யோசுவா 15

Joshua 15
அத்தியாயம் 15

யூதா கோத்திரத்தார்களின் பங்கு

யூதா கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகே உள்ள சீன்வனாந்திரமே தென்பகுதியின் கடைசி எல்லை. எண் 26:55-56எசேக் 47:19யோசு 14:2எண் 33:36-37எண் 34:3-5 தென்பகுதியான அவர்களுடைய எல்லை சவக்கடலின் 1 கடைசியில் தெற்கு நோக்கி இருக்கிற முனைதுவங்கி, எசேக் 47:8ஆதி 14:3ஏசா 11:15எசேக் 47:18யோசு 3:16எண் 34:3 தென்பகுதியில் இருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கே இருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப் போய், எண் 34:4நியாயாதி 1:36ஆதி 14:7எண் 20:1எண் 32:8 அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, மத்திய தரைக் கடல்வரைக்கும் போய் முடியும்; இதுவே உங்களுடைய தென்பகுதிக்கு எல்லையாக இருக்கும் என்றான். எண் 34:5யோசு 13:3யாத் 23:31ஆதி 15:18 கிழக்கு எல்லையானது, யோர்தான் நதியின் ஆரம்பம்வரை இருக்கிற சவக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் நதியின் ஆரம்பம் இருக்கிற கடலின் முனைதுவங்கி, எண் 34:12யோசு 18:15-19எண் 34:10 பெத்ஓக்லாவுக்கு ஏறி, வடக்கே இருக்கிற பெத் அரபாவைக் கடந்து, ரூபனின் மகனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய், யோசு 18:17யோசு 18:19-21 பிறகு ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் நீரூற்றுவரைக்கும் போய், என்ரோகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று, 1 இராஜா 1:92 சாமு 17:17யோசு 7:26ஓசி 2:5ஏசா 65:10யோசு 10:38-39யோசு 10:43யோசு 15:15 பிறகு எபூசியர்கள் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாக இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கே இருக்கிற இராட்சதர்களுடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் உச்சிவரை ஏறிப்போய், யோசு 18:16யோசு 15:63நியாயாதி 19:10யோசு 18:282இராஜா 23:10நியாயாதி 1:212 நாளாக 28:32 சாமு 5:18 அந்த மலையின் உச்சியிலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய், 1 நாளாக 13:6யோசு 18:15நியாயாதி 18:122 சாமு 6:2யோசு 9:17 பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய், நியாயாதி 14:11 சாமு 6:12-21ஆதி 38:12-13நியாயாதி 14:5யோசு 15:57 1 பின்பு வடக்கே இருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாகச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, மத்திய தரைக் கடலிலே முடியும். 1 சாமு 5:101 சாமு 7:142இராஜா 1:162இராஜா 1:2-32இராஜா 1:6யோசு 15:45யோசு 19:43-44 மேற்கு எல்லை, பெரிய மத்திய தரைக் கடலே; இது யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை. எசேக் 47:20யோசு 15:47எண் 34:6-7உபா 11:24 எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்கு, யோசுவா, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை யூதா கோத்திரத்தின் நடுவே பங்காகக் கொடுத்தான். உபா 1:34-36யோசு 14:6-15எண் 13:30எண் 14:23-24 அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று மகன்களையும் காலேப் துரத்திவிட்டு, நியாயாதி 1:10நியாயாதி 1:20யோசு 11:21எண் 13:22-23யோசு 10:36-37எண் 13:33 அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பெயர் கீரியாத்செப்பேர். யோசு 10:38நியாயாதி 1:11-13யோசு 10:3 கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான். நியாயாதி 1:12-13நியாயாதி 1:6 அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினான்; எனவே, தன் மகள் அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். நியாயாதி 1:13நியாயாதி 3:9நியாயாதி 3:11யோசு 14:61 நாளாக 2:49எண் 32:12 அவள் புறப்படும்போது, என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான். 1 சாமு 25:23ஆதி 24:64 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். நியாயாதி 1:14-152 கொரி 9:51 சாமு 25:27உபா 33:7ஆதி 33:11 யூதா கோத்திரத்தார்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்கு என்னவென்றால்: உபா 33:7ஆதி 49:8-12 தென்புறத்தின் கடைசியான ஏதோமின் எல்லைக்கு நேராக, யூதா கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர், ஆதி 35:21நெகே 11:25 கீனா. திமோனா, ஆதாதா, கேதேஸ், ஆத்சோர், இத்னான், உபா 1:19யோசு 12:22எண் 33:37 சீப், தேலெம், பெயாலோத், 1 சாமு 23:141 சாமு 23:191 சாமு 23:241 சாமு 15:4சங் 54:1 ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர், ஆமாம், சேமா, மொலாதா, 1 நாளாக 4:28 ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பெலேத், நெகே 11:26 ஆசார்சூவால், பெயர்செபா, பிஸ்யோத்யா, ஆதி 26:331 நாளாக 4:28ஆதி 21:14ஆதி 21:31-33யோசு 19:2-3 பாலா, ஈயிம், ஏத்சேம், 1 நாளாக 4:29யோசு 15:9-11யோசு 19:3 எல்தோலாத், கெசீல், ஓர்மா, யோசு 19:4உபா 1:44நியாயாதி 1:17எண் 14:45 சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா, 1 சாமு 27:61 சாமு 30:11 நாளாக 12:1யோசு 19:5 லெபாயோத், சில்லீம், ஆயீன், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது. நெகே 11:29எண் 34:11 பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா, நியாயாதி 13:25நியாயாதி 16:31எண் 13:23யோசு 19:41 சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம், யோசு 12:17யோசு 15:53 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா, 1 சாமு 17:11 சாமு 22:1யோசு 10:31 நாளாக 4:18யோசு 10:10யோசு 10:23யோசு 12:11யோசு 12:15 சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினான்கு. 1 சாமு 17:52 சேனான், அதாஷா, மிக்தால்காத், திலியான், மிஸ்பே, யோக்தெயேல், 2இராஜா 14:71 சாமு 10:171 சாமு 7:161 சாமு 7:5-6ஆதி 31:48-49நியாயாதி 20:1நியாயாதி 21:5 லாகீஸ், போஸ்காத், எக்லோன், யோசு 10:32இராஜா 22:1யோசு 10:31-322இராஜா 14:192இராஜா 18:142இராஜா 18:172இராஜா 19:8யோசு 12:11-12 காபோன், லகமாம், கித்லீஷ், கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினாறு. யோசு 10:21யோசு 10:10யோசு 10:28யோசு 12:16 லிப்னா, ஏத்தேர், ஆசான், யோசு 10:292இராஜா 8:22யோசு 12:15யோசு 19:7 இப்தா, அஸ்னா, நெசீப், கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது. 1 சாமு 23:1-14ஆதி 38:5மீகா 1:14-15 எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், யோசு 13:31 சாமு 5:101 சாமு 6:17ஆமோ 1:8சகரி 9:5-7செப்ப 2:4 எக்ரோன் துவங்கிச் மத்திய தரைக் கடல் வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும், 1 சாமு 5:11 சாமு 5:62 நாளாக 26:6ஆமோ 1:8ஏசா 20:1நெகே 13:23-24 அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் ஆறு வரையிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; மத்திய தரைக் கடலே எல்லை. யோசு 15:4அப் 8:26ஆமோ 1:6-7யாத் 23:31நியாயாதி 16:1-21எரே 47:1எரே 47:5யோசு 13:3 மலைகளில் சாமீர், யாத்தீர், சோக்கோ, யோசு 21:14 தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா, யோசு 15:15நியாயாதி 1:11 ஆனாப், எஸ்தெமொ, ஆனீம், கோசேன், ஓலோன், கிலோ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று. யோசு 10:41யோசு 11:162 சாமு 15:12 அராப், தூமா, எஷியான், ஏசா 21:11 யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா, உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது. யோசு 15:13ஆதி 23:2யோசு 14:15 மாகோன், கர்மேல், சீப், யுத்தா, 1 சாமு 23:251 சாமு 25:2யோசு 15:241 இராஜா 18:421 சாமு 23:14-151 சாமு 25:71 சாமு 26:1-22 நாளாக 26:10 யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா, காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்படப் பத்து. யோசு 15:10ஆதி 38:12எரே 14:1 அல்கூல், பெத்சூர், கேதோர், 1 நாளாக 4:39 மாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு. கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இரண்டு. யோசு 18:141 சாமு 7:1 வனாந்திரத்தில், பெத் அரபா, மித்தீன், செக்காக்கா, யோசு 15:6யோசு 18:18 நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு. 1 சாமு 23:292 நாளாக 20:2 எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களை யூதா கோத்திரத்தார்கள் துரத்திவிடமுடியாமல்போனது; ஆகவே இந்த நாள்வரை எபூசியர்கள் யூதா கோத்திரத்தார்களோடு எருசலேமிலே குடியிருக்கிறார்கள். நியாயாதி 1:21நியாயாதி 1:82 சாமு 5:6-91 நாளாக 11:4-8ரோம 7:14-21