அப்போஸ்தலருடைய நடபடிகள் 1

Acts 1
அத்தியாயம் 1

ஆதித்திருச்சபையின் வரலாறு

48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு, லூக் 1:3லூக் 24:19மத் 4:23-24லூக் 3:231 பேது 2:21-23யோவா 10:32-38யோவா 18:19-21லூக் 7:21-23 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன். அப் 1:9அப் 10:38எபி 9:24ஏசா 59:20-21யோவா 20:21யோவா 13:18எபே 4:8-10மத் 28:19-20 அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். 1 கொரி 15:5-7அப் 13:31யோவா 20:261 யோவா 1:1யோவா 21:1யோவா 21:14மத் 28:9அப் 28:31 அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். லூக் 24:49யோவா 14:16யோவா 15:26யோவா 14:26-28அப் 2:33யோவா 7:39லூக் 12:12யோவா 16:7-15 ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். மத் 3:11அப் 11:15-161 கொரி 12:13லூக் 3:16தீத் 3:5மாற் 1:8அப் 2:1-4அப் 10:45 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். லூக் 19:11லூக் 17:20தானி 7:27மத் 24:3எசேக் 37:24-27ஏசா 9:6-7எரே 23:5-6எரே 33:15-17 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. மத் 24:361 தெச 5:1-2மாற் 13:32உபா 29:29மாற் 10:40தானி 2:21எபே 1:10லூக் 21:24 பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார். மத் 28:19மாற் 16:15ரோம 15:19அப் 4:33அப் 5:32அப் 6:8லூக் 24:46-49அப் 2:1-4 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. தானி 7:13லூக் 24:50-51மாற் 16:19அப் 1:2எபே 4:8-12யாத் 19:9யோவா 6:62லூக் 21:27 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று: லூக் 24:4யோவா 20:12மாற் 16:5வெளி 7:14அப் 10:30தானி 7:9மத் 17:2மத் 28:3 கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். வெளி 1:71 தெச 4:16மாற் 13:26யோவா 14:3மத் 24:30மத் 16:27மத் 25:31தானி 7:13-14

மத்தியா தேர்ந்தெடுக்கப்படுதல்

அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். லூக் 24:52மத் 21:1லூக் 24:50லூக் 21:37மத் 24:3மத் 26:30சகரி 14:4யோவா 11:18 அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். அப் 20:8லூக் 22:12மாற் 14:15மத் 10:2-4மாற் 2:14அப் 10:9-33அப் 12:17அப் 2:38 அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். அப் 6:4எபே 6:18அப் 2:42கொலோ 4:2ரோம 12:12லூக் 18:1மத் 18:19-20மத் 21:22 அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று: 1 கொரி 15:6அப் 21:20சங் 32:5-6வெளி 3:4யோவா 21:23லூக் 22:32வெளி 11:13யோவா 14:12 சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது. சங் 41:9யோவா 13:18சங் 55:12-15அப் 1:20யோவா 12:38-40மத் 26:56மத் 26:54யோவா 18:2-8 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான். அப் 1:25அப் 20:24யோவா 17:12யோவா 6:70-71மாற் 3:19அப் 21:19எபே 4:11-12லூக் 22:47 தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது. மத் 27:3-10சங் 55:23மத் 26:14-15சங் 55:152இராஜா 5:20-272 பேது 2:15-16யோபு 20:12-15யோசு 7:21-26 இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது. 2 சாமு 2:16அப் 2:22அப் 21:40மத் 28:15 சங்கீத புத்தகத்திலே சங் 69:25சங் 109:8-15அப் 1:25லூக் 24:44அப் 13:33லூக் 20:42சகரி 5:3-4

அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது,

ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்;

அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.

ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை, யோவா 15:27லூக் 10:1-22 சாமு 5:2உபா 31:2யோவா 10:1-9எண் 27:171 இராஜா 3:7 அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். அப் 1:2அப் 1:8-9அப் 4:33மாற் 1:1-8அப் 13:24-25எபி 2:3யோவா 1:28-51யோவா 15:27 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: அப் 15:22அப் 1:26 எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக, 1 சாமு 16:7அப் 15:8எபி 4:13எரே 17:10அப் 14:23வெளி 2:23அப் 6:6ரோம 8:27 இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; 1 கொரி 9:2ரோம 1:5யோவா 17:12யோவா 6:70-71அப் 1:16-21கலா 2:81 நாளாக 10:13-14யூதா 1:6-7 பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான். லேவி 16:8யோசு 18:101 சாமு 14:41-42யோனா 1:71 நாளாக 24:5அப் 2:14நீதி 16:22அப் 13:19