1 கொரிந்தியர் 11

1 Corinthians 11
அத்தியாயம் 11

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்கள். பிலி 3:171 தெச 1:6எபே 5:1-21 கொரி 4:16எபி 6:12பிலி 2:4-52 தெச 3:9ரோம 15:2-3

ஆராதனை ஒழுங்குமுறைகள்

சகோதரர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினால் உங்களைப் புகழுகிறேன். 2 தெச 2:151 கொரி 4:17நீதி 31:28-311 கொரி 11:171 கொரி 11:221 கொரி 15:22 தெச 3:6லூக் 1:6 ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார் என்றும், பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறார் என்றும், கிறிஸ்துவிற்கு தேவன் தலையாக இருக்கிறார் என்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். ஆதி 3:16கொலோ 1:181 கொரி 3:23கொலோ 3:18எபே 4:151 பேது 3:5-6கொலோ 2:19எபே 5:22-24 ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த ஆணும் தன் தலையை அவமதிக்கிறான். 2 சாமு 15:301 கொரி 11:141 கொரி 12:101 கொரி 12:282 சாமு 19:41 கொரி 14:1-25 ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிற எந்தப் பெண்ணும் தன் தலையை அவமதிக்கிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோல இருக்குமே. உபா 21:12லூக் 2:36அப் 2:171 கொரி 14:34அப் 21:9 பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். உபா 22:5எண் 5:18 ஆணானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாக இருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை; பெண்ணானவள் ஆணுடைய மகிமையாக இருக்கிறாள். 1 கொரி 11:3ஆதி 9:6ஆதி 1:26-27ஆதி 5:1சங் 8:6ஆதி 3:16யாக் 3:9 ஆண் பெண்ணிலிருந்து தோன்றினவனல்ல, பெண்ணே ஆணிலிருந்து தோன்றினவள். 1 தீமோ 2:13ஆதி 2:21-23 ஆண் பெண்ணுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, பெண்ணே ஆணுக்காக சிருஷ்டிக்கப்பட்டவள். ஆதி 2:18ஆதி 2:23-24ஆதி 2:20 ஆகவே, தூதர்களினிமித்தம் பெண்ணானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். ஆதி 24:64-65எபி 1:14மத் 18:10ஆதி 20:16பிரச 5:6 ஆனாலும் கர்த்தருக்குள் பெண்ணில்லாமல் ஆணுமில்லை, ஆணில்லாமல் பெண்ணுமில்லை. கலா 3:281 கொரி 7:10-141 கொரி 12:12-22 பெண்ணானவள் ஆணிலிருந்து தோன்றுகிறதுபோல, ஆணும் பெண்ணிலிருந்து தோன்றுகிறான்; அனைத்தும் தேவனால் உண்டாயிருக்கிறது. ரோம 11:361 கொரி 8:6எபி 1:2-3நீதி 16:4 பெண்ணானவள் தேவனை நோக்கி ஜெபம்செய்யும்போது, தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது முறையாக இருக்குமோ என்று உங்களுக்குள்ளே தீர்மானித்துக்கொள்ளுங்கள். லூக் 12:571 கொரி 10:15யோவா 7:24 ஆண் முடியை நீளமாக வளர்க்கிறது அவனுக்கு அவமானமாக இருக்கிறதென்றும், 2 சாமு 14:261 கொரி 14:35 பெண் தன் முடியை நீளமாக வளர்க்கிறது அவளுக்கு மகிமையாக இருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமுடி அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. ஆனாலும் ஒருவன் வாக்குவாதம்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்டப் பழக்கம் இல்லையென்று அறியவேண்டும். 1 கொரி 7:171 தீமோ 6:3-41 தெச 2:141 கொரி 14:33-34அப் 21:24அப் 21:211 கொரி 16:1

கர்த்தருடைய இராப்போஜனம்

உங்களைப் புகழாமல் இந்த விஷயத்தைக்குறித்து உங்களுக்குக் கட்டளைக் கொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்குரியதாக இல்லாமல், தீமைக்குரியதாக இருக்கிறதே. எபி 10:251 கொரி 11:221 கொரி 14:231 பேது 2:14ஏசா 58:1-41 கொரி 11:21 கொரி 14:26லேவி 19:17 முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று, கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். 1 கொரி 3:31 கொரி 1:10-121 கொரி 5:11 கொரி 6:1 உங்களில் உத்தமர்கள் எவர்களென்று தெரியும்படிக்கு வேறுபாடுகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே. 1 யோவா 2:19தீத் 3:10அப் 20:30உபா 13:3லூக் 17:12 பேது 2:1-2மத் 18:71 தீமோ 4:1-2 நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முதலில் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாக இருக்கிறான், ஒருவன் வெறியாக இருக்கிறான். இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே. 2 பேது 2:13யூதா 1:121 கொரி 10:16-181 கொரி 11:23-25 சாப்பிடுகிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அலட்சியம்செய்து, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழமாட்டேன். நீதி 17:5அப் 20:28யாக் 2:5-61 கொரி 10:321 தீமோ 3:151 கொரி 11:171 கொரி 11:21 தீமோ 3:5 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவென்றால், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, லூக் 22:19-20மத் 26:26-281 கொரி 11:23-25மாற் 14:22-241 கொரி 15:31 தெச 4:2உபா 4:5கலா 1:11-12 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். யோவா 6:53-581 கொரி 11:27-281 கொரி 10:3-41 கொரி 10:16-17யாத் 12:14ஏசா 26:81 கொரி 5:7-8ஏசா 55:1-3 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார். லூக் 22:20எபி 9:15-20எபி 13:202 கொரி 3:61 கொரி 10:162 கொரி 3:141 கொரி 11:27-28 ஆகவே, நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வரும்வரைக்கும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். எபி 9:28வெளி 1:7யோவா 14:31 யோவா 2:28அப் 1:112 பேது 3:10யோவா 21:221 கொரி 15:23 இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான். யோவா 6:511 கொரி 10:21எபி 10:29எண் 9:13லேவி 10:1-3எண் 9:10யோவா 6:63-642 நாளாக 30:18-20 எந்த மனிதனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணவேண்டும். கலா 6:42 கொரி 13:5புலம் 3:40மத் 5:23-241 கொரி 11:31ஆகா 1:5சங் 26:2-7ஆகா 1:7 ஏனென்றால், தகுதியில்லாமல் புசித்து, பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் என்னவென்று நிதானித்து அறியாததினால், தனக்கு நியாயத்தீர்ப்பு வரும்படி புசிக்கவும், பானம்பண்ணவும் செய்கிறான். 1 கொரி 11:271 கொரி 11:241 கொரி 11:301 கொரி 11:32-34பிரச 8:5எபி 5:14யாக் 3:1யாக் 5:12 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதி உள்ளவர்களுமாக இருக்கிறார்கள்; அநேகர் மரணமும் அடைந்திருக்கிறார்கள். வெளி 3:19யாத் 15:26ஆமோ 3:2எண் 20:12சங் 38:1-81 இராஜா 13:21-241 தெச 4:142 சாமு 12:14-18 நம்மைநாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படமாட்டோம். 1 யோவா 1:9சங் 32:3-5வெளி 2:51 கொரி 11:28லூக் 15:18-20வெளி 3:2-3எரே 31:18-20 நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடு தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். எபி 12:5-11நீதி 3:11-12சங் 118:18வெளி 3:19உபா 8:5யோபு 5:17-181 கொரி 11:30எரே 7:28 ஆகவே, என் சகோதரர்களே, நீங்கள் உணவு உண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். நீங்கள் தண்டனைக்கு ஏதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடவேண்டும். மற்றக்காரியங்களை நான் வரும்போது திட்டமாக சொல்லுவேன். 1 கொரி 11:21-221 கொரி 4:191 கொரி 7:171 கொரி 16:2தீத் 1:51 கொரி 16:5