இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல்.
யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து, எபி 4:13எரே 12:3எரே 17:9-10சங் 44:21சங் 17:3சங் 139:231 நாளாக 28:91 இராஜா 8:39
அறிந்திருக்கிறீர்.
என்னுடைய உட்காருதலையும் மத் 9:42இராஜா 19:27ஏசா 37:28லூக் 9:47சங் 94:11யோவா 2:24-25நீதி 15:3சங் 56:8
என்னுடைய எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்;
என்னுடைய நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; எரே 23:24யோபு 31:4ஆதி 28:10-17நீதி 5:20-212 சாமு 11:272 சாமு 12:9-12பிரச 12:14சங் 121:3-8
என்னுடைய வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.
என்னுடைய நாவில் சொல் உருவாகுமுன்னே, எபி 4:12-13சங் 19:14சங் 50:19-21யோபு 42:3மத் 12:35-37யாக் 1:26எரே 29:23யோபு 42:6-8
இதோ, யெகோவாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.
முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, சங் 34:7உபா 33:27வெளி 1:17யோபு 23:8-9யாத் 24:11யோபு 9:33
உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், ரோம 11:33யோபு 42:3யோபு 11:7-9யோபு 26:14சங் 40:5நீதி 30:2-4சங் 13:1
எனக்கு எட்டாத உயரமுமாக இருக்கிறது.
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? எரே 23:23-24யோனா 1:3யோனா 1:10அப் 5:9
உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; ஆமோ 9:2-4யோபு 34:21-22யோனா 2:2ஒபதி 1:4நீதி 15:11யோபு 26:6எசேக் 28:12-17
நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, சங் 19:6சங் 74:16-17மல்கி 4:2ஏசா 24:14-16சங் 18:10
கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், சங் 23:3ஏசா 41:13சங் 73:23சங் 63:8சங் 143:9-10
உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும். யோபு 12:22எரே 23:24சங் 94:7யோபு 22:12-14சங் 10:11-13ஏசா 29:15
உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; தானி 2:22யோபு 34:22யாத் 20:21எபி 4:13யோபு 26:6யாத் 14:20
இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்;
உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது.
நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; எரே 1:5சங் 119:73ஏசா 44:2யோபு 31:15யோபு 10:9-12சங் 22:9-10சங் 71:6ஏசா 46:3
என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; ஆதி 1:26-27சங் 111:2சங் 104:24சங் 92:4-5சங் 40:5யோபு 5:9வெளி 15:3
உமது செயல்கள் அதிசயமானவைகள்;
அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.
நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பிரச 11:5சங் 139:13யோபு 10:8-11சங் 63:9எபே 4:9யாத் 11:5
பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது,
என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை.
என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது; சங் 56:8மல்கி 3:16வெளி 20:12
என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும்,
அவைகள் உருவேற்படும் நாட்களும்,
உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.
தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; சங் 40:5எரே 29:11ஏசா 55:8-9சங் 92:5சங் 36:7எபே 3:9-10சங் 31:19நீதி 8:31
அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.
அவைகளை நான் எண்ணப்போனால், சங் 3:5சங் 139:3சங் 40:51 தெச 5:10சங் 16:8-11சங் 17:15சங் 63:6-7தானி 12:2
மணலைவிட அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மருகில் இருக்கிறேன்.
தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாக இருக்கும்; சங் 119:115சங் 5:6ஏசா 11:4சங் 6:8சங் 9:172 கொரி 6:17சங் 55:23சங் 64:7
இரத்தப்பிரியர்களே, நீங்கள் என்னை விட்டு அகன்றுபோங்கள்.
அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாகப் பேசுகிறார்கள்; யூதா 1:15யாத் 20:7சங் 74:18ஏசா 37:23ஏசா 37:28-29சங் 2:1-3சங் 73:8-9சங் 74:22-23
உம்முடைய எதிரிகள் உமது பெயரை வீணாக வழங்குகிறார்கள்.
யெகோவாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகைக்காமலும், சங் 119:158சங் 31:6வெளி 2:22 நாளாக 19:2சங் 26:5வெளி 2:6எரே 13:17லூக் 19:41
உமக்கு விரோதமாக எழும்புகிறவர்களை
அருவருக்காமலும் இருப்பேனோ?
முழுப்பகையாக அவர்களைப் பகைக்கிறேன்; லூக் 14:26சங் 101:3-8
அவர்களை எனக்குப் பகைவர்களாக நினைக்கிறேன்.
தேவனே, என்னை ஆராய்ந்து, சங் 26:2யோபு 31:61 பேது 1:7நீதி 17:3உபா 8:2சங் 139:1சகரி 13:9எரே 11:20
என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்;
என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, சங் 143:10எரே 17:9-10சங் 25:8-9சங் 119:32சங் 16:11சங் 5:8நீதி 28:26சங் 143:8
நித்திய வழியிலே என்னை நடத்தும்.