இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, சரீரத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுத்தமானவைகளும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடு நிறைவாக்குவோம். 1 தெச 4:71 பேது 2:11யாக் 4:8நீதி 8:13சங் 51:101 யோவா 3:3எசேக் 36:25-262 பேது 1:4-8
பவுலின் சந்தோஷம்
எங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள்; நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை. 2 கொரி 11:92 கொரி 6:12-13அப் 20:331 சாமு 12:3-41 தெச 2:101 தெச 2:3-62 கொரி 1:122 கொரி 12:14-18 உங்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களோடு மரிக்கவும் பிழைக்கவும் எங்களுடைய இருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே. 2 கொரி 6:11-12பிலி 1:8-91 தெச 2:82 கொரி 12:15ரூத் 1:16-171 கொரி 4:14-152 கொரி 11:112 கொரி 13:10 அதிக தைரியத்தோடு உங்களோடு பேசுகிறேன்; உங்களைக்குறித்து அதிகமாக மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான எல்லா உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாக இருக்கிறேன். 2 கொரி 1:42 கொரி 3:12யாக் 1:21 கொரி 1:4கொலோ 1:24பிலி 2:17ரோம 5:31 தெச 2:19 எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிற்கு வந்தபோது, எங்களுடைய சரீரத்திற்கு ஓய்வு இல்லாமல், எல்லாப் பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; வெளியே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. 2 கொரி 2:13உபா 32:251 தெச 3:52 கொரி 11:23-302 கொரி 4:8-12அப் 20:1கலா 4:11யோபு 18:11 ஆனாலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன், தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார். 2 கொரி 1:3-42 தெச 2:16-173 யோவா 1:2-42 கொரி 7:13எரே 31:13ஏசா 12:1ஏசா 57:181 கொரி 16:17-18 அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்களுடைய வாஞ்சையையும், உங்களுடைய வருத்தத்தையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் பார்த்து, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாகச் சந்தோஷப்பட்டேன். 2 யோவா 1:4யூதா 1:32 கொரி 5:2கொலோ 2:5எபி 2:1யாக் 4:9-10யாக் 5:171 தெச 3:6 ஆதலால் நான் கடிதத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்தக் கடிதம் கொஞ்சகாலம் உங்களைத் துக்கப்படுத்தினது என்று பார்த்து நான் வருத்தப்பட்டிருந்தும், இப்பொழுது வருத்தப்படுகிறது இல்லை. யோவா 16:6வெளி 3:192 கொரி 2:2-11யாத் 5:22-23எபி 12:9-11எரே 20:7-92 கொரி 7:112 கொரி 7:6 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக இல்லை, மனம்திரும்புகிறதற்கேற்றத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடி, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. லூக் 15:7எரே 31:18-202 கொரி 13:8-102 கொரி 7:10-11பிரச 7:3சங் 38:182 கொரி 10:8-10சகரி 12:10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு வருத்தப்படுகிறதற்கு ஏதுவாக இல்லாமல் இரட்சிப்பிற்குரிய மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத்தின் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. அப் 3:19அப் 11:182 தீமோ 2:25-262 சாமு 12:13லூக் 18:13லூக் 15:101 இராஜா 8:47-50யோனா 3:10 பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடம் எவ்வளவு வாஞ்சையையும், குற்றம் தீர எவ்வளவு நியாயம் சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கியது. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைக் குற்றமற்றவர்கள் என்று விளங்கப்பண்ணினீர்கள். ரோம 14:181 தீமோ 5:21-222 தீமோ 2:15எபே 5:11சங் 2:111 கொரி 5:131 பேது 2:22 கொரி 7:7 எனவே, நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயம் செய்தவனாலும் இல்லை, அநியாயம் செய்யப்பட்டவனாலும் இல்லை, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற வாஞ்சையை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே அப்படி எழுதினேன். 2 கொரி 2:91 தீமோ 3:52 கொரி 11:112 கொரி 11:282 கொரி 2:172 கொரி 2:3-42 கொரி 7:81 கொரி 5:1-2 இதனால் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதல் அடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம். 2 கொரி 7:61 கொரி 16:131 பேது 3:8ரோம 12:15ரோம 15:321 கொரி 12:261 கொரி 13:5-72 கொரி 2:13 இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாக நான் அவனுடன் சொன்ன எதைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சத்தியமாகச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாகச் சொன்னதும் சத்தியமாக விளங்கினதே. 2 கொரி 7:42 கொரி 1:18-202 கொரி 8:242 கொரி 9:2-42 தெச 1:42 கொரி 10:82 கொரி 7:6 மேலும் நீங்கள் எல்லோரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கும்போது, அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாக இருக்கிறது. பிலி 2:121 யோவா 3:172 கொரி 2:9ஏசா 66:2சங் 119:1202 கொரி 10:5-62 தெச 3:14கொலோ 3:12 எனவே, எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறேன். 2 கொரி 2:3பிலே 1:21பிலே 1:82 தெச 3:4