யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் மூன்றாம் வருட ஆட்சியில் ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய எசேக்கியா ராஜாவானான். 2 நாளாக 28:271 நாளாக 3:13மத் 1:9-102இராஜா 16:202இராஜா 15:302இராஜா 16:22இராஜா 18:9 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்; சகரியாவின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் ஆபி. 2 நாளாக 29:1-2 அவன் தன் முற்பிதாவாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 2இராஜா 20:31 இராஜா 11:381 இராஜா 11:41 இராஜா 15:111 இராஜா 15:51 இராஜா 3:142 நாளாக 29:22 நாளாக 31:20-21 அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே உண்டாக்கியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்வரை இஸ்ரவேல் மக்கள் அதற்குத் தூபம் காட்டிவந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் 1 என்று பெயரிட்டான். 2 நாளாக 31:1எண் 21:8-92இராஜா 18:221 இராஜா 15:12-141 இராஜா 22:431 இராஜா 3:2-32இராஜா 12:3உபா 12:2-3 அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 2இராஜா 23:252இராஜா 19:10மத் 27:43எபே 1:122 நாளாக 32:7-8யோபு 13:15சங் 13:5சங் 146:5-6 அவன் யெகோவாவைவிட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, யெகோவா மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். உபா 10:20யோசு 23:8யோவா 14:15அப் 11:231 யோவா 5:32இராஜா 17:13யோவா 15:142இராஜா 17:16 ஆகையால் யெகோவா அவனோடிருந்தார்; அவன் போகிற இடமெங்கும் அவனுக்கு அனுகூலமானது; அவன் அசீரியா ராஜாவிற்குக் கட்டுப்படாமல், அவனுடைய அதிகாரத்தைத் தள்ளிவிட்டான். 2இராஜா 16:7ஆதி 39:2-3சங் 60:12ரோம 8:311 சாமு 18:142 நாளாக 31:212 நாளாக 32:30மத் 28:20 அவன் பெலிஸ்தியர்களைக் காசாவரை அதின் எல்லைகள் வரைக்கும், காவலாளர்கள் காக்கிற கோபுரங்கள் துவங்கி பாதுகாப்பான நகரங்கள் வரைக்கும் தாக்கினான். 2இராஜா 17:9ஏசா 14:292 நாளாக 28:181 நாளாக 4:412 நாளாக 26:10ஏசா 5:2 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் ஏழாம் வருட ஆட்சியில் சரியான எசேக்கியா ராஜாவின் நான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாக வந்து அதை முற்றுகையிட்டான். ஓசி 10:142இராஜா 17:3-232இராஜா 18:1 மூன்றுவருடங்கள் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியிலும் சமாரியா பிடிபட்டது. ஆமோ 3:11ஆமோ 6:7ஆமோ 9:1-4ஓசி 13:16மீகா 1:6-9மீகா 6:16மீகா 7:13 அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். 1 நாளாக 5:262இராஜா 17:6ஏசா 37:122இராஜா 19:11அப் 7:43ஆமோ 5:1-3ஆமோ 5:25-27ஆமோ 5:6 அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், அவருடைய உடன்படிக்கையையும் யெகோவாவின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதைக் கேட்காமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள். 1 இராஜா 9:61 பேது 2:81 பேது 4:172இராஜா 17:7-232 தெச 1:82 தீமோ 2:24தானி 9:6-11உபா 11:28 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்தான். ஏசா 36:1-222 நாளாக 32:1-23ஓசி 12:1-2ஏசா 10:5ஏசா 7:17-25ஏசா 8:7-8 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவிற்கு ஆள் அனுப்பி: நான் குற்றம்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான். 2இராஜா 18:71 இராஜா 20:4லூக் 14:32நீதி 29:25 ஆதலால் எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான். 1 இராஜா 15:18-192இராஜா 16:82 நாளாக 16:22இராஜா 12:181 இராஜா 15:15 அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா யெகோவாவுடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவிற்குக் கொடுத்தான். 1 இராஜா 6:31-352 நாளாக 29:3
சனகெரிப் எருசலேமைப் பயமுறுத்துதல்
ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும், ரப்சாரீசையும், ரப்சாக்கேயையும் பெரிய படையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்தின் வாய்க்காலின் அருகில் நின்று, 2இராஜா 20:20ஏசா 20:1ஏசா 7:3ஏசா 36:22 நாளாக 32:9ஏசா 22:9-11 ராஜாவை வரவழைத்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகனாகிய யோவாக் என்னும் கணக்காளனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். 2இராஜா 19:21 இராஜா 4:32 நாளாக 34:82 சாமு 20:242 சாமு 8:16-17ஏசா 22:15-24ஏசா 36:22ஏசா 36:3 ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? ஏசா 36:42இராஜா 19:10ஏசா 10:8-142 நாளாக 32:10-112 நாளாக 32:14-162 நாளாக 32:7-82இராஜா 18:222இராஜா 18:29-30 போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய் பேச்சேயல்லாமல் வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? நீதி 21:30-31 இதோ, நெரிந்த நாணற்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவனுடைய உள்ளங்கையில் பட்டு ஊடுருவிப்போகும்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான். ஏசா 30:7எசேக் 29:6-7ஏசா 30:2-32இராஜா 17:4ஏசா 31:1-3ஏசா 36:6எரே 46:17 நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய யெகோவாவை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களானால், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே. 2 நாளாக 31:11 கொரி 2:152 நாளாக 32:122இராஜா 18:4-5தானி 3:15ஏசா 36:7மத் 27:43 நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத் தகுதியுள்ளவர்களைச் சம்பாதிக்க முடியுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதம்செய். 1 இராஜா 20:101 இராஜா 20:181 சாமு 17:421 சாமு 17:44ஏசா 10:13-14ஏசா 36:8-9நெகே 4:2-5சங் 123:3-4 செய்யாமல்போனால், நீ என் ஆண்டவனுடைய வேலைக்காரர்களில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரர்களும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்? ஏசா 10:82இராஜா 18:21தானி 2:37-38தானி 4:22தானி 4:37உபா 17:16எசேக் 17:15எசேக் 17:17 இப்போதும் யெகோவாவுடைய கட்டளையில்லாமல் இந்த இடத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னோடே சொன்னாரே என்றான். 2இராஜா 19:61 இராஜா 13:182 நாளாக 35:212இராஜா 19:22-37ஆமோ 3:6ஏசா 10:5-6யோவா 19:10-11 அப்பொழுது இல்க்கியாவின் மகன் எலியாக்கீமும், செப்னாவும், யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியார்களோடு சீரியமொழியிலே பேசும், அந்த மொழி எங்களுக்குத் தெரியும்; மதிலிலிருக்கிற மக்களின் காதுகள் கேட்க எங்களோடே எபிரேய மொழியிலே பேசவேண்டாம் என்றார்கள். எஸ்றா 4:7தானி 2:4ஏசா 36:11-122இராஜா 18:18 அதற்கு ரப்சாக்கே: உங்களோடுகூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் சிறுநீரைக் குடிக்கவும் மதிலிலே தங்கியிருக்கிற மனிதர்களிடத்திற்கே அல்லாமல், உன் எஜமானிடத்திற்கும் உன்னிடத்திற்குமா என் எஜமான் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி, 2இராஜா 6:25உபா 28:53-57எசேக் 4:13எசேக் 4:15புலம் 4:5சங் 73:8 ரப்சாக்கே நின்றுகொண்டு யூதமொழியிலே உரத்தசத்தமாக: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். ஏசா 36:13-182 நாளாக 32:182இராஜா 18:19எசேக் 29:3எசேக் 31:3-10எஸ்றா 7:12ஏசா 10:8-13சங் 47:2 எசேக்கியா உங்களை ஏமாற்றாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான். 2 நாளாக 32:152 நாளாக 32:112 தெச 2:42 தெச 2:8தானி 3:15-17தானி 6:16யோவா 19:10-11சங் 73:8-9 யெகோவா நம்மை நிச்சயமாகத் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் யெகோவாவை நம்பச்செய்வான்; அதற்கு இடம்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார். 2இராஜா 19:102இராஜா 19:222இராஜா 19:32-34லூக் 23:35மத் 27:43சங் 11:1சங் 125:1-2சங் 22:7-8 எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே சமாதானமாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்திற்கு ஒப்பான தானியமும் திராட்சைத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சைரசமும் உள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனும் உள்ள தேசமுமாகிய வேறொரு நாட்டிற்கு அழைத்துக்கொண்டுபோகும் வரைக்கும், 1 இராஜா 4:251 இராஜா 4:20சகரி 3:10நீதி 18:16ஆதி 32:20ஆதி 33:11 அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் பழத்தையும் தன்தன் அத்திமரத்தின் பழத்தையும் சாப்பிட்டு, அவனவன் தன்தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாக நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; யெகோவா நம்மைத் தப்புவிப்பார் என்று எசேக்கியா உங்களுக்குப் போதிக்கும்போது அதைக் கேட்காதிருங்கள். உபா 8:7-9உபா 11:12யாத் 3:82இராஜா 17:232இராஜா 17:62இராஜா 18:112இராஜா 24:14-162இராஜா 25:11 மக்களுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ? ஏசா 10:10-112 நாளாக 32:14-172 நாளாக 32:192இராஜா 19:12-132இராஜா 19:17-18ஏசா 36:18-20 ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவா பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ? ஏசா 10:92இராஜா 17:23-332இராஜா 17:62இராஜா 19:12-132 சாமு 8:9ஏசா 36:18-19ஏசா 37:11-12ஏசா 37:18-19 யெகோவா எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்த தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான். தானி 3:152 நாளாக 32:152இராஜா 19:17யாத் 5:2ஏசா 10:15ஏசா 37:23-29யோபு 15:25-26சங் 2:1-2 ஆனாலும் மக்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்திரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான். ஆமோ 5:13மத் 7:6நீதி 26:4நீதி 9:7சங் 38:13-14சங் 39:1 அப்பொழுது இல்க்கியாவின் மகனாகிய எலியாக்கீம் என்னும் அரண்மனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் எழுத்தனும், ஆசாப்பின் மகன் யோவாக் என்னும் கணக்காளனும் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள். 2இராஜா 18:262இராஜா 22:112இராஜா 22:192இராஜா 5:72இராஜா 6:30ஆதி 37:29ஆதி 37:34ஏசா 33:7