ஆமோஸ் 9

Amos 9
அத்தியாயம் 9

இஸ்ரவேல் அழிக்கப்படுதல்

ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி தூணின் உச்சியை அடித்து, அவைகளை அவர்கள் எல்லோருடைய தலையின்மேலும் விழும்படி உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் வாளால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை. சங் 68:21ஆமோ 3:14ஆப 3:13ஏசா 6:1ஏசா 6:3-4யோவா 1:18வெளி 1:172 நாளாக 18:18 அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; எரே 51:53சங் 139:7-10ஒபதி 1:4எசேக் 28:13-16ஏசா 14:13-16ஏசா 2:19எரே 49:16யோபு 20:6 அவர்கள் கர்மேலின் உச்சியிலே ஒளிந்துகொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் கடலின் ஆழத்திலே போய் என்னுடைய கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன். எரே 16:16ஏசா 27:1எரே 23:23-24யோபு 34:22ஆமோ 1:2சங் 139:9-11 அவர்கள் தங்களுடைய எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட வாளுக்கு நான் கட்டளையிட்டு, என்னுடைய கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன். லேவி 26:33எரே 21:10எரே 44:11உபா 28:63-65எசேக் 5:12எரே 39:16லேவி 17:102 நாளாக 16:9 சேனைகளின் யெகோவாகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போகும்; அப்பொழுது அதின் குடிகள் எல்லோரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாகப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும். ஆமோ 8:8சங் 46:6ஏசா 64:1மீகா 1:3-4வெளி 20:11ஆப 3:10ஓசி 4:3எரே 12:4 அவர் வானத்தில் தமது மேல் அறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழ் அறைகளை அஸ்திபாரப்படுத்தி, கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம். ஆமோ 5:8சங் 104:3ஆமோ 4:13சங் 104:13எரே 5:22யாத் 3:14-15ஆதி 2:1ஆதி 7:11-19 இஸ்ரவேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியர்களின் மக்களைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தர்களைக் கப்தோரிலிருந்தும், சீரியர்களைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ? எரே 47:42இராஜா 16:9உபா 2:23ஆமோ 1:5ஆமோ 2:10எரே 9:25-26ஓசி 12:13ஏசா 20:4 இதோ, யெகோவாகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதை பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 30:11ஆமோ 9:4எரே 44:27எரே 5:101 இராஜா 13:34உபா 4:31உபா 6:15ஆதி 6:7 இதோ, சல்லடையினால் சலித்து அரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா தேசங்களுக்குள்ளும் சலித்து அரிக்கும்படி நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை. லூக் 22:31உபா 28:64ஏசா 30:28லேவி 26:33 தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என்னுடைய மக்களில் சொல்லுகிற பாவிகள் எல்லோரும் வாளால் சாவார்கள். ஆமோ 6:3ஏசா 33:14மத் 13:49-50ஆமோ 6:1பிரச 8:11எசேக் 34:16-17ஏசா 28:14-15ஏசா 5:19

இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுதல்

ஏதோமில் மீதியானவர்களையும், என்னுடைய பெயர் சொல்லிய எல்லா தேசங்களையும் தன்னிடத்தில் சேர்த்துக்கொள்வதற்காக, அப் 15:15-17எரே 33:14-16ஏசா 16:5எரே 23:5-6சங் 80:12எசேக் 17:24ஓசி 3:5ஏசா 63:11 அந்த நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுத்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, ஆரம்பநாட்களில் இருந்ததுபோல அதை நிறுவுவேன் என்று இதைச் செய்கிற யெகோவா சொல்லுகிறார். ஏசா 43:7அப் 15:17ஏசா 65:1தானி 9:18-19ஏசா 63:19எரே 14:9ஏசா 14:1-2எண் 24:17-18 இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சைப்பழங்களை பிழிகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, மலைகள் திராட்சைரசமாக வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று யெகோவா சொல்லுகிறார். யோவே 3:18யோவா 4:35ஏசா 55:13லேவி 26:5ஏசா 35:1-2எசேக் 36:35ஓசி 2:21-23யோவே 3:20 என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளை சாப்பிடுவார்கள். ஏசா 61:4எரே 30:3எரே 30:18எசேக் 28:26எரே 31:28ஏசா 65:21சங் 53:6எசேக் 37:25-28 அவர்களை அவர்களுடைய தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றார். எரே 24:6எசேக் 37:25ஏசா 60:21எசேக் 34:28யோவே 3:20எரே 32:41மீகா 4:4