2 சாமுவேல் 5

2 Samuel 5
அத்தியாயம் 5

தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்படுதல்

அந்தக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனில் இருக்கிற தாவீதிடம் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய சதையுமானவர்கள். 1 நாளாக 11:1-32 சாமு 19:13ஆதி 29:14எபே 5:301 நாளாக 12:23-40உபா 17:15எபி 2:14நியாயாதி 9:2 சவுல் எங்கள்மேல் ராஜாவாக இருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும், நடத்திக்கொண்டுவந்தவரும் நீரே; யெகோவா: என்னுடைய மக்களான இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாக இருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள். மத் 2:6மீகா 5:4எசேக் 34:23எசேக் 37:24-25யோவா 10:112 சாமு 7:7ஏசா 40:111 சாமு 25:30 இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கைசெய்தபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள். 2 சாமு 2:41 சாமு 16:131 சாமு 23:182இராஜா 11:172 சாமு 3:21நியாயாதி 11:111 நாளாக 11:31 சாமு 11:15 தாவீது ராஜாவாகும்போது, 30 வயதாக இருந்தான்; அவன் 40 வருடங்கள் ஆட்சி செய்தான். 1 நாளாக 29:271 நாளாக 26:311 இராஜா 2:11லூக் 3:231 நாளாக 3:4 அவன் எப்ரோனிலே யூதாவை ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும், எருசலேமிலே இஸ்ரவேல் முழுவதும் யூதாவையும் 33 வருடங்களும் ஆட்சிசெய்தான். 2 சாமு 2:111 நாளாக 3:41 இராஜா 2:11

தாவீது எருசலேமைக் கைப்பற்றுதல்

தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்கள்மேல் யுத்தம்செய்ய ராஜா தன்னுடைய மனிதர்களோடு எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே தாவீதால் நுழையமுடியாது என்று நினைத்து, தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழையமுடியாது; குருடர்களும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள். நியாயாதி 1:81 நாளாக 11:4-9நியாயாதி 1:21எரே 37:10யோசு 15:63யோசு 18:28எபி 7:1நியாயாதி 19:10-12 ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமானது. 1 இராஜா 2:102 சாமு 6:122 சாமு 6:161 நாளாக 11:71 இராஜா 3:11 இராஜா 8:12 நாளாக 24:162 நாளாக 5:2 எவன் கழிவுநீர்க்கால்வாய் வழியாக ஏறி, எபூசியர்களையும் தாவீதின் எதிரிகளான சப்பாணிகளையும், குருடர்களையும் முறியடிக்கிறானோ, அவன் தலைவனாக இருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும்; யெகோவாவின் வீட்டிற்குள் 1 வரக்கூடாது என்று சொல்வதுண்டு. 1 நாளாக 11:6-9யோசு 15:16-171 சாமு 17:25 அந்தக் கோட்டையிலே தாவீது வாழ்ந்து, அதற்குத் தாவீதின் நகரம் என்று பெயரிட்டு, மில்லோ என்னும் இடம் துவங்கி, உட்புறம்வரை சுற்றிலும் மதிலைக் கட்டினான். 1 இராஜா 9:151 இராஜா 9:241 இராஜா 11:272 நாளாக 32:52 சாமு 5:71 நாளாக 11:8நியாயாதி 9:20நியாயாதி 9:6 தாவீது நாளுக்குநாள் அதிக பெலமடைந்தான்; ஏனென்றால், சேனைகளின் தேவனாகிய யெகோவா அவனோடு இருந்தார். 2 சாமு 3:1சங் 46:11ரோம 8:31தானி 2:44-45ஏசா 9:7லூக் 2:52நீதி 4:18சங் 46:7

தீருவின் ராஜாவான ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள். 1 நாளாக 14:11 இராஜா 5:1-21 இராஜா 5:181 இராஜா 5:8-101 இராஜா 7:1-122 சாமு 7:2பிரச 2:4-11எரே 22:14-16 யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகப் பெலப்படுத்தி, தம்முடைய மக்களான இஸ்ரவேலுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை உயர்த்தினார் என்று தாவீது தெளிவாக அறிந்தபோது. 2 சாமு 7:161 இராஜா 10:91 நாளாக 14:22 நாளாக 2:11தானி 2:30எஸ்த 4:14ஏசா 1:25-27

அவன் எப்ரோனிலிருந்து வந்த பின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் பெண்களையும் திருமணம் செய்துகொண்டான்; இன்னும் அதிக மகன்களும், மகள்களும் தாவீதுக்குப் பிறந்தார்கள். 1 நாளாக 3:9உபா 17:171 நாளாக 14:3-72 நாளாக 11:18-212 நாளாக 13:21ஆதி 25:5-6 எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 1 நாளாக 3:5-91 நாளாக 14:42 சாமு 12:1-72 சாமு 12:24-25லூக் 2:31மத் 1:6 இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, 1 நாளாக 14:51 நாளாக 3:6 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்ற பெயர்களை உடைய மகன்கள் பிறந்தார்கள். 1 நாளாக 14:71 நாளாக 3:8

தாவீது பெலிஸ்தர்களைத் தோற்கடித்தல்

தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள் என்று பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லோரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு கோட்டைக்குள் போனான். 2 சாமு 23:141 நாளாக 11:161 நாளாக 14:8-9சங் 2:1-5வெளி 11:15-18 பெலிஸ்தர்களோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். யோசு 15:82 சாமு 23:13ஆதி 14:5யோசு 17:15ஏசா 17:5யோசு 18:161 நாளாக 11:15 பெலிஸ்தர்களுக்கு எதிராகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடம் விசாரித்தபோது, யெகோவா: போ, பெலிஸ்தர்களை உன்னுடைய கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார். 2 சாமு 2:11 சாமு 23:22 சாமு 5:23நியாயாதி 20:28நீதி 3:61 இராஜா 22:15-231 சாமு 23:41 சாமு 30:7-8 தாவீது பாகால்பிராசீமிற்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்து: தண்ணீர்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதுபோல, யெகோவ என்னுடைய எதிரிகளை எனக்கு முன்பாக சிதறடித்தார் என்று சொல்லி, அதினால் அந்த இடத்திற்குப் பாகால்பிராசீம் என்று பெயரிட்டான். ஏசா 28:21 அங்கே பெலிஸ்தர்கள் தங்களுடைய விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவனுடைய மனிதர்களும் எடுத்துக்கொண்டுபோனார்கள். 1 நாளாக 14:11-12உபா 7:51 சாமு 5:2-6உபா 7:25ஏசா 37:19ஏசா 46:1-2எரே 43:12

பெலிஸ்தர்கள் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். 1 நாளாக 14:131 இராஜா 20:222 சாமு 5:18 தாவீது யெகோவாவிடம் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராகப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, 1 நாளாக 14:14யோவா 9:6-7மத் 8:23-25மத் 9:29-30யோசு 8:2யோசு 8:7 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற சத்தத்தை நீ கேட்கும்போது, சீக்கிரமாக எழுந்துப்போ; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, யெகோவா உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார். 2இராஜா 7:6நியாயாதி 4:14நியாயாதி 7:151 நாளாக 14:151 சாமு 14:9-12பிலி 2:11-12 யெகோவா தாவீதுக்குக் கட்டளையிட்டபடி அவன் செய்து, பெலிஸ்தர்களைக் கேபா துவங்கிக் கேசேர் எல்லைவரை முறியடித்தான். 1 நாளாக 14:16ஏசா 28:21யோசு 16:10