யாத்திராகமம் 30

Exodus 30
அத்தியாயம் 30

தூப பீடம், யாத்திரா 37:25-28.

“தூபங்காட்டுவதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும். வெளி 8:3யாத் 37:25-28யாத் 40:5லேவி 4:71 இராஜா 6:202 நாளாக 26:16யாத் 30:10யாத் 30:7-8 அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாக 1இருக்கவேண்டும், அதனுடைய கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும். யாத் 27:2 அதின் மேல்பக்கத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்விளிம்பை உண்டாக்கி, யாத் 25:11யாத் 25:24 அந்த விளிம்பின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்கவேண்டும். யாத் 25:27யாத் 25:12யாத் 25:14யாத் 26:29யாத் 27:4யாத் 27:7 அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளையும் பொன்தகட்டால் மூடவேண்டும். யாத் 25:13யாத் 25:27 சாட்சிப்பெட்டிக்கு முன்பாக இருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்திற்கும் முன்பாக அதை வைக்கவேண்டும். யாத் 25:21-221 நாளாக 28:11யாத் 26:31-35யாத் 29:42-43யாத் 30:36யாத் 40:26யாத் 40:3யாத் 40:5 ஆரோன் காலைதோறும் அதின்மேல் நறுமண தூபம்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும். 1 சாமு 2:281 நாளாக 23:13யாத் 27:20-21லூக் 1:91 சாமு 3:3அப் 6:4யாத் 30:34 உங்களுடைய தலைமுறைதோறும் யெகோவாவுடைய சந்நிதியில் காட்டவேண்டிய நிரந்தர தூபம் இதுவே. எபி 9:241 தெச 5:17யாத் 12:6எபி 7:25ரோம 8:34 அதின்மேல் அந்நிய தூபத்தையோ, தகனபலியையோ, ஆகாரபலியையோ படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம். லேவி 10:1 வருடத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தால் அதின் கொம்புகளின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் வருடத்தில் ஒருமுறை அதின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; அது யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது என்றார். லேவி 16:18எபி 9:22-23யாத் 29:36-37எபி 9:25லேவி 16:29-30லேவி 16:5-6லேவி 23:27எபி 1:3

ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் பாவநிவர்த்திக்கான பணம்

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேலர்களை அவர்கள் எண்ணிக்கையின்படி கணக்குப்பார்க்க, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடி, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் நேரத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் யெகோவாவுக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கவேண்டும். எண் 31:501 நாளாக 27:241 பேது 1:18-19யாத் 38:25-26மத் 20:28சங் 49:71 நாளாக 21:121 நாளாக 21:14 எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா 2; யெகோவாவுக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல். லேவி 27:25எண் 3:47எசேக் 45:12யாத் 38:26மத் 17:24மத் 27:24 எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். எண் 1:20எண் 1:18எண் 1:3எண் 14:29எண் 26:2எண் 32:11 உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திசெய்யும்படி நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தன் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம். எண் 31:50எபே 6:9யாத் 30:12யோபு 34:19லேவி 17:112 சாமு 21:3கொலோ 3:25நீதி 22:2 அந்த பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேலர்கள் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கவேண்டும்; அது யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு, இஸ்ரவேலர்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும் என்றார். நெகே 10:32-33எண் 16:40யாத் 12:14யாத் 38:25-31லூக் 22:19

கழுவும் வெண்கலத்து தொட்டி

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “கழுவுவதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றவேண்டும். யாத் 40:7யாத் 38:81 இராஜா 7:231 இராஜா 7:382 நாளாக 4:14-152 நாளாக 4:2யாத் 40:30-321 யோவா 1:7 அதனிடம் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும். ஏசா 52:11யாத் 40:31-32சங் 26:6எபி 10:221 கொரி 6:9-11எபி 9:10தீத் 3:5யோவா 13:8-10 அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும், யெகோவாவுக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தில் ஆராதனைசெய்ய சேரும்போதும், அவர்கள் சாகாதபடி தண்ணீரினால் தங்களைக் கழுவவேண்டும். 1 நாளாக 13:101 சாமு 6:19அப் 5:5யாத் 12:15எபி 12:28-29லேவி 10:1-3லேவி 16:1-2சங் 89:7 அவர்கள் சாகாதபடி தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவனுடைய சந்ததியார்களுக்கும் நிரந்தர கட்டளையாக இருக்கும் என்றார். யாத் 28:43யாத் 27:21

அபிஷேக தைலம்

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “மேன்மையான நறுமணப்பொருட்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த இடத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் 3 எடையையும், நறுமணப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், எசேக் 27:19உன்னத 4:14எசேக் 27:22எரே 6:20யாத் 37:29நீதி 7:17சங் 45:8உன்னத 1:13 இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து, யாத் 29:40சங் 45:8எசேக் 45:12லேவி 19:36எண் 15:5எண் 3:47 அதினால், பரிமளத்தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளத்தைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டாக்கு; அது பரிசுத்த அபிஷேக தைலமாக இருப்பதாக. யாத் 37:291 நாளாக 9:30யாத் 40:9சங் 133:2சங் 89:20எண் 35:25எபி 1:9 அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், எண் 7:11 யோவா 2:201 யோவா 2:272 கொரி 1:21-22அப் 10:38யாத் 40:9-15ஏசா 61:1லேவி 8:10-12 மேஜையையும், அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூப பீடத்தையும், தகன பலிபீடத்தையும் அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, அவைகள் மகா பரிசுத்தமாக இருக்கும்படி, அவைகளைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாக இருக்கும். யாத் 29:37லேவி 6:18மத் 23:19மத் 23:17 ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும். லேவி 8:12யாத் 28:3யாத் 29:7-37யாத் 40:15லேவி 8:30எண் 3:3 இஸ்ரவேலர்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியது: உங்களுடைய தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்கவேண்டும். யாத் 37:29லேவி 21:10லேவி 8:12சங் 89:20 இது மனிதர்களுடைய சரீரத்தின்மேல் ஊற்றப்படக்கூடாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கும். யாத் 30:25யாத் 30:37-38லேவி 21:10மத் 7:6 இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் ஊற்றுகிறவனும், தன்னுடைய மக்களில் இராதபடி அறுப்புண்டுபோகவேண்டும் என்று சொல் என்றார். யாத் 30:38ஆதி 17:14யாத் 12:15யாத் 12:19யாத் 29:33எபி 10:26-29லேவி 17:4லேவி 17:9

தூபம்

“பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமஎடையாக எடுத்து, யாத் 37:29யாத் 25:6யாத் 30:23லேவி 2:15லேவி 2:1லேவி 24:7லேவி 5:11மத் 2:11 தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, தூய்மையான பரிசுத்த தூபவர்க்கமாக்கி, யாத் 30:25லேவி 2:13யோவா 12:3நீதி 27:9உன்னத 1:3உன்னத 3:6 அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக்கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைக்கவேண்டும்; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாக இருக்கவேண்டும். யாத் 25:22யாத் 16:34யாத் 29:42-43யாத் 30:6லேவி 16:2 இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளக்கூடாது; இது யேகோவாக்கென்று உனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும். யாத் 29:37யாத் 30:32-33லேவி 2:3 இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும் என்றார். யாத் 30:33