ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் மனம்திரும்புதல்
இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். ஓசி 6:1யோவே 2:12-13ஓசி 12:62 நாளாக 30:6-9சகரி 1:3-4அப் 26:18-20ஏசா 55:6-7எரே 4:1 வார்த்தைகளைக்கொண்டு யெகோவாவிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாக அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் பலிகளைச் செலுத்துவோம். எபி 13:15சங் 51:2-10யோபு 34:31-32யோபு 7:21மீகா 7:18-191 யோவா 3:5சங் 69:30-312 சாமு 12:13 அசீரியா எங்களைக் காப்பாற்றுவதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் செயலைப்பார்த்து: நீங்கள் எங்களுடைய தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள். சங் 10:14சங் 68:5ஏசா 31:1யோவா 14:18ஓசி 14:8ஓசி 2:17ஓசி 5:13ஏசா 30:16 நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாகச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கினது. ஏசா 57:18எரே 3:22ஏசா 12:1எபே 2:4-9செப்ப 3:17ஓசி 6:12 கொரி 5:19-21யாத் 15:26 நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல் இருப்பேன்; அவன் லீலி மலரைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். ஏசா 35:2எபே 3:17ஏசா 27:6மத் 6:28ஏசா 26:19ஏசா 44:3யோபு 29:19மீகா 5:7 அவனுடைய கிளைகள் ஓங்கிப் படரும், அவனுடைய அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும். சங் 52:8சங் 128:3பிலி 4:18ரோம 11:16-242 கொரி 2:14-15தானி 4:10-15எசேக் 17:5-8எசேக் 31:3-10 அவனுடைய நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சைச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவனுடைய வாசனை லீபனோனுடைய திராட்சைரசத்தின் வாசனையைப்போல இருக்கும். சங் 91:1யோவா 11:251 கொரி 15:36-38எசேக் 17:23ஓசி 14:5ஓசி 2:22ஓசி 6:2ஏசா 32:1-2 இனி எனக்கும் சிலைகளுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்வான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு மரத்தைப்போல் இருக்கிறேன்; என்னாலே உன்னுடைய கனி உண்டானது என்று எப்பிராயீம் சொல்வான். யோபு 34:32யாக் 1:171 பேது 4:3-4ஏசா 41:19ஏசா 55:13லூக் 15:20பிலி 2:131 பேது 1:14-16 இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளை ஏற்றுக்கொள்ளத்தக்க புத்தியுள்ளவன் யார்? யெகோவாவுடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; கலகக்காரர்களோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள். நீதி 10:29சங் 107:43யோவா 8:47தானி 12:10நீதி 1:5-6சங் 19:7-8எரே 9:12உபா 32:4