யாத்திராகமம் 9

Exodus 9
அத்தியாயம் 9

5 வது-ஆடு மாடுகளின் மீதான வாதை

பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு. யாத் 8:1யாத் 10:3யாத் 8:20யாத் 9:13யாத் 3:18யாத் 4:22-23யாத் 5:1 நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்திருந்தால், யாத் 8:2யாத் 10:4யாத் 4:23ஏசா 1:20லேவி 26:14-16லேவி 26:23-24லேவி 26:27-28சங் 68:21 யெகோவாவுடைய கரம் வெளியில் இருக்கிற உன்னுடைய மிருகங்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; பெரிய கொடியதான கொள்ளை நோய் உண்டாகும். யாத் 7:4அப் 13:111 சாமு 5:6-111 சாமு 6:9யாத் 5:3யாத் 8:19 யெகோவா இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியர்களின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்; இஸ்ரவேலுக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை” என்றார். யாத் 8:22யாத் 10:23யாத் 12:13ஏசா 65:13-14மல்கி 3:18 மேலும், நாளைக்குக் யெகோவா இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, யெகோவா ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றும் அவனிடம் சொல் என்றார். யாத் 8:23பிரச 3:1-11யாத் 10:4யாத் 9:18எரே 28:16-17யோபு 24:1மத் 27:63-64எண் 16:5 மறுநாளில் யெகோவா அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியர்களுடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போனது; இஸ்ரவேலர்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை. சங் 78:48யாத் 9:25சங் 78:50யாத் 9:19-20 பார்வோன் விசாரித்து, இஸ்ரவேல் மக்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் மக்களைப் போகவிடவில்லை. யாத் 7:14யாத் 8:32தானி 5:20யாத் 9:12ஏசா 48:4யோபு 9:4நீதி 29:1ரோம 9:18

6 வது-கொடியகொப்புளங்களின் வாதை

அப்பொழுது யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்கள் கைப்பிடி அளவு சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன்பு வானத்திற்கு நேராக தூவட்டும். யாத் 8:16 அது எகிப்து தேசம் முழுவதும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பச்செய்யும்” என்றார். வெளி 16:2உபா 28:27உபா 28:35யோபு 2:7லேவி 13:18-20 அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்திற்கு நேராக தூவினான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்தது. உபா 28:27 அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர்கள் எல்லோர்மேலும் உண்டானதால், அந்தக் கொப்புளங்களினால் மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது. 2 தீமோ 3:8-9ஏசா 47:12-14யாத் 7:11-12யாத் 8:18-19வெளி 16:2 ஆனாலும், யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தபடியே, யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்கவில்லை. யாத் 4:21யாத் 7:13-14சங் 81:11-12வெளி 16:10-11

7 வது-கல்மழையின் வாதை

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ அதிகாலையில் எழுந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு. யாத் 8:20யாத் 7:15யாத் 9:1 விடாமல் இருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படி, இந்தமுறை நான் எல்லாவித வாதைகளையும் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், உன்னுடைய மக்கள்மேலும் அனுப்புவேன். யாத் 8:101 நாளாக 17:201 இராஜா 8:381 சாமு 4:82 சாமு 7:22உபா 28:15-17உபா 28:59-61உபா 29:20-22 நீ பூமியில் இல்லாமல் நாசமாகப்போகும்படி நான் என்னுடைய கையை நீட்டி, உன்னையும் உன்னுடைய மக்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன். யாத் 3:201 இராஜா 13:34யாத் 11:4-6யாத் 12:29-30யாத் 14:28யாத் 9:16யாத் 9:3யாத் 9:6 என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிக்கும்படியும், என்னுடைய நாமம் பூமி முழுவதும் பிரபலமாகும்படியும் உன்னை நிலைநிறுத்தினேன். ரோம 9:17நீதி 16:4சங் 83:17-181 நாளாக 16:24சங் 64:9யாத் 14:17யாத் 14:4யாத் 18:11 நீ என்னுடைய மக்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாக உன்னை உயர்த்துகிறாயா? 1 கொரி 10:22அப் 12:23ஏசா 10:15ஏசா 26:11ஏசா 37:23-24ஏசா 37:29ஏசா 45:9யோபு 15:25-26 எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்த நேரத்தில் பெய்யச்செய்வேன். 1 இராஜா 19:21 இராஜா 20:62இராஜா 7:1யாத் 9:22-25சங் 83:152இராஜா 7:18 இப்பொழுதே ஆள் அனுப்பி, உன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகும்படி அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயர்களின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்” என்றார். ஆப 3:2 பார்வோனுடைய வேலைக்காரர்களில் எவன் யெகோவாவுடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரச்செய்தான். நீதி 13:13நீதி 22:3எபி 11:7யோனா 3:5-6மாற் 13:14-16நீதி 16:16நீதி 22:23 எவன் யெகோவாவுடைய வார்த்தையை மதிக்காமல்போனானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான். 1 நாளாக 22:191 சாமு 4:20தானி 10:12யாத் 7:23எசேக் 40:4யோபு 34:14யோபு 7:17நீதி 24:32

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசம் எங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற எல்லாவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். வெளி 16:21யாத் 7:19யாத் 8:16யாத் 8:5 அப்படியே மோசே தன்னுடைய கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது யெகோவா இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாக ஓடியது; எகிப்து தேசத்தின்மேல் யெகோவா கல்மழையைப் பெய்யச்செய்தார்; யோசு 10:11சங் 18:13எசேக் 38:22ஏசா 30:30சங் 148:8சங் 78:47-48வெளி 8:7சங் 105:32-33 கல்மழையும் கல்மழையோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடியதாக இருந்தது; எகிப்து தேசம் தோன்றிய நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை. யாத் 10:6யாத் 9:23மத் 24:21 எகிப்து தேசம் எங்கும் மனிதர்களையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது. சங் 105:32-33சங் 78:47 இஸ்ரவேலர்கள் இருந்த கோசேன் நாட்டில் மட்டும் கல்மழை பெய்யாமல் இருந்தது. யாத் 11:7யாத் 10:23யாத் 9:4யாத் 12:13யாத் 9:6யாத் 8:22-32ஏசா 32:18-19 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நான் இந்தமுறை பாவம் செய்தேன்; யெகோவா நீதியுள்ளவர்; நானும் என்னுடைய மக்களும் துன்மார்க்கர்கள். 2 நாளாக 12:6யாத் 10:16புலம் 1:18சங் 129:4சங் 145:17தானி 9:14மத் 27:4எண் 22:34 இது போதும்; இந்தப் பெரிய இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்யுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை” என்றான். யாத் 8:8யாத் 10:17யாத் 8:28அப் 8:24யாத் 11:1சங் 29:3-4 மோசே அவனை நோக்கி: “நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடன், என்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி யெகோவாவுடையது என்பதை நீர் அறிவீர். 1 கொரி 10:261 இராஜா 8:221 இராஜா 8:38ஏசா 1:15சங் 143:6உபா 10:141 கொரி 10:282 நாளாக 6:12-13 இருந்தாலும் நீரும் உம்முடைய வேலைக்காரர்களும் இன்னும் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன்” என்றான். ஏசா 26:10நீதி 16:6ஏசா 63:17 அப்பொழுது வாற்கோதுமை கதிர்விட்டும் கொள்ளுப்பயிரானது பூ பூத்திருந்தது; அதினால் கொள்ளும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போனது. ரூத் 1:22ரூத் 2:23ஆமோ 4:9ஆப 3:17 கோதுமையும் கம்பும் கதிர்விடாமல் இருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை. யாத் 10:22 மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமல் இருந்தது. யாத் 9:29யாத் 8:12யாத் 10:18-19யாக் 5:17-18 மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் கண்டபோது, அவனும் அவனுடைய வேலைக்காரர்களும் பின்னும் பாவம்செய்து, தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். யாத் 7:142 நாளாக 28:222 நாளாக 33:232 நாளாக 36:13பிரச 8:11யாத் 4:21யாத் 8:15ரோம 2:4-5 யெகோவா மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் மக்களைப் போகவிடவில்லை. யாத் 4:21