குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம்.
யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; சங் 30:8சங் 57:1சங் 141:11 நாளாக 4:101 சாமு 24:3சங் 77:1-2சங் 28:2சங் 32:1
யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; ரோம 8:26ஏசா 26:16பிலி 4:6-7எபி 5:7சங் 62:81 சாமு 1:15-16சங் 102:1-28சங் 18:4-6
அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, சங் 140:5சங் 141:9எரே 18:22மாற் 14:33-36சங் 139:2-4சங் 143:4சங் 61:2யோபு 23:10
நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்;
நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், எரே 30:17சங் 31:11சங் 88:18யோபு 19:13-19மத் 26:561 சாமு 27:12 தீமோ 4:16சங் 69:20
என்னை அறிவார் ஒருவரும் இல்லை;
எனக்கு அடைக்கலமில்லாமற் போனது;
என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; 2 தீமோ 4:17சங் 16:5சங் 27:13யோவா 16:32புலம் 3:24சங் 73:26சங் 91:2சங் 91:9-10
நீரே என் அடைக்கலமும்,
உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.
என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், சங் 79:8சங் 116:6சங் 136:23சங் 17:11 சாமு 24:14சங் 143:7சங் 18:17சங் 3:1
நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;
என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும்,
அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.
உமது பெயரை நான் துதிக்கும்படி, சங் 143:11சங் 146:7சங் 7:6-7சங் 13:6அப் 2:24ஏசா 61:1யாக் 5:11சங் 9:14
என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்;
எனக்கு நீர் தயவு செய்யும்போது
நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.