தாவீதின் நன்றிப்பாடல்.
ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, சங் 47:6-8சங் 34:1சங் 45:6மத் 25:34சங் 30:12தானி 4:37சங் 44:4வெளி 19:16
உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.
நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, வெளி 7:15சங் 71:6சங் 119:164சங் 72:15
எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; சங் 147:5ரோம 11:33யோபு 5:9ஏசா 40:28யோபு 9:10சங் 139:6சங் 48:1சங் 96:4
அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி, சங் 71:18சங் 78:3-7உபா 6:7ஏசா 38:19யோசு 4:21-24சங் 44:1-2யாத் 12:26-27யாத் 13:14-15
உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், ஏசா 12:4சங் 119:27சங் 72:18தானி 4:1-3தானி 4:37சங் 104:1-2சங் 105:2சங் 40:9-10
உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன்.
மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; ஆப 2:14தானி 3:28-29சங் 107:31-32சங் 113:3சங் 126:2-3சங் 22:27சங் 22:31எரே 50:28
உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, ஏசா 63:7சங் 36:102 கொரி 9:11-12சங் 51:14சங் 71:15-16ஏசா 45:24-25சங் 71:19சங் 72:1-3
உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
யெகோவா இரக்கமும் மன உருக்கமும், எண் 14:18சங் 103:8சங் 86:5சங் 100:5சங் 116:5மீகா 7:18-20சங் 86:15ரோம 5:20-21
நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்; நாகூ 1:7சங் 100:5மத் 5:45யோனா 4:11அப் 17:25சங் 104:27சங் 65:9-13சங் 36:6-7
அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது.
யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; சங் 19:1சங் 103:221 பேது 2:9ஏசா 43:20-21சங் 148:1-14வெளி 7:9-121 பேது 2:5எபி 13:15
உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள்.
மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், 1 நாளாக 29:11-12ஏசா 9:6-7சங் 45:6-7சங் 93:1-2தானி 7:13-14வெளி 11:15-17ஏசா 24:23ஏசா 33:21-22
உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, வெளி 12:10சங் 105:1மத் 28:18சங் 105:5சங் 98:1அப் 2:8-11தானி 4:34-35எபே 1:19-21
உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், 1 தீமோ 1:17தானி 7:14ஏசா 9:7சங் 10:16வெளி 11:15தானி 2:441 கொரி 15:21-282 பேது 1:11
உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, சங் 146:8சங் 37:24சங் 94:18லூக் 22:31-32சங் 119:117லூக் 13:11-13சங் 42:5சங் 38:6
மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.
எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; சங் 136:25சங் 104:27அப் 17:25மத் 6:26சங் 147:8-9யோபு 38:39-41லூக் 12:24ஆதி 1:30
ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.
நீர் உமது கையைத் திறந்து, சங் 104:28சங் 107:9சங் 132:15யோபு 38:27
எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், உபா 32:4செப்ப 3:5சங் 103:6ஏசா 45:21சங் 116:5ரோம 3:25-26சங் 50:6சங் 89:14
தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார்.
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், எரே 29:12-13சங் 34:18உபா 4:7யோவா 4:24ஏசா 58:91 யோவா 3:20-22யாக் 4:8யோவா 14:23
உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும்,
யெகோவா அருகில் இருக்கிறார்.
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, சங் 37:4எபே 3:16-20யோவா 15:7மத் 5:61 யோவா 5:15சங் 91:15யோவா 16:24யோவா 15:16
அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு,
அவர்களைப் பாதுகாக்கிறார்.
யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி, யாத் 20:6யோவா 10:27-29ரோம 8:28-30சங் 97:10சங் 31:23சங் 1:6சங் 9:17சங் 9:5
துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார்.
என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக; சங் 71:8சங் 51:15சங் 150:6சங் 117:1-2சங் 145:1-2சங் 30:12சங் 71:15சங் 71:23-24
மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை
எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.