ஆலோசனைகள்
முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும், லேவி 19:321 பேது 5:5-6கலா 6:1தீத் 2:21 பேது 5:11 தீமோ 5:19-20மத் 23:8தீத் 2:6 முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு. 1 தீமோ 4:12மத் 12:50பிலி 4:81 தீமோ 5:32 தீமோ 2:22யோவா 19:26-271 தெச 5:22 ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு. உபா 27:19அப் 6:1உபா 10:18உபா 14:291 பேது 2:171 தெச 2:61 தீமோ 5:16-171 தீமோ 5:4-5 விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது. எபே 6:1-3யோவா 19:26-27மத் 15:4-6ஆதி 47:121 தீமோ 2:3ஆதி 45:10-11மாற் 7:11-131 சாமு 22:3-4 ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள். 1 தீமோ 5:3லூக் 2:371 கொரி 7:321 பேது 3:51 தீமோ 5:16லூக் 18:1சங் 91:4எபே 6:18 சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள். யாக் 5:5லூக் 15:24வெளி 18:7வெளி 3:1லூக் 15:32எபே 2:1எபே 5:14லூக் 15:13 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு. 1 தீமோ 4:11தீத் 2:152 தீமோ 4:1தீத் 1:131 தீமோ 1:31 தீமோ 6:17 ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான். கலா 6:102 கொரி 12:14லூக் 11:11-13ஏசா 58:7தீத் 1:16மத் 7:112 தீமோ 3:5ஆதி 30:30 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து, 1 தீமோ 3:21 தீமோ 5:11லூக் 2:36-371 கொரி 7:10-111 கொரி 7:39-401 தீமோ 3:121 தீமோ 5:141 தீமோ 5:3-4 குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 1 தீமோ 6:18தீத் 3:8அப் 9:36தீத் 2:7தீத் 3:12 தீமோ 3:17லூக் 7:44மத் 5:16 இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி, 1 தீமோ 5:14ஓசி 13:6யாக் 5:51 கொரி 7:39-40ஏசா 3:161 தீமோ 4:31 தீமோ 5:92 பேது 2:18 முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள். கலா 1:6யாக் 3:11 கொரி 11:341 பேது 4:17வெளி 2:4-5 அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள். நீதி 20:192 தெச 3:6-11நீதி 31:271 பேது 4:15அப் 20:20அப் 20:30யாக் 3:10லேவி 19:16 எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். தீத் 2:51 தீமோ 6:11 கொரி 7:8-9நீதி 31:27-29தீத் 2:81 தீமோ 4:3தானி 6:4எபி 13:4 ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள். 2 பேது 2:2யூதா 1:4-52 பேது 2:20-221 யோவா 2:191 தீமோ 1:202 தீமோ 4:10பிலி 3:18-192 பேது 3:16 விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது. 1 தீமோ 5:3-51 தீமோ 5:8 நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும். எபி 13:171 தெச 5:12-13கலா 6:6லூக் 10:7எபி 13:72 தீமோ 2:6பிலி 2:29ரோம 12:8 போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே. உபா 25:41 கொரி 9:141 கொரி 9:7-10லூக் 10:7மத் 10:10உபா 24:14-15லேவி 19:13யாக் 4:5 மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் குற்றச்சாட்டை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது. மத் 18:16உபா 19:152 கொரி 13:1உபா 17:6தீத் 1:6எபி 10:28அப் 25:16உபா 19:18-19 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவம் செய்தவர்களை எல்லோருக்கும் முன்பாகக் கடிந்துகொள். 2 தீமோ 4:21 தீமோ 1:20உபா 13:11தீத் 1:13அப் 5:11கலா 2:11-14அப் 5:5உபா 19:20 நீ பட்சபாதத்தோடு ஒன்றும் செய்யாமலும், விசாரிப்பதற்குமுன்பு முடிவுபண்ணாமலும், இவைகளைக் காத்துநடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதர்களுக்கும்முன்பாக, உறுதியாகக் கட்டளையிடுகிறேன். 1 தீமோ 6:132 தீமோ 4:12 பேது 2:41 தெச 5:272 கொரி 5:162 தீமோ 2:14யூதா 1:6யாக் 2:1-4 யார்மேலும் சீக்கிரமாகக் கரங்களை வைக்கவேண்டாம்; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தமானவனாகக் காத்துக்கொள். எபே 5:111 தீமோ 3:101 தீமோ 3:61 தீமோ 4:14அப் 6:62 யோவா 1:112 தீமோ 1:62 தீமோ 2:2 நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள். சங் 104:15நீதி 31:4-71 தீமோ 4:41 தீமோ 3:31 தீமோ 3:8எபே 5:18எசேக் 44:21லேவி 10:9-11 சிலருடைய பாவங்கள் வெளிப்படையாக இருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும். 2 தீமோ 4:10அப் 8:182 பேது 2:20-21அப் 1:16-20அப் 5:1-11கலா 5:19-21எரே 2:34 அப்படியே சிலருடைய நல்லசெயல்களும் வெளிப்படையாக இருக்கும்; அப்படி இல்லாதவைகளும் மறைந்திருக்கமுடியாது. நீதி 10:9லூக் 11:33மத் 6:3-6சங் 37:5-61 தீமோ 3:7அப் 10:22அப் 16:1-3அப் 22:12