ஏசாயா 52

Isaiah 52
அத்தியாயம் 52

எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையை அணிந்துகொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார உடைகளை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. வெளி 21:27ஏசா 51:17சகரி 3:4வெளி 21:2ஏசா 51:9ஏசா 35:8எபே 6:10ஏசா 48:2 தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன மகளாகிய சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு. ஏசா 51:14ஏசா 61:1எரே 51:45எரே 51:50லூக் 4:18வெளி 18:4சகரி 2:6ஏசா 29:4 விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று யெகோவா சொல்கிறார். 1 பேது 1:18ஏசா 45:13சங் 44:12ஏசா 50:1எரே 15:13ரோம 7:14-25 முற்காலத்தில் என் மக்கள் தங்கும்படி எகிப்திற்குப் போனார்கள்; அசீரியனும் காரணமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார். ஆதி 46:6சங் 69:4அப் 7:14-15யோபு 2:3சங் 25:3ஏசா 14:25ஏசா 36:1-22எரே 50:17 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் மக்கள் வீணாகக் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை பரிகாசம் செய்கிறார்கள் 1; எப்போதும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று யெகோவா சொல்கிறார். ரோம 2:24யாத் 1:13-16யாத் 2:23-24யாத் 3:7எசேக் 20:14எசேக் 20:9எசேக் 36:20-23ஏசா 22:16 இதினிமித்தம், என் மக்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்கிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று யெகோவா சொல்கிறார். எசேக் 37:13-14எசேக் 20:44எபி 8:10-11சகரி 10:9-12யாத் 33:19எசேக் 39:27-29எண் 23:19சங் 48:10 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாக அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் செய்கிறாரென்று சீயோனுக்குச் சொல்கிற நற்செய்தியாளனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. ரோம 10:12-15நாகூ 1:15ஏசா 61:1-3மாற் 16:15எபே 6:15ஏசா 40:9சங் 93:1மத் 28:18 உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாகக் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், யெகோவா சீயோனைத் திரும்பிவரச்செய்யும்போது, அதைக் கண்ணாரக் காண்பார்கள். ஏசா 62:6எசேக் 33:7எரே 32:391 கொரி 1:101 கொரி 13:12எசேக் 3:17ஏசா 30:26ஏசா 35:10 எருசலேமின் பாழான இடங்களே, முழங்கி ஏகமாகக் கெம்பீரித்துப் பாடுங்கள்; யெகோவா தம்முடைய மக்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். ஏசா 51:3சங் 98:4ஏசா 48:20ஏசா 14:7ஏசா 42:10-11ஏசா 44:23ஏசா 44:26ஏசா 49:13 எல்லா தேசங்களின் கண்களுக்கு முன்பாகவும் யெகோவா தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லோரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். லூக் 3:6வெளி 14:6ஏசா 51:9சங் 98:1-3வெளி 15:4அப் 13:47அப் 2:5-11ஏசா 49:6 புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; யெகோவாவுடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். 2 கொரி 6:17சகரி 2:6-7எபே 5:11ஏசா 48:20ஏசா 1:16லேவி 10:3எஸ்றா 1:7-11ஆகா 2:13-14 நீங்கள் துரிதமாகப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; யெகோவா உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பின்னே உங்களைக் காக்கிறவராயிருப்பார். உபா 20:4ஏசா 58:8யாத் 14:19-20யாத் 13:21-22ஏசா 45:2யாத் 12:11மீகா 2:131 நாளாக 14:15

ஊழியக்காரனின் பாடுகளும் மகிமையும்

இதோ, என் ஊழியக்காரன் ஞானமாக நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். பிலி 2:7-11மத் 28:18ஏசா 42:1யோவா 3:31எரே 23:5வெளி 5:6-13ஏசா 9:6-7யோவா 5:22-23 மனிதனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு கொடூரம் அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். ஏசா 50:6மத் 26:67ஏசா 53:2-5சங் 22:17சங் 22:6-7மத் 27:14லூக் 22:64மத் 27:29-30 அப்படியே, அவர் அநேகம் தேசங்களின்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; தாங்கள் கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள். ரோம 15:20-21ஏசா 49:71 பேது 1:2எசேக் 36:25ஏசா 55:5சங் 72:9-11அப் 2:33எபே 3:5-9