1 தெசலோனிக்கேயர் 3

1 Thessalonians 3
அத்தியாயம் 3

ஆகவே, நாங்கள் இனிக் காத்திருக்கமுடியாமல், அத்தேனே பட்டணத்தில் தனிமையாக இருப்பது நல்லது என்று நினைத்தோம். அப் 17:151 தெச 3:51 தெச 2:172 கொரி 2:13எரே 20:9எரே 44:222 கொரி 11:29-30 இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் நற்செய்தியில் எங்களுடைய உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். அப் 14:22-23எபே 6:21-22பிலி 2:19-251 கொரி 16:10-122 கொரி 1:12 கொரி 1:192 கொரி 8:23அப் 16:1 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. அப் 14:22ரோம 5:3அப் 9:16யோவா 16:331 கொரி 15:58அப் 21:131 தெச 5:9மத் 10:16-18 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே சம்பவித்ததென்றும் அறிந்திருக்கிறீர்கள். 1 தெச 2:142 கொரி 8:1-21 தெச 2:2அப் 17:132 தெச 1:4-6யோவா 16:1-3அப் 17:1அப் 17:5-9 ஆகவே, நான் இனிப் பொறுத்திருக்கமுடியாமல், எங்களுடைய வேலை வீணாகப்போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தினதுண்டோவென்று, உங்களுடைய விசுவாசத்தை அறியும்படிக்கு அவனை அனுப்பினேன். யாக் 1:13-14மத் 4:32 கொரி 2:11எபே 4:14கலா 1:6-9ஏசா 49:4பிலி 2:161 கொரி 7:5

தீமோத்தேயுவின் உற்சாகப்படுத்தும் அறிக்கை

இப்பொழுது தீமோத்தேயு உங்களிடமிருந்து எங்களிடம் வந்து, உங்களுடைய விசுவாசத்தையும் அன்பையும்குறித்து, நீங்கள் எப்பொழுதும் எங்களை அன்பாக நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாக இருக்கிறீர்கள் என்பதைக்குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே, 1 கொரி 11:2ஏசா 52:71 தெச 1:3அப் 18:5நீதி 25:252 கொரி 7:5-7பிலி 1:81 கொரி 13:13 சகோதரர்களே, எங்களுக்குச் சம்பவித்த எல்லா நெருக்கத்திலும், உபத்திரவத்திலும் உங்களுடைய விசுவாசத்தினாலே உங்களால் ஆறுதல் அடைந்தோம். 2 கொரி 1:42 யோவா 1:41 கொரி 4:9-131 தெச 3:8-92 கொரி 11:23-282 கொரி 7:6-72 தீமோ 3:10-12அப் 17:4-10 நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம். 1 கொரி 16:13கொலோ 1:23வெளி 3:11எபி 10:23எபி 4:14பிலி 1:21அப் 11:23எபே 3:17 மேலும், நம்முடைய தேவனுக்குமுன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாக நன்றி செலுத்துவோம்? 2 கொரி 9:15சங் 96:12-131 தெச 1:2-3சங் 71:14-151 தெச 3:7-82 சாமு 7:18-201 தெச 2:192 சாமு 6:21 உங்களுடைய முகத்தைக் கண்டு, உங்களுடைய விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்படிக்கு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே. 2 கொரி 13:91 தெச 2:17-181 தெச 3:112 கொரி 1:24பிலி 1:25ரோம 1:10-12ரோம 15:30-322 கொரி 1:15 நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக. நீதி 3:5-6மத் 6:322 தெச 2:161 தெச 3:13லூக் 12:32மத் 6:261 யோவா 3:12 தெச 3:5 நாங்கள் உங்களிடம் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக, நீங்களும் ஒருவரிலொருவர் வைக்கும் அன்பிலும் மற்ற எல்லா மனிதர்களிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, பிலி 1:9ரோம 13:81 யோவா 4:7-16மத் 22:392 தெச 1:31 யோவா 3:11-191 தெச 5:15கலா 5:22 இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக. கொலோ 1:221 தெச 5:23எபே 5:271 தெச 2:191 கொரி 1:7-8யூதா 1:141 தெச 4:15யூதா 1:24