எபிரெயர் 10

Hebrews 10
அத்தியாயம் 10

கிறிஸ்துவின் தியாகம்

இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாக இல்லாமல், அவைகளின் நிழலாகமட்டும் இருக்கிறதினால், ஒவ்வொரு வருடமும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருபோதும் பூரணப்படுத்தாது. கொலோ 2:17எபி 8:5எபி 9:11எபி 9:23எபி 7:18-19எபி 9:25எபி 10:11-18எபி 9:8-9 பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டப்பின்பு, இன்னும் பாவங்கள் உண்டு என்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாததினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படும் அல்லவா? ஏசா 43:25மீகா 7:19சங் 103:12ஏசா 44:22எபி 10:17எபி 9:13-14 அப்படி நிறுத்தாததினால், பாவங்கள் உண்டு என்று அவைகளினாலே ஒவ்வொரு வருடமும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. எபி 9:7யாத் 30:10லேவி 16:34லேவி 16:6-11லேவி 23:27-281 இராஜா 17:18லேவி 16:21-22லேவி 16:29-30 அல்லாமலும், காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமுடியாதே. எபி 10:11ஏசா 1:11-15மீகா 6:6-8ரோம 11:271 யோவா 3:5எபி 10:8மாற் 12:33ஆமோ 5:21-22 ஆகவே, அவர் உலகத்திற்கு வந்தபோது: பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சங் 40:6-8ஏசா 1:11ஏசா 7:141 பேது 2:24மத் 1:20-23எபி 10:7கலா 4:4எபி 1:6 சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானது இல்லை என்றீர். எபி 10:4மல்கி 1:10மத் 3:17எபே 5:2லேவி 1:1-6பிலி 4:18சங் 147:11 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். சங் 40:7-8யோவா 4:34யோவா 6:38யோவா 5:30எபி 10:9-10எரே 36:2ஆதி 3:15நீதி 8:31 நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேலே சொன்னதுபோல: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானது இல்லை என்று சொன்னபின்பு: எபி 10:5மாற் 12:33 தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்காக முதலாவதை நீக்கிப்போடுகிறார். எபி 7:18-19எபி 12:27-28எபி 10:7எபி 9:11-14எபி 8:7-13 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேமுறை பலியிடப்பட்டதினாலே, அந்த விருப்பத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறோம். எபி 10:14எபி 10:121 கொரி 6:11எபி 7:27யோவா 17:19எபி 13:12எபி 9:121 கொரி 1:30 அன்றியும், எந்த ஆசாரியனும் தினந்தோறும் ஆராதனை செய்கிறவனாகவும், பாவங்களை ஒருபோதும் நிவர்த்திசெய்யமுடியாத ஒரேவிதமான பலிகளை அநேகமுறை செலுத்திவருகிறவனாகவும் நிற்பான். எபி 10:4எபி 5:1எண் 28:3சங் 50:8-13எபி 10:1எபி 7:27ஏசா 1:11தானி 11:31 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்து, எபி 1:3கொலோ 3:1ரோம 8:34எபி 8:1அப் 2:33-34எபி 9:12 இனித் தம்முடைய எதிரிகளைத் தமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். எபி 1:13சங் 110:1லூக் 20:431 கொரி 15:25மாற் 12:36அப் 2:35மத் 22:44தானி 2:44 ஏனென்றால், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபி 9:14எபி 7:25எபி 10:1எபி 2:11எபி 13:12ரோம 15:16அப் 20:32எபே 5:26 இதைப்பற்றி பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிச்சொல்லுகிறார்; எப்படியென்றால்: எபி 3:72 பேது 1:21வெளி 2:11வெளி 3:6அப் 28:25யோவா 15:261 பேது 1:11-122 சாமு 23:2 அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய கட்டளைகளை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை உரைத்தப்பின்பு, எரே 31:33-34எபி 8:8-12ரோம 11:27 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். எபி 8:12எரே 31:34 இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்திற்காக பலி செலுத்தப்படுவது இல்லை. எபி 10:2எபி 10:14

விசுவாசத்தில் உறுதி

ஆகவே, சகோதரர்களே, நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால், எபே 2:18எபி 9:12எபி 4:16எபே 3:12ரோம 5:2எபி 12:281 யோவா 4:17ரோம 8:15 அந்தவழியாக நுழைவதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறதினாலும், யோவா 14:6யோவா 10:9எபி 9:3எபி 6:19எபி 9:8யோவா 10:7லேவி 16:2மத் 27:51 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான பிரதான ஆசாரியர்கள் ஒருவர் நமக்கு இருக்கிறதினாலும், எபி 2:17எபி 4:14-16எபி 6:20எபி 8:1எபே 2:19-22எபி 3:1எபி 7:26எபி 3:3-6 தீயமனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும், சுத்த தண்ணீரினால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எசேக் 36:25யோவா 3:5எபே 5:261 பேது 3:211 கொரி 6:11எபி 4:16எபி 7:192 கொரி 7:1 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருப்போம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராக இருக்கிறாரே. 1 தெச 5:241 கொரி 1:92 தெச 3:3எபி 6:18தீத் 1:2எபி 3:61 கொரி 10:13வெளி 3:11 மேலும், அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்காக ஒருவரையொருவர் கவனித்து; 1 தெச 5:111 யோவா 3:18எபி 13:1கலா 5:13கொலோ 3:16தீத் 3:81 தெச 3:12-131 தீமோ 6:18 சபை கூடிவருகிறதைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும்; நாட்கள் நெருங்கி வருகிறதை எவ்வளவாகப் பார்க்கிறீர்களோ அவ்வளவாகப் புத்திசொல்லவேண்டும். அப் 2:421 தெச 5:11மத் 18:20எபி 3:13எபி 10:241 கொரி 5:41 தெச 4:18அப் 20:7 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல், 2 பேது 2:20-22எபி 6:4-6யோவா 9:41லூக் 12:47மத் 12:43-45எண் 15:28-311 யோவா 5:16யாக் 4:17 நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும். ஏசா 26:11எபி 2:3செப்ப 1:18எபி 12:25எபி 9:27மத் 13:50நாகூ 1:2எரே 4:4 மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; எபி 2:2உபா 19:15உபா 17:2-132 கொரி 13:1உபா 19:13யோவா 8:17மத் 18:16எண் 15:30-31 தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். எபே 4:30எபி 6:6ஏசா 63:101 கொரி 11:27லூக் 12:10அப் 7:51எபி 2:3மத் 12:31-32 பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம். உபா 32:35-36ரோம 12:19நாகூ 1:2சங் 50:42 கொரி 5:10சங் 135:14சங் 96:13ஏசா 61:2 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே. மத் 10:28லூக் 12:5எபி 12:29ஏசா 33:14சங் 76:7சங் 90:11மத் 16:16எபி 10:27 முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய அதிக போராட்டத்தைச் சகித்தீர்களே. எபி 6:42 தீமோ 2:3-132 தீமோ 4:7-8கலா 3:3-4எபி 12:42 யோவா 1:8அப் 8:1-3பிலி 1:29-30 நிந்தைகளாலும், உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமட்டுமில்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். 1 கொரி 4:9பிலி 4:142 கொரி 12:10எபி 11:36ஏசா 51:7பிலி 1:7சங் 74:221 தெச 2:14 நான் கட்டப்பட்டிருக்கும்போது நீங்கள் என்னைக்குறித்துப் பரிதாபப்பட்டதுமில்லாமல், பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சொத்து உங்களுக்கு உண்டு என்று அறிந்து, உங்களுடைய ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தீர்கள். 1 பேது 1:42 தீமோ 1:16மத் 6:19-20கொலோ 1:5எபே 6:20யாக் 1:2லூக் 12:33மத் 5:11-12 ஆகவே, அதிக பலனைத் தரும் உங்களுடைய தைரியத்தை விட்டுவிடாமல் இருங்கள். 1 கொரி 15:58கலா 6:8-10எபி 3:6லூக் 14:14எபி 11:26எபி 4:14மத் 5:12எபி 3:14 நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது. எபி 12:1சங் 37:7யாக் 5:7-111 கொரி 13:7லூக் 21:19எபி 6:15ரோம 2:7வெளி 14:12 வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் செய்யார். யாக் 5:7-9ஆப 2:3-4லூக் 18:8ஏசா 26:20ஏசா 60:22வெளி 22:202 பேது 3:8மத் 11:3 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவான் என்றால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாக இருக்காது என்கிறார். கலா 3:11ஆப 2:4ரோம 1:17சங் 85:8எபி 6:4-6எசேக் 3:20ஏசா 42:1மத் 13:21 நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாக இருக்காமல், ஆத்துமாவைக் காக்க விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறோம். 1 யோவா 5:51 பேது 1:52 தெச 2:12-14மாற் 16:161 யோவா 5:161 சாமு 15:112 பேது 3:71 தெச 5:9