சங்கீதங்கள் 50

Psalms 50
சங்கீதம் 50

ஆசாபின் பாடல்.

வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, சங் 113:3யோசு 22:22மத் 25:32ஆமோ 3:8எரே 32:18-191 நாளாக 16:37ஏசா 1:2நெகே 9:6

சூரியன் உதிக்கும்திசை தொடங்கி

அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.

அழகுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். வெளி 21:23சங் 48:2சங் 80:1வெளி 1:16உபா 33:2ஆப 3:3-4ஓசி 5:15ஆப 2:20

நம்முடைய தேவன் வருவார், மவுனமாக இருக்கமாட்டார்; தானி 7:10எண் 16:35லேவி 10:2மத் 3:12மல்கி 4:1சங் 97:3-51 இராஜா 19:11-122 தெச 1:8-9

அவருக்கு முன்பு அக்கினி அழியும்;

அவரைச் சுற்றிலும் மகா புயல் கொந்தளிப்பாக இருக்கும்.

அவர் தம்முடைய மக்களை நியாயந்தீர்க்க உபா 31:28உபா 32:1ஏசா 1:2உபா 30:19உபா 4:26மீகா 6:1-2ஏசா 11:3-4யோவா 5:22-23

உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.

பலியினாலே என்னோடு உடன்படிக்கை செய்த எபி 13:20யாத் 24:3-8மத் 26:28எபி 12:24உபா 33:2-3எபி 9:10-23மத் 24:31சங் 30:4

என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.

வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; சங் 97:6சங் 75:7சங் 89:5வெளி 19:2சங் 9:16ரோம 14:9-122 கொரி 5:10ஆதி 18:25

தேவனே நியாயாதிபதி. (சேலா)

என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, சங் 81:8யாத் 20:2யாத் 19:5-6எரே 2:9எரே 2:4-5சங் 49:1சங் 81:10-121 சாமு 12:22-25

உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்;

நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.

உன்னுடைய பலிகளுக்காக உன்னைக் கடிந்துக்கொள்ளமாட்டேன்; எபி 10:4-10ஓசி 6:6ஏசா 1:11-31சங் 40:6-8சங் 51:16எரே 7:21-23

உன்னுடைய தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

உன்னுடைய வீட்டிலிருந்து காளைகளையும், மீகா 6:6-8அப் 17:25எபி 10:4-6ஏசா 43:23-24சங் 69:31

உன்னுடைய தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை.

எல்லா காட்டு உயிரினங்களும், மலைகளில் ஆயிரமாயிரமாகத் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். எரே 27:5-6சங் 104:14சங் 8:6-8தானி 2:38சங் 104:24-251 நாளாக 29:14-16ஆதி 1:24-25ஆதி 2:19

மலைகளிலுள்ள 1 பறவைகளையெல்லாம் அறிவேன்; மத் 6:26ஆதி 1:20-22யோபு 39:26-30லூக் 12:24எசேக் 14:15-16ஏசா 56:9யோபு 39:13-18மத் 10:29-31

வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

நான் பசியாக இருந்தால் உனக்குச் சொல்லமாட்டேன்; யாத் 19:5உபா 10:14சங் 24:1-21 கொரி 10:26-28யோபு 41:11சங் 115:15-16ஆதி 1:28-30ஆதி 8:17

பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.

நான் எருதுகளின் இறைச்சியை சாப்பிட்டு,

ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?

நீ தேவனுக்கு நன்றிபலியிட்டு, உன்னதமான தேவனுக்கு உன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்தி; எபி 13:15சங் 56:12உபா 23:21சங் 107:21-22சங் 116:12-141 பேது 2:5ஓசி 14:2சங் 76:11

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; சங் 107:28சங் 91:15சங் 34:3-4சங் 107:19சகரி 13:9யாக் 5:13சங் 81:7சங் 107:6-13

நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், ஏசா 29:13சங் 25:14சங் 78:36-38ஏசா 55:6-7ரோம 2:17-24எபி 8:9ஏசா 48:1-22 பேது 2:15

என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

அறிவுறுத்துதலை நீ பகைத்து, என்னுடைய வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். நெகே 9:262 தீமோ 4:3-4நீதி 12:1நீதி 1:28-291 இராஜா 14:92 தெச 2:10-12எரே 8:9நீதி 1:7

நீ திருடனைப் பார்க்கும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; ரோம 1:321 தீமோ 5:22எபி 13:4எபே 5:11-13ஏசா 5:23எரே 5:8-9யோபு 31:9-11லேவி 20:10

விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.

உன்னுடைய வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், சங் 10:7எரே 9:5சங் 52:2-4வெளி 21:8ஏசா 59:3-4யாக் 3:5-9சங் 5:9சங் 55:21

உன்னுடைய நாவு வஞ்சகத்தை வெளிப்படுத்துகிறது.

நீ உட்கார்ந்து உன்னுடைய சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, மத் 10:21லேவி 19:16நீதி 10:18மத் 5:11சங் 31:18வெளி 12:101 தீமோ 3:11லூக் 22:65

உன்னுடைய சொந்த சகோதரனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.

இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாக இருந்தேன், ரோம 2:4-5நீதி 29:1பிரச 12:14ஏசா 57:11சங் 94:7-11பிரச 8:11-12சங் 90:8ஏசா 42:14

உன்னைப்போல நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்;

ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு,

அவைகளை உன்னுடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.

தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; யோபு 8:13ஓசி 4:6சங் 9:17சங் 7:2உபா 32:18ஓசி 13:8எரே 2:32சங் 10:4

இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன்,

ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.

நன்றிபலி செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; சங் 91:16யாக் 3:13சங் 24:4-5சங் 86:12சங் 50:14-15ரோம 12:1சங் 25:14ஏசா 12:2

தன்னுடைய வழியைச் சரிசெய்கிறவனுக்கு

தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.