1 நாளாகமம் 22

1 Chronicles 22
அத்தியாயம் 22

அப்பொழுது தாவீது: தேவனாகிய யெகோவாவுடைய ஆலயம் இருக்கும் இடம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் இடமும் இதுவே என்றான். 2 நாளாக 3:11 நாளாக 21:18-28ஆதி 28:172 நாளாக 6:5-62இராஜா 18:222 சாமு 24:182 நாளாக 32:12உபா 12:11

ஆலயத்திற்கான ஆயத்தம்

பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய தேசத்தார்களைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கான கற்களை வெட்டிப் பயன்படுத்தும் கொத்தனார்களை ஏற்படுத்தினான். 1 இராஜா 5:17-181 இராஜா 9:20-212 நாளாக 2:171 நாளாக 14:11 இராஜா 6:71 இராஜா 7:9-122 நாளாக 8:7-82இராஜா 12:12 தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் அதிகமான இரும்பையும், எடைபோட முடியாத ஏராளமான வெண்கலத்தையும், 1 நாளாக 22:141 நாளாக 29:21 இராஜா 7:471 நாளாக 29:72 நாளாக 4:18எரே 52:20 எண்ணமுடியாத அளவு கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியர்களும், தீரியர்களும் தாவீதுக்கு அதிகமான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். 1 இராஜா 5:6-102 நாளாக 2:32 சாமு 5:11எஸ்றா 3:7 தாவீது: என்னுடைய மகனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாக இருக்கிறான்; யெகோவாவுக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் புகழும் மகிமையும் உடையதாக விளங்கும்படி மிகப்பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேமிக்க செய்யவேண்டும் என்று சொல்லி, தாவீது தன்னுடைய மரணத்திற்கு முன்னே அதிகமாக ஆயத்தம் செய்துவைத்தான். 1 நாளாக 29:11 இராஜா 3:7யோவா 13:1யோவா 3:301 இராஜா 9:82 நாளாக 13:72 நாளாக 2:52 நாளாக 7:21 அவன் தன்னுடைய மகனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயத்தைக் கட்டுவதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து, 1 தீமோ 5:211 தீமோ 6:13-172 தீமோ 4:1அப் 1:2அப் 20:25-31உபா 31:14உபா 31:23மத் 28:18-20 சாலொமோனை நோக்கி: என்னுடைய மகனே, நான் என்னுடைய தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என்னுடைய இருதயத்தில் நினைத்திருந்தேன். சங் 132:51 இராஜா 8:16-202 நாளாக 6:7-9உபா 12:11உபா 12:51 நாளாக 17:1-151 நாளாக 28:2-211 நாளாக 29:3 ஆனாலும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ அதிகமான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைச் செய்தாய்; நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தச்செய்தாய். 1 நாளாக 28:31 இராஜா 5:31 நாளாக 17:4-102 சாமு 7:5-11எண் 31:24எண் 31:20 இதோ, உனக்குப் பிறக்கப்போகிற மகன் அமைதியுள்ள ஆண்மகனாக இருப்பான்; சுற்றி இருக்கும் அவனுடைய எதிரிகளையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவனுடைய பெயர் சாலொமோன் என்னப்படும்; அவனுடைய நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமைதியையும் கொடுப்பேன். 1 இராஜா 4:251 இராஜா 4:201 இராஜா 5:42 சாமு 12:24-25ஏசா 9:6-71 நாளாக 17:111 நாளாக 28:5-72 சாமு 7:12-13 அவன் என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்கு தகப்பனாக இருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார். எபி 1:51 நாளாக 17:12-142 சாமு 7:13-141 இராஜா 5:5ஏசா 9:7சங் 89:26சகரி 6:12-131 நாளாக 28:6-7 இப்போதும் என்னுடைய மகனே, நீ பாக்கியவானாக இருந்து, யெகோவா உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனே இருப்பாராக. 1 நாளாக 22:161 நாளாக 28:202 தீமோ 4:22ஏசா 26:12மத் 1:23மத் 28:20ரோம 15:33 யெகோவா உனக்கு ஞானத்தையும் உணர்வையும் கொடுத்து, உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக. யாக் 1:51 இராஜா 3:9-122 நாளாக 1:10நீதி 14:81 யோவா 2:3உபா 4:6லூக் 21:15நீதி 2:6-7 யெகோவா இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த கட்டளைகளையும் சட்டங்களையும் செய்ய நீ கவனமாக இருந்தால் பாக்கியவானாக இருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாக இரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு. 1 நாளாக 28:20யோசு 1:6-91 நாளாக 28:7எபே 6:101 இராஜா 2:31 நாளாக 28:102 தீமோ 2:1உபா 31:6-8 இதோ, நான் என்னுடைய சிறுமையிலே யெகோவாவுடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், எடைபோட முடியாத அதிகமான வெண்கலத்தையும் இரும்பையும் சேமித்தும், மரங்களையும் கற்களையும் சேமித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாக ஆயத்தம் செய்வாய். 1 நாளாக 22:31 நாளாக 29:4-71 இராஜா 10:142இராஜா 25:162 கொரி 8:2எரே 52:20 வேலை செய்யத்தக்க திரளான சிற்பிகளும், தச்சர்களும், கொத்தனார்களும், எந்த வேலையிலும் திறமைவாய்ந்தவர்களும் உன்னோடு இருக்கிறார்கள். 1 இராஜா 7:14யாத் 28:6யாத் 31:3-5யாத் 35:32யாத் 35:35 பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்திற்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழுந்து காரியத்தை நடத்து; யெகோவா உன்னோடு இருப்பாராக என்றான். 1 நாளாக 22:11எபே 5:14பிலி 4:131 கொரி 15:58யோசு 1:5யோசு 1:9யோசு 7:10பிலி 2:12-13 தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது: 1 நாளாக 28:1-61 நாளாக 28:211 நாளாக 29:63 யோவா 1:8பிலி 4:3ரோம 16:2-3 உங்கள் தேவனாகிய யெகோவா உங்களோடு இருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; யெகோவாவுக்கு முன்பாகவும், அவருடைய மக்களுக்கு முன்பாகவும், தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது. 1 நாளாக 22:91 நாளாக 23:252 சாமு 7:12 சாமு 5:19-20அப் 9:31சங் 44:1-5ரோம 8:311 சாமு 25:28 இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமாவையும், உங்கள் தேவனாகிய யெகோவாவை தேடுவதற்கு நேராக்கி, யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிபொருட்களையும், யெகோவாவுடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படி, நீங்கள் எழுந்து, தேவனாகிய யெகோவாவின் பரிசுத்த இடத்தைக் கட்டுங்கள் என்றான். 1 நாளாக 28:9உபா 4:291 நாளாக 16:11சங் 27:41 நாளாக 22:71 இராஜா 8:62 நாளாக 5:71 இராஜா 8:21