என் ஆத்துமா உயிரை வெறுக்கிறது, யோபு 7:111 இராஜா 19:4எண் 11:15யோபு 9:21யோனா 4:8யோபு 5:15-16யோபு 5:20ஏசா 38:15
நான் என் துயரத்திற்கு எனக்குள்ளே இடங்கொடுத்து,
என் மனவேதனையினாலே பேசுவேன்.
நான் தேவனை நோக்கி: சங் 139:23-24யோபு 9:29சங் 143:21 கொரி 11:31-32யோபு 34:31-32யோபு 8:5-6புலம் 3:40-42புலம் 5:16-17
என்னைக் குற்றவாளியென்று முடிவுசெய்யாதிரும்;
நீர் எதற்காக என்னுடன் வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் செயலை வெறுத்து, ஏசா 64:8யோபு 14:15சங் 138:8எரே 12:1-31 பேது 4:19யோபு 21:16யோபு 22:18யோபு 34:18-19
துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாகப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?
சரீரக்கண்கள் உமக்கு உண்டோ? 1 சாமு 16:7யோபு 9:32லூக் 16:15வெளி 1:14
மனிதன் பார்க்கிறவிதமாகப் பார்க்கிறீரோ?
நீர் என் அக்கிரமத்தைத் தேடிப்பார்த்து, 2 பேது 3:8சங் 90:2-4எபி 1:12சங் 102:24-27யோபு 36:26சங் 102:12
என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,
உம்முடைய நாட்கள் ஒரு மனிதனுடைய நாட்களைப்போலவும், யோபு 14:16எரே 2:34சங் 10:15சங் 44:21செப்ப 1:121 கொரி 4:5யோவா 2:24-25யோபு 10:14-17
உம்முடைய வருடங்கள் ஒரு மனிதனுடைய வாழ்நாளைப்போலவும் இருக்கிறதோ?
நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உபா 32:39தானி 3:15யோவா 10:28-30யோபு 42:7சங் 139:1-21 தெச 2:10ஓசி 2:10யோவா 21:17
உம்முடைய கைக்கு என்னை விடுவிக்கிறவன் இல்லை.
உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், சங் 119:73ஏசா 43:7யோபு 10:3எரே 18:3-10ஆதி 6:6-7
என்னை அழிக்கிறீர்.
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், ஆதி 2:7ஏசா 64:8ஆதி 3:19பிரச 12:7ஏசா 45:9எரே 18:6சங் 25:6-7ரோம 9:21
என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும்.
நீர் என்னைப் பால்போல் ஊற்றி தயிர்போல் உறையச் செய்தீர் அல்லவோ? சங் 139:14-16
தோலையும் சதையையும் எனக்கு அணிவித்து எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இணைத்தீர். எசேக் 37:4-8எபே 4:16யோபு 40:17-182 கொரி 5:2-3
எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; அப் 17:28யோபு 33:4அப் 17:25ஆதி 19:19மத் 6:25
உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றியது.
இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், யோபு 23:13உபா 32:39பிரச 8:6-7எபே 3:11ஏசா 45:15ஏசா 45:7ஏசா 46:9-11யோபு 23:9
இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
நான் பாவம்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, யோபு 7:21சங் 130:3யாத் 34:7யோபு 13:26-27யோபு 9:28எண் 14:18சங் 139:1யோபு 14:16
என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடமாட்டீர்.
நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ, ஏசா 3:11யோபு 9:15யோபு 9:20-21யோபு 10:7ஏசா 6:5மல்கி 3:18சங் 25:18யாத் 3:7
நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்;
அவமானத்தால் நிரப்பப்பட்டேன்;
நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, ஏசா 38:13புலம் 3:10யோபு 5:9ஆமோ 3:8உபா 28:59ஓசி 13:7-8எண் 16:29-30
எனக்கு விரோதமாக உமது அதிசய வல்லமையை விளங்கச் செய்கிறீர்.
நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாக இரட்டிப்பாக்குகிறீர்; யோபு 16:8ரூத் 1:21எரே 48:11யோபு 16:11-16யோபு 19:6-11சங் 55:19செப்ப 1:12
என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கச் செய்கிறீர்;
போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.
நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து பிறக்கவைத்தது என்ன? எரே 20:14-18எரே 15:10யோபு 11:20யோபு 14:10யோபு 3:10-11மத் 26:24
ஒருவரும் என்னைப் பார்க்காமல், நான் அப்பொழுதே இறந்துபோனால் நலமாமே.
நான் ஒருபோதும் இருந்ததுபோல இல்லாமல், சங் 58:8
கர்ப்பத்திலிருந்து கல்லறைக்குக் கொண்டு போகப்பட்டிருப்பேன்.
என் நாட்கள் கொஞ்சமல்லவோ? யோபு 14:1சங் 39:13யோபு 13:21யோபு 7:16-21யோபு 7:6-7யோபு 8:9யோபு 9:25-26சங் 103:15-16
காரிருளும் மரண இருளுமான இருண்ட தேசமும், 2 சாமு 12:23யோபு 16:22யோபு 3:5யோபு 7:8-102 சாமு 14:14யோபு 14:10-14சங் 23:4யோபு 3:13
இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரண மறைவிடமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்திற்கு, நான் போகுமுன்னே,
நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும்” என்றான். சங் 88:12எரே 13:16எரே 2:6யோபு 3:5யோபு 34:22யோபு 38:17லூக் 16:26சங் 23:4