எரேமியா 5

Jeremiah 5
அத்தியாயம் 5

நீதிசெய்கிறவன் ஒருவனுமில்லை

நியாயஞ்செய்கிற மனிதனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களில் சுற்றிப்பார்த்து, விசாரித்து, அதின் வீதிகளில் தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன். ஆதி 18:23-322 நாளாக 16:9எசேக் 22:30ஏசா 59:14-15ஏசா 59:4மீகா 7:1-2சங் 14:3சங் 53:2-4 அவர்கள்: யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்சொல்கிறார்களே. தீத் 1:16எரே 4:22 தீமோ 3:5ஓசி 10:4ஓசி 4:1-2ஏசா 48:1எரே 7:9லேவி 19:12 யெகோவாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு வலிக்காது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைவிட கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள். எரே 2:30எரே 7:282 நாளாக 16:9ஏசா 9:13செப்ப 3:7எசேக் 3:7-9ஏசா 42:25சங் 11:4-7 அப்பொழுது நான்: இவர்கள் ஏழைகளாமே, இவர்கள் மதியற்றவர்கள்; யெகோவாவுடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்; ஓசி 4:6எரே 8:7ஏசா 28:9-13மத் 11:5ஏசா 27:11எரே 4:22எரே 7:8யோவா 7:48-49 நான் பெரியோர்களிடத்தில் போய், அவர்களுடன் பேசுவேன்; அவர்கள் யெகோவாவுடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்கள் என்று சொன்னேன்; அவர்களோ ஏகமாக நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள். எரே 2:20யாக் 2:5-7அப் 4:26-27ஆமோ 4:1எசேக் 22:25-29எசேக் 22:6-8எரே 6:13லூக் 18:24 ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்திரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது. ஆப 1:8எரே 4:7எசேக் 22:27செப்ப 3:3ஆமோ 5:18-19தானி 7:4தானி 7:6எசேக் 14:16-21 இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள் பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்செய்து, வேசிவீட்டில் கூட்டங்கூடுகிறார்கள். கலா 4:8யோசு 23:7உபா 32:21எரே 2:111 கொரி 8:4செப்ப 1:5உபா 32:15யாக் 4:4 அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய மனைவியின் பின்னால் கனைக்கிறான். எரே 13:272 சாமு 11:2-4உபா 5:18எசேக் 22:11உபா 5:21யாத் 20:14யாத் 20:17ஆதி 39:9 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட மக்களுக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார். எரே 9:9எரே 5:29ஏசா 1:24உபா 32:35உபா 32:43எசேக் 5:13-15எசேக் 7:9ஓசி 2:13 அதின் மதில்கள்மேல் 1 ஏறி அழித்துப்போடுங்கள்; ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் யெகோவாவுடையவைகள் அல்ல. எரே 4:27ஆமோ 9:8எசேக் 12:16ஓசி 1:9எரே 39:8மத் 22:7சங் 78:61-622 நாளாக 36:17 இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம் செய்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 3:20ஏசா 48:8ஓசி 5:7ஓசி 6:7எரே 3:6-11 அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும், 2 நாளாக 36:161 சாமு 6:9உபா 29:19எசேக் 12:22-28ஏசா 28:14-15எரே 14:13-14எரே 23:14-17எரே 28:15-17 தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் யெகோவாவை மறுதலித்தார்கள். எரே 14:15எரே 14:13யோபு 8:2ஓசி 9:7எரே 18:18எரே 20:8-11எரே 28:3யோபு 6:26 ஆகையால் சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை நெருப்பையும், இந்த மக்களை விறகும் ஆக்குவேன், அது இவர்களை அழிக்கும். எரே 23:29எரே 1:9ஓசி 6:5வெளி 11:5-62இராஜா 1:10-14எரே 28:15-17சகரி 1:6 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு தேசத்தைக் கொண்டுவருவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அது பலத்த தேசம், அது பூர்வகாலத்து தேசம், அவர்கள் நீ அறியாத மொழியைப் பேசும் தேசம், அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது. உபா 28:49எரே 4:16ஏசா 28:11ஏசா 33:19ஏசா 5:26எரே 25:9எரே 1:151 கொரி 14:21 திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்புகள் வைக்கும் பைகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள். ஏசா 5:28சங் 5:9ரோம 3:13 அவர்கள் உன் மகன்களும் உன் மகள்களும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சைப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய பாதுகாப்பான பட்டணங்களைப் பட்டயத்தால் வெறுமையாக்குவார்கள். உபா 28:33லேவி 26:16ஓசி 8:14உபா 28:30-31எசேக் 36:4ஆப 3:17-18ஏசா 62:9ஏசா 65:22 ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களை முற்றிலும் அழிக்காதிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 4:27எரே 5:10ரோம 11:1-5எசேக் 11:13எசேக் 9:8 எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினால் செய்தார் என்று நீங்கள் 2 கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து: நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்தில் அந்நிய தெய்வங்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்தில் அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக. 1 இராஜா 9:8-9உபா 28:47-48எரே 22:8-9எரே 13:22எரே 16:13உபா 29:24-28எரே 16:10-112 நாளாக 7:21-22 நீங்கள் யாக்கோபின் வீட்டில் அறிவித்து, யூதாவில் சொல்ல வேண்டியது என்னவென்றால், கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத மக்களே, கேளுங்கள். அப் 28:26எசேக் 12:2ஏசா 6:9-10ரோம 11:8யோவா 12:40எரே 4:22மத் 13:13-15மாற் 8:18 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று யெகோவா சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாக வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ? யோபு 38:10-11சங் 104:9யோபு 26:10உபா 28:58நீதி 8:29சங் 119:120எரே 10:7நாகூ 1:4 இந்த மக்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்செய்து போய்விடுகிறார்கள். எரே 6:28உபா 21:18எபி 3:12ஓசி 11:7சங் 95:10ஓசி 4:8ஏசா 1:5ஏசா 31:6 அந்தந்தப் பருவத்தில் எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லுகிறதில்லை. சங் 147:8ஆதி 8:22யோவே 2:23அப் 14:17எரே 14:22மத் 5:451 இராஜா 17:1ஆமோ 4:7 உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவிடாமல் தடுக்கிறது. ஏசா 59:2சங் 107:34சங் 107:17உபா 28:23-24எரே 2:17-19எரே 3:3புலம் 3:39புலம் 4:22 குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனிதரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் மக்களில் காணப்படுகிறார்கள். நீதி 1:11சங் 64:5எசேக் 22:2-12எரே 18:22சங் 10:9-101 சாமு 19:10-11ஆப 1:14-15ஏசா 58:1 குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி செல்வந்தர்களாகிறார்கள். ஆமோ 8:4-6ஆப 2:9-11ஓசி 12:7-8எரே 9:6மீகா 1:12நீதி 1:11-13வெளி 18:2மீகா 6:10-11 கொழுத்து, அடம்பிடிக்கிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீர்க்கமாட்டார்கள். ஏசா 1:23உபா 32:15எரே 7:6சங் 73:12சகரி 7:101 கொரி 5:1ஆமோ 4:1எசேக் 16:47-52 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட தேசத்திற்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார். எரே 5:9மல்கி 3:5யாக் 5:4எரே 9:9 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்தில் நடந்துவருகிறது. ஓசி 6:10எரே 23:14ஏசா 1:2எரே 2:12 தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் மக்களுக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவில் என்ன செய்வீர்கள்? எசேக் 13:6எரே 14:14மீகா 2:112 தெச 2:9-112 தீமோ 4:3-42 கொரி 11:13-152 பேது 2:1-2உபா 32:29