1 கொரிந்தியர் 16

1 Corinthians 16
அத்தியாயம் 16

பரிசுத்தவான்களுக்கான நன்கொடைப் பணம்

பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் நன்கொடை பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்கு செய்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். 1 யோவா 3:172 கொரி 8:1-92 கொரி 9:12-15ரோம 12:13கலா 2:10ரோம 15:25-26அப் 24:17எபி 6:10 நான் வந்திருக்கும்போது பணம் சேர்க்குதல் இல்லாதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவிற்கு ஏற்றபடி எதையாவது தன்னிடத்திலே சேர்த்துவைக்கவேண்டும். மல்கி 3:9-10அப் 20:7லூக் 16:10உபா 15:11-14உபா 8:182 கொரி 9:3-52 கொரி 8:1-32 கொரி 8:11-15 நான் வரும்போது உங்களுடைய உதவியை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் கடிதங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன். 2 கொரி 8:18-242 கொரி 8:42 கொரி 8:61 கொரி 11:341 கொரி 4:19-21அப் 6:1-6 நானும் அதை நேரில் எடுத்துச்செல்வது தகுதியானது என்று தோன்றினால், அவர்கள் என்னோடுகூட வரலாம். 2 கொரி 8:192 கொரி 8:4ரோம 15:25

பவுலின் திட்டங்கள்

நான் மக்கெதோனியா நாட்டின்வழியாக போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன். அப் 19:211 கொரி 4:192 கொரி 1:15-17அப் 20:1-3 நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழியனுப்பும்படிக்கு, நான் உங்களிடம் சிலநாட்கள் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரைக்கும் இருப்பேன். அப் 15:33 யோவா 1:6-7ரோம 15:241 கொரி 16:112 கொரி 1:16அப் 17:15அப் 20:38அப் 21:5 இப்பொழுது போகிற வழியில் உங்களை சிறிது காலம் சந்தித்துவிட்டுப் போக மனதில்லை; கர்த்தர் உத்தரவு கொடுத்தால் உங்களிடம் வந்து சிலநாட்கள் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன். அப் 18:211 கொரி 4:19யாக் 4:15எரே 10:23ரோம 1:102 கொரி 1:15நீதி 19:21 ஆனாலும் பெந்தெகோஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன். அப் 2:1யாத் 23:161 கொரி 15:32அப் 18:19லேவி 23:15-21 ஏனென்றால், இங்கே பெரிதும் சாதகமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதம் செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். 2 கொரி 2:12அப் 14:27கொலோ 4:3வெளி 3:7-82 கொரி 1:8-101 கொரி 15:32அப் 19:8-10பிலி 3:18 தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடம் பயமில்லாமலிருக்கப்பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய வேலையைச் செய்கிறானே. 1 கொரி 15:581 கொரி 4:171 தெச 3:2பிலி 2:19-22ரோம 16:211 கொரி 16:111 தெச 4:122 கொரி 1:1 ஆனபடியினால் ஒருவனும் அவனை இழிவாக நினைக்காதிருப்பானாக; சகோதரர்களோடுகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடு வழியனுப்பிவையுங்கள். 1 தீமோ 4:12அப் 15:33தீத் 2:151 கொரி 16:101 கொரி 16:61 தெச 4:83 யோவா 1:6லூக் 10:16 சகோதரர்களோடுகூட உங்களிடம் வரும்படி சகோதரனாகிய அப்பொல்லோவை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆனாலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு சமயம் கிடைக்கும்போது வருவான். 1 கொரி 1:121 கொரி 3:51 கொரி 3:22அப் 18:24தீத் 3:4அப் 24:25பிரச 3:1மாற் 6:21 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், துணிவுள்ளவர்களாக இருங்கள், திடன்கொள்ளுங்கள். யோசு 1:9எபே 6:13-18எபே 6:101 கொரி 15:582 கொரி 12:9-10கலா 5:1சங் 27:14பிலி 4:13 உங்களுடைய காரியங்களெல்லாம் அன்போடு செய்யப்படவேண்டும். யோவா 13:34-351 பேது 4:81 தீமோ 1:51 யோவா 4:7-81 கொரி 12:31யோவா 15:17கலா 5:22ரோம 13:8-10 சகோதரர்களே, ஸ்தேவானுடைய குடும்பத்தார் அகாயா நாட்டிலே முதல்கனியானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே. 1 கொரி 1:16ரோம 16:5ரோம 15:251 பேது 4:101 தீமோ 5:102 கொரி 8:42 கொரி 9:1ரோம 12:13 இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாக பிரயாசப்படுகிற மற்ற அனைவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 1 தெச 5:12எபி 13:173 யோவா 1:81 நாளாக 12:181 கொரி 12:281 கொரி 3:91 பேது 5:51 தெச 1:3 ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாக இருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதை அவர்கள் செய்திருக்கிறார்கள். 2 கொரி 11:9பிலி 2:30பிலே 1:13 அவர்கள் என் ஆவிக்கும் உங்களுடைய ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கீகாரம்பண்ணுங்கள். பிலே 1:72 கொரி 7:13ரோம 15:321 தெச 5:12கொலோ 4:8நீதி 25:13நீதி 25:251 தெச 3:6-7

இறுதி வாழ்த்துக்கள்

ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்களுடைய வீட்டிலே கூடுகிற சபையோடுகூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள். அப் 18:21 பேது 1:12 தீமோ 4:19அப் 18:18அப் 18:26அப் 19:10கொலோ 4:15பிலே 1:2 சகோதரர்களெல்லோரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். ரோம 16:161 பேது 5:141 தெச 5:262 கொரி 13:12-13எபி 13:24பிலே 1:23-24பிலி 4:22ரோம 16:21 பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன். கொலோ 4:18கலா 6:112 தெச 3:17பிலே 1:19ரோம 16:22 ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புசெலுத்தாமல்போனால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கவேண்டும், கர்த்தர் வருகிறார். எபே 6:24யோவா 14:211 யோவா 4:191 யோவா 5:12 கொரி 5:14-15எபி 6:10யோவா 8:42மத் 10:37 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ரோம 16:20ரோம 16:23 கிறிஸ்து இயேசுவிற்குள்ளான என்னுடைய அன்பு உங்கள் அனைவரோடும்கூட இருப்பதாக. ஆமென். மத் 6:13வெளி 3:191 கொரி 14:162 கொரி 12:151 கொரி 16:141 கொரி 4:14-152 கொரி 11:11மத் 28:20