சங்கீதங்கள் 35

Psalms 35
சங்கீதம் 35

தாவீதின் பாடல்.

யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, சங் 43:1எரே 51:36சங் 119:154ஏசா 49:25நீதி 23:11நீதி 22:23புலம் 3:58அப் 5:39

என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும்.

நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து, சங் 91:4யாத் 15:3ஏசா 42:13உபா 32:41-42ஏசா 13:5சங் 7:12-13

எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.

என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நின்று, ஈட்டியை ஓங்கி அவர்களை வழிமறித்து: ஏசா 12:2சங் 27:2சங் 51:12சங் 91:16ஏசா 8:9-101 சாமு 23:26-27அப் 4:28ஆதி 49:18

நான் உன்னுடைய இரட்சிப்பு என்று என்னுடைய ஆத்துமாவுக்குச் சொல்லும்.

என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; சங் 70:2-3எரே 46:5சங் 35:26சங் 38:12சங் 31:17-18சங் 129:5சங் 40:14-15சங் 71:24

எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் அவமானமடைவார்களாக.

அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக; யோபு 21:18ஏசா 29:5அப் 12:23யாத் 14:19எபி 11:28ஓசி 13:3ஏசா 17:13ஏசா 37:36

யெகோவாவுடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.

அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாக இருப்பதாக; எரே 23:12சங் 73:18எரே 13:16நீதி 4:19

யெகோவாவுடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.

காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; யோவா 15:25சங் 140:5சங் 9:15யோபு 18:8சங் 25:3சங் 69:4சங் 119:85சங் 7:3-5

காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.

அவன் நினைக்காத அழிவு அவனுக்கு வந்து, அவன் மறைவாக வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்; சங் 141:9-10லூக் 21:34நீதி 5:22சங் 9:151 தெச 5:3ஏசா 47:11சங் 57:61 சாமு 18:17

அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக.

என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து, ஏசா 61:10லூக் 1:46-47சங் 48:11சங் 58:10-111 சாமு 2:1கலா 5:22ஆப 3:18பிலி 3:1-3

அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.

ஒடுக்கப்பட்டவனை, அவனிலும் பலவானுடைய கைக்கும், யாத் 15:11சங் 109:31சங் 140:12சங் 51:8சங் 71:19சங் 86:8சங் 18:17சங் 10:14

ஏழையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கு ஒப்பானவர் யார் யெகோவாவே,

என்று என்னுடைய எலும்புகளெல்லாம் சொல்லும்.

கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள். சங் 27:12மத் 26:59-601 சாமு 24:9அப் 6:131 சாமு 25:10அப் 24:12-13அப் 24:5-6

நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; யோவா 10:32எரே 18:20சங் 38:20லூக் 23:21-23நீதி 17:13சங் 109:3-51 சாமு 20:31-331 சாமு 19:15

என்னுடைய ஆத்துமா சோர்ந்து போகச்செய்யப்பார்க்கிறார்கள்.

அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; சங் 69:10-11யோபு 30:25மத் 5:44ஏசா 58:5லேவி 16:31மத் 10:13லூக் 10:6ரோம 12:14-15

நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்;

என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை.

நான் அவனை என்னுடைய நண்பனாகவும் லூக் 19:41-422 சாமு 1:11-12ஆதி 24:672 சாமு 1:17-27சங் 38:6

சகோதரனாகவும் நினைத்து நடந்துகொண்டேன்;

தாய்க்காகத் துக்கப்படுகிறவனைப்போல்

துக்கஉடை அணிந்து தலைகவிழ்த்து நடந்தேன்.

ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது எரே 20:10மாற் 14:65மத் 27:27-30மத் 27:39-44சங் 7:2சங் 71:10-111 கொரி 13:6அப் 17:5

அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்;

அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி,

ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள்.

அப்பத்திற்காக வஞ்சகம் பேசுகிற பரியாசக்காரர்களோடு புலம் 2:16யோபு 16:9சங் 37:12அப் 7:54யோவா 18:281 கொரி 5:81 சாமு 20:24-42ஏசா 1:14-15

சேர்ந்துகொண்டு என்மேல் பற்கடிக்கிறார்கள்.

ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? ஆப 1:13சங் 22:20-21சங் 57:4சங் 74:9-10சங் 89:46சங் 94:3-4சங் 10:14சங் 13:1-2

என்னுடைய ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும்.

மகா சபையிலே உம்மைத் துதிப்பேன், எபி 2:12சங் 22:22-25ஏசா 25:3சங் 116:14சங் 116:18சங் 67:1-4சங் 117:1-2சங் 138:4-5

திரளான மக்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன்.

வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், யோவா 15:25சங் 69:4நீதி 6:13சங் 13:4சங் 38:19நீதி 10:10யோவா 16:20-22சங் 109:3

காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள்

கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.

அவர்கள் சமாதானமாகப் பேசாமல், மத் 26:41 பேது 2:22-23எரே 11:19அப் 23:15அப் 25:3தானி 6:5மத் 12:19மத் 12:24

தேசத்திலே அமைதலாக இருக்கிறவர்களுக்கு விரோதமாக வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.

எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாகத் திறந்து, லூக் 11:53-54சங் 22:13சங் 40:15சங் 70:3சங் 54:7ஏசா 9:12

ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.

யெகோவாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாக இருக்கவேண்டாம்; யாத் 3:7சங் 10:1சங் 28:1ஏசா 65:6சங் 22:11சங் 38:21சங் 71:12சங் 22:19

ஆண்டவரே, எனக்குத் தூரமாகாமலிரும்.

என் தேவனே, என் ஆண்டவரே, சங் 44:23சங் 7:6சங் 59:4சங் 89:26ஏசா 51:9யோவா 20:28சங் 142:5சங் 80:2

எனக்கு நியாயஞ்செய்யவும் என்னுடைய வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்.

என் தேவனாகிய யெகோவாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், சங் 43:1சங் 26:1சங் 7:82 தெச 1:6சங் 35:191 பேது 2:22யோபு 20:5சங் 18:20-24

என்னைக்குறித்து அவர்களை மகிழவிடாமலிரும்.

அவர்கள் தங்களுடைய இருதயத்திலே: புலம் 2:16மத் 27:43சங் 124:31 கொரி 15:542 சாமு 20:19யாத் 15:9யோபு 1:5மாற் 2:6

ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும்,

அவனை 1என்று பேசாதபடிக்கும் செய்யும்.

எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷப்படுகிறவர்கள் ஒன்றாக வெட்கி அவமானப்பட்டு, யோபு 8:22சங் 38:16யோபு 19:5சங் 132:18ஏசா 41:111 பேது 5:5தானி 11:36ஏசா 65:13-15

எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும்

அவமானத்தாலும் மூடப்படவேண்டும்.

என்னுடைய நீதி தெரியவேண்டுமென்று விரும்புகிறவர்கள் எரே 32:40-41சங் 149:4சங் 40:16செப்ப 3:17நீதி 8:18சங் 70:4சங் 142:7சங் 147:11

கெம்பீரித்து மகிழ்ந்து,

தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற யெகோவாவுக்கு மகிமை

உண்டாவதாக என்று எப்போதும் சொல்லட்டும்.

என் நாவு உமது நீதியையும், சங் 145:21சங் 71:24சங் 145:5சங் 51:14-15சங் 104:33-34சங் 34:1சங் 50:15சங் 71:15

நாள்முழுவதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.