக்கொண்டு நான் யெகோவாவுடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளோடும், ஒருவயதுடைய கன்றுக்குட்டிகளோடும் அவருடைய சந்நிதியில் வரவேண்டுமோ? சங் 51:16-17ரோம 10:2-3சங் 40:6-8அப் 2:37தானி 3:26மத் 19:16மாற் 5:72 சாமு 21:3 ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாக ஓடுகிற பத்தாயிரங்களான ஆறுகளின்பேரிலும், யெகோவா பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்குவதற்காக என் முதற் பிறந்தவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ? 2இராஜா 16:31 சாமு 15:22சங் 51:16ஓசி 6:6சங் 50:92இராஜா 21:62இராஜா 23:102இராஜா 3:27 மனிதனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயம்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடப்பதைத் தவிர வேறே எதைக் யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார். உபா 10:12-13நீதி 21:3கொலோ 3:12எரே 22:3ஓசி 6:61 சாமு 15:22ஏசா 66:21 பேது 3:8
இஸ்ரவேலின் அநீதிக்கான தண்டனை
யெகோவாவுடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள். ஓசி 14:9வெளி 3:19ஏசா 30:27செப்ப 3:22இராஜா 22:11-202 சாமு 21:1ஆமோ 2:5ஆமோ 3:8-15 துன்மார்க்கருடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ? ஆமோ 3:10ஆமோ 8:5-6எரே 5:26-27நீதி 20:10நீதி 21:62இராஜா 5:23-24உபா 25:13-16எசேக் 45:9-12 கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ? ஓசி 12:7லேவி 19:36நீதி 16:11 அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது. ஓசி 7:13ஏசா 1:23எரே 9:8ஏசா 3:8ஏசா 5:7எரே 9:2-6மீகா 2:1-2ரோம 3:13 ஆகையால் நான் உன் பாவங்களுக்காக உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னைப் பலவீனமாக்குவேன் 2. சங் 107:17-18அப் 12:23உபா 28:21-22ஓசி 13:16லேவி 26:16ஓசி 5:9ஏசா 1:5-7ஏசா 6:11 நீ சாப்பிட்டும் திருப்தியடையாமல் இருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; பாதுகாத்தும் நீ தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்திற்கு ஒப்புக்கொடுப்பேன். ஓசி 4:10ஏசா 65:13லேவி 26:26ஆமோ 2:14-16எசேக் 4:16-17எசேக் 5:12ஆகா 1:6ஆகா 2:16 நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சைப்பழங்களையும் ஆலையாடினாலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை. செப்ப 1:13ஆமோ 5:11எரே 12:13உபா 28:38-40ஆகா 1:6ஏசா 62:8-9லேவி 26:20ஏசா 65:21-22 நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய அனைத்துச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டு வருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் மக்களின் நிந்தையைச் சுமப்பீர்கள். எரே 51:511 இராஜா 16:25-33ஏசா 25:8எரே 7:24சங் 44:131 இராஜா 21:25-26எரே 19:81 இராஜா 18:4