சங்கீதங்கள் 28

Psalms 28
சங்கீதம் 28

தாவீதின் பாடல்.

என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; சங் 143:7சங் 18:2சங் 88:4-6நீதி 1:12சங் 83:1ஏசா 26:4யோபு 33:28வெளி 20:3

நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்;

நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.

நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, சங் 138:2சங் 141:2சங் 140:61 தீமோ 2:8சங் 134:2சங் 5:7தானி 6:101 இராஜா 6:19

என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், சங் 55:21சங் 12:2எரே 9:8-9சங் 26:9மீகா 3:5மத் 25:41நீதி 26:23-26சங் 62:4

தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.

அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; 2 தீமோ 4:14வெளி 22:12சங் 109:17-21வெளி 18:6எசேக் 38:10எஸ்றா 9:13சங் 103:10சங் 2:1-5

அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும்,

அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.

அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், ஏசா 5:12ரோம 1:28யோவா 12:37யோபு 34:26-27சங் 92:4-62 சாமு 7:13சங் 10:51 இராஜா 11:38

அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.

யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; சங் 31:21-22சங் 107:19-22சங் 118:5சங் 66:19-20சங் 69:33-34சங் 116:1-2

அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.

யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; சங் 30:11-12சங் 56:3-4எபே 6:10ஏசா 61:10ஏசா 12:2சங் 40:3சங் 13:5சங் 118:6-9

என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்;

ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது;

என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.

யெகோவா அவர்களுடைய பெலன்; சங் 20:6சங் 140:7ஏசா 61:11 சாமு 16:13சங் 2:2

அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.

தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; ஏசா 40:11சங் 78:71உபா 9:29ஏசா 63:91 இராஜா 8:51எபே 1:18மத் 2:61 இராஜா 8:53

அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.