மீகா 1

Micah 1
அத்தியாயம் 1

யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரைச்சேர்ந்த மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் விரோதமாகப் பெற்றுக்கொண்டதுமான யெகோவாவுடைய வார்த்தை. எரே 26:18ஏசா 1:1ஓசி 1:1ஆமோ 1:12 நாளாக 27:1-9ஆமோ 2:4-8ஆமோ 3:1-2ஆமோ 6:1

இஸ்ரவேலின்மேல் வரப்போகும் நியாயத்தீர்ப்பு

அனைத்து மக்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; யெகோவாகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாக இருப்பார். ஏசா 1:2சங் 11:4ஆப 2:20எரே 22:29யோனா 2:7மல்கி 3:5மீகா 6:1-2மாற் 7:14-15 இதோ, யெகோவா தம்முடைய இடத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். ஆமோ 4:13ஏசா 26:21உபா 32:13ஆப 3:19சங் 115:3உபா 33:29எசேக் 3:12ஓசி 5:14-15 மெழுகு நெருப்பிற்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயும்தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், மலைகள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். நாகூ 1:5சங் 97:5ஆமோ 9:5ஆப 3:10ஆப 3:6ஏசா 64:1-3நியாயாதி 5:4சங் 68:2 இவை அனைத்தும் யாக்கோபுடைய மீறுதலின் காரணமாகவும், இஸ்ரவேல் வம்சத்தார்களுடைய பாவங்களின் காரணமாகவும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ? ஆமோ 8:14எரே 2:191 தெச 2:15-161 இராஜா 13:322 நாளாக 28:2-42 நாளாக 28:23-252இராஜா 17:7-23ஏசா 50:1-2 ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சைச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டுவிழச்செய்து, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன். எசேக் 13:14மீகா 3:122இராஜா 19:25புலம் 4:1ஆமோ 5:11ஆப 3:13ஓசி 13:16ஏசா 25:12 அதின் வார்ப்பிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் நொறுக்கப்படும்; அதின் பொருட்கள் அனைத்தும் நெருப்பினால் எரித்துப்போடப்படும்; அதின் சிலைகளை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாகச் செலுத்தப்படும். உபா 23:18ஓசி 2:12ஓசி 10:5-6ஓசி 8:6வெளி 18:32 நாளாக 31:12 நாளாக 34:6-72இராஜா 23:14-15

இஸ்ரவேல் மற்றும் யூதாவுக்காகப் புலம்புதல்

இதனால் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் நிர்வாணமாகவும் நடப்பேன்; நான் நரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன். ஏசா 20:2-4ஏசா 22:4ஏசா 13:21ஏசா 16:9ஏசா 21:3எரே 4:19எரே 48:36-39எரே 9:1 அதின் காயம் ஆறாதது; அது யூதாவரை வந்தது: என் மக்களின் வாசலாகிய எருசலேம்வரை வந்து சேர்ந்தது. எரே 30:11-152 நாளாக 32:1-23ஏசா 8:7-8எரே 15:18மீகா 1:122இராஜா 18:9-13ஏசா 1:5-6ஏசா 10:28-32 அதைக் காத்பட்டணத்திலே அறிவிக்காதீர்கள்; அழவே வேண்டாம்; பெத் அப்ராவிலே புழுதியில் புரளு. 2 சாமு 1:20எரே 6:26ஆமோ 5:13ஆமோ 6:10யோபு 2:8யோசு 18:23புலம் 3:29 சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் நிர்வாணமாக அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவன் வெளியே வருவதில்லை; பெத் ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாக இருக்காது. ஏசா 20:4எசேக் 16:37எசேக் 23:29ஏசா 16:2ஏசா 47:2-3எரே 13:22எரே 48:6எரே 48:9 மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை யெகோவாவிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது. எரே 14:19ஆமோ 3:6மீகா 1:9ஏசா 45:7ஏசா 59:9-11எரே 8:15யோபு 30:261 சாமு 4:13 லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே மகளாகிய சீயோனின் பாவத்திற்குக் காரணம்; உன்னிடத்தில் இஸ்ரவேலின் கீழ்ப்படியாமைகள் காணப்பட்டது. 2இராஜா 18:172 நாளாக 32:9யோசு 10:31 இராஜா 13:33-341 இராஜா 14:161 இராஜா 16:312 நாளாக 11:92இராஜா 16:3-4 ஆகையால் மோர்ஷேத்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு ஏமாற்றமாகப்போகும். யோசு 15:442இராஜா 16:8சங் 118:8-92 நாளாக 16:1-32இராஜா 18:14-162 சாமு 8:2ஏசா 30:6எரே 15:18 மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு உரிமையாளனை வரச்செய்வேன்; இஸ்ரவேலின் தலைவர்கள் 1 அதுல்லாம் வரை வருவார்கள். 1 சாமு 22:1யோசு 15:44யோசு 15:352 நாளாக 11:7ஏசா 10:3ஏசா 10:5-6ஏசா 7:17-25எரே 49:1 உனக்கு அருமையான உன் பிள்ளைகளுக்காக நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப் போகிறார்கள். ஏசா 22:12எரே 7:29யோபு 1:20ஆமோ 8:10எரே 16:62இராஜா 17:6உபா 28:41உபா 28:56-57