காணாமல்போன ஆடு
எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள். 1 தீமோ 1:15மத் 9:10-13லூக் 5:29-32மத் 21:28-31எசேக் 18:27ரோம 5:20லூக் 13:30லூக் 7:29 அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள். மத் 9:11லூக் 19:7லூக் 7:39லூக் 5:30அப் 11:3கலா 2:12லூக் 7:34லூக் 15:29-30 அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ? எசேக் 34:16எசேக் 34:11-12மத் 18:12-14லூக் 19:101 பேது 2:25சங் 119:176எசேக் 34:31ஏசா 53:6 கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, எபி 12:2ஏசா 40:10-11ஏசா 46:3-4லூக் 19:9மீகா 7:18எபே 2:3-6எசேக் 18:23ஏசா 53:10-11 வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா? லூக் 15:10லூக் 15:241 பேது 2:25சங் 119:176அப் 11:23யோவா 15:14யோவா 3:291 பேது 2:10 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக் 15:10லூக் 5:32லூக் 15:32மத் 18:13நீதி 30:12லூக் 18:9-11பிலி 3:6-7லூக் 16:15
காணாமல்போன வெள்ளிக்காசு
அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ? எசேக் 34:12லூக் 19:10யோவா 10:16யோவா 11:52எபே 2:17 கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா? லூக் 15:6-7 அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக் 15:7எசேக் 33:112 கொரி 7:10எசேக் 18:23லூக் 13:5எசேக் 18:32மத் 18:14அப் 11:18
மனந்திரும்பிய மகன்
பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். மத் 21:23-31 அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான். உபா 21:16-17மாற் 12:44லூக் 15:30சங் 17:14சங் 16:5-6 சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான். எரே 2:5நீதி 21:17நீதி 29:3நீதி 23:19-22பிரச 11:9-10லூக் 15:30லூக் 16:1லூக் 16:19 எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான், 2 நாளாக 33:11எசேக் 16:27ஆமோ 8:9-12ஓசி 2:9-14 அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். தீத் 3:32 தீமோ 2:25-26ஏசா 1:52 நாளாக 28:22எபே 2:2-3ஏசா 57:17எரே 31:18-19எரே 5:3 அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. ரோம 6:19-21ஓசி 12:1ஏசா 44:20ஏசா 55:2ஏசா 57:3யோனா 2:2-8புலம் 4:5சங் 142:4 அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். எசேக் 18:28எபே 2:4-5லூக் 15:18-19எபே 5:14அப் 16:29-30அப் 26:11-19தீத் 3:4-6அப் 2:37 நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். புலம் 3:401 யோவா 1:8-10லூக் 15:21எரே 50:4-5லூக் 18:13சங் 51:3-5மத் 6:14ஓசி 2:6-7 இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; யோபு 42:6சங் 84:101 பேது 5:6யாக் 4:8-10ஆதி 32:10யோசு 9:24-25லூக் 5:81 கொரி 15:9 எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான். சங் 103:10-13சங் 86:5சங் 86:15எபே 2:13உபா 30:2-4ஆதி 46:29ஏசா 49:15ஆதி 33:4 குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான். சங் 51:4லூக் 15:18-191 கொரி 8:12எரே 3:13ரோம 2:4சங் 143:2எசேக் 16:63 அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். எஸ்த 8:2ஆதி 41:42ஏசா 61:10வெளி 6:11எஸ்த 3:10வெளி 19:8வெளி 7:9சகரி 3:3-5 கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம். மத் 22:2-14ஏசா 25:6சங் 63:5ஆதி 18:7ஏசா 65:13-14நீதி 9:2 என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். எபே 2:5எசேக் 34:16லூக் 19:10கொலோ 2:13லூக் 15:4எபே 2:1லூக் 15:32ரோம 6:11 அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; எரே 31:4சங் 150:42 சாமு 6:14பிரச 3:4யாத் 15:20லூக் 15:11-12லூக் 7:32சங் 126:1 வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான். அப் 22:13அப் 9:17லூக் 15:30பிலே 1:16 அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான். 1 சாமு 18:8ஆதி 4:5-7யோனா 4:9லூக் 15:2ஏசா 65:5யோனா 4:1-4லூக் 13:34லூக் 7:39 அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. லூக் 15:7லூக் 18:11-12மல்கி 3:14சகரி 7:31 யோவா 1:8-101 சாமு 15:13-14ஏசா 65:5லூக் 17:10 வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். லூக் 15:12-13நீதி 29:3லூக் 15:32லூக் 18:11யாத் 32:11யாத் 32:7லூக் 15:22-23 அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது. மாற் 7:27-28ரோம 11:1ரோம 9:4மத் 20:13-16லூக் 19:22-23ரோம 11:35 உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார். எபே 2:1-10லூக் 15:24ஏசா 35:10ரோம 3:4சங் 51:8யோனா 4:10-11ரோம 15:9-13ஓசி 14:9