(இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.)
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? மாற் 15:34மத் 27:46எபி 5:7சங் 22:16யோபு 3:24லூக் 24:44சங் 10:1சங் 43:1-5
எனக்கு உதவி செய்யாமலும்,
நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காமலும் ஏன் தூரமாக இருக்கிறீர்?
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், லூக் 18:7சங் 42:3லூக் 22:41-46சங் 55:16-17சங் 88:11 தெச 3:102 தீமோ 1:3புலம் 3:44
பதில் கொடுக்கவில்லை;
இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதி இல்லை.
இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர். உபா 10:21சங் 50:23ஏசா 6:3வெளி 4:8சங் 99:9சங் 65:1சங் 145:17
எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; யாத் 14:31யாத் 14:13-14ஆதி 15:6ஆதி 32:28எபி 11:8-32ரோம 4:18-22சங் 44:1-71 சாமு 7:9-12
நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; ரோம 10:11ஏசா 49:231 பேது 2:6ரோம 9:33ஏசா 45:17நியாயாதி 10:10-16நியாயாதி 6:6சங் 106:44
உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாமல் இருந்தார்கள்.
நானோ ஒரு புழு, மனிதன் அல்ல; ஏசா 53:3யோபு 25:6ஏசா 41:14ஏசா 49:7சங் 69:7-12சங் 69:19-20மத் 11:19மத் 27:20-23
மனிதர்களால் நிந்திக்கப்பட்டும்,
மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து, மாற் 15:29மத் 27:39-40லூக் 23:11சங் 109:25மத் 26:66-68மத் 27:29மாற் 15:20ஏசா 53:3
உதட்டைப் பிதுக்கி, தலையை அசைத்து:
யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே, மத் 27:42-43மாற் 15:30-32சங் 91:14நீதி 16:3சங் 18:19ஏசா 42:1மத் 17:5மத் 3:17
அவர் இவனை விடுவிக்கட்டும்;
இவன்மேல் பிரியமாக இருக்கிறாரே,
இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள்.
நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; சங் 71:6ஏசா 49:1-2சங் 71:17சங் 139:15-16மத் 2:13-15ஏசா 9:6ஏசா 7:14-15வெளி 12:4-5
என்னுடைய தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாக இருக்கச்செய்தீர்.
கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; கலா 1:15எரே 1:5ஏசா 49:1ஏசா 46:3-4யோவா 20:17லூக் 2:40லூக் 2:52
நான் என்னுடைய தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாக இருக்கிறீர்.
என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்; சங் 71:12எபி 5:7யோவா 16:32சங் 10:1சங் 72:12சங் 38:21சங் 142:4-6சங் 35:22
ஆபத்து நெருங்கியிருக்கிறது,
உதவி செய்ய யாரும் இல்லை.
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; அப் 4:27ஆமோ 4:1-3சங் 68:30மத் 27:1உபா 32:14-15எசேக் 39:18எரே 50:11ஏசா 34:7
பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.
பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், 1 பேது 5:8சங் 35:21யோபு 16:10புலம் 2:16புலம் 3:46மத் 26:3-4மத் 26:59-65சங் 17:12
என்மேல் தங்களுடைய வாயைத் திறக்கிறார்கள்.
தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; தானி 5:6யோபு 30:16சங் 22:17சங் 31:10யோபு 23:16யோவா 12:27யோசு 7:5லூக் 22:44
என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன,
என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி,
என்னுடைய குடல்களின் நடுவே உருகினது.
என் பெலன் 1 ஓட்டைப்போல் காய்ந்தது; யோவா 19:28சங் 69:3சங் 69:21ஏசா 53:12சங் 104:29சங் 32:3-4சங் 38:101 கொரி 15:3
என் நாவு மேல்வாயோடு ஒட்டிக்கொண்டது;
என்னை மரணத்தூசியிலே போடுகிறீர்.
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; யோவா 19:37சகரி 12:10மத் 27:35யோவா 20:25யோவா 19:23யோவா 19:34மாற் 15:24யோவா 20:27
பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது;
என்னுடைய கைகளையும் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; லூக் 23:35யோபு 33:21மத் 27:39-41ஏசா 52:14லூக் 23:27மாற் 15:29-32சங் 102:3-5மத் 27:36
அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, மத் 27:35லூக் 23:34யோவா 19:23-24மாற் 15:24
என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.
ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; சங் 22:11சங் 40:13சங் 40:17சங் 10:1சங் 21:1சங் 18:1சங் 70:5சங் 69:13-18
என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும்.
என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும், சங் 35:17சகரி 13:7சங் 17:13
எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்கும் தப்புவியும்.
என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; 2 தீமோ 4:171 பேது 5:8அப் 4:27யோவா 14:30எண் 23:22ஏசா 34:7யோவா 8:59அப் 5:30-32
நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும் 2.
உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து, எபி 2:11-12மத் 12:48-49ரோம 8:29மத் 28:10சங் 40:9-10சங் 71:18-19மத் 25:40சங் 22:25
சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, சங் 135:19-20வெளி 15:4சங் 107:1-2லூக் 1:50சங் 50:231 கொரி 6:19-20சங் 115:111 நாளாக 16:8-13
அவரைத் துதியுங்கள்;
யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்;
இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள்.
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும், எபி 5:7ஏசா 50:6-9சங் 116:3-6சங் 118:5லூக் 23:46சங் 34:6சங் 69:29-34சங் 22:6
அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து,
தம்மை நோக்கி அவன் கூப்பிடும்போது அவனைக் கேட்டருளினார்.
மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்; சங் 35:18சங் 40:9-10சங் 111:1சங் 116:14-19சங் 66:13சங் 22:22சங் 56:12பிரச 5:4-5
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; சங் 69:32ஏசா 65:13சங் 40:16சங் 105:3-4ஏசா 25:6யோவா 6:48-58சங் 107:9யோவா 4:14
யெகோவாவை தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்;
உங்களுடைய இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; சங் 86:9ஏசா 45:22வெளி 7:9-12சங் 2:8ஏசா 49:6வெளி 15:4சங் 72:11சங் 96:7
தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் 3 சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர். சகரி 14:9சங் 47:7-8தானி 7:14வெளி 11:15ஒபதி 1:21மத் 6:13
பூமியின் செல்வந்தர் அனைவரும் 4 பணிந்துகொள்வார்கள்; பிலி 2:10ஏசா 26:19யோவா 11:25-26சங் 113:7சங் 45:12ஏசா 45:23வெளி 20:12-15ரோம 14:10-12
புழுதியில் இறங்குகிறவர்கள் அனைவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள்.
ஒருவனும் தன்னுடைய ஆத்துமா அழியாதபடி அதைக் காக்க முடியாதே.
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; 1 பேது 2:9எபி 2:13கலா 3:26-29சங் 102:28ஏசா 53:10மத் 3:9சங் 14:5சங் 24:6
தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று சங் 78:6சங் 86:9ரோம 1:17ஏசா 44:3-5சங் 102:18சங் 145:4-7சங் 40:92 கொரி 5:21
பிறக்கப்போகிற மக்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.