எபேசியர் 6

Ephesians 6
அத்தியாயம் 6

பிள்ளைகளும், பெற்றோரும்

பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது. கொலோ 3:20-25நீதி 23:22நீதி 6:20கொலோ 3:16-17நீதி 1:8உபா 21:18லேவி 19:3ரோம 12:2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் ஆயுசுநாட்கள் அதிகரிப்பதற்கும், யாத் 20:12உபா 27:16மத் 15:4-6நீதி 20:20எசேக் 22:7மல்கி 1:6எரே 35:18மாற் 7:9-13 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது. உபா 5:16உபா 4:40உபா 12:28உபா 12:25உபா 22:7உபா 6:18உபா 6:3ஏசா 3:10 தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள். கொலோ 3:21நீதி 22:6நீதி 29:15நீதி 19:18உபா 6:72 தீமோ 3:15நீதி 29:17நீதி 23:13-14

வேலைக்காரர்களும், எஜமான்களும்

வேலைக்காரர்களே, நீங்கள் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் மரியாதையோடும் நேர்மையுள்ள மனதோடும் கீழ்ப்படிந்து; 1 பேது 2:18-21தீத் 2:9-10கொலோ 3:17-24சங் 86:11எபே 5:22மல்கி 1:61 தீமோ 6:1-3பிலி 2:12 மனிதர்களுக்குப் பிரியமாக இருக்கவிரும்புகிறவர்களாக அவர்களுடைய பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக, மனப்பூர்வமாக தேவனுடைய விருப்பத்தின்படி செய்யுங்கள். கொலோ 3:22-231 தெச 2:4கலா 1:10எபே 5:171 பேது 4:2பிலி 2:12மத் 12:50மத் 7:21 அடிமையானவன் என்றாலும், சுதந்திரமானவன் என்றாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை பெறுவான் என்று அறிந்து, கொலோ 3:231 கொரி 10:31எபே 6:5-62இராஜா 5:13ஆதி 31:38-402இராஜா 5:2-3ஆதி 31:6 மனிதருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்லமனதோடு ஊழியம் செய்யுங்கள். கொலோ 3:24லூக் 14:142 கொரி 5:10மத் 16:27மத் 6:4நீதி 11:18லூக் 6:35மத் 10:41-42 எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரர்களுக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லை என்றும் அறிந்து, கடுமையான வார்த்தைகளை விட்டுவிடுங்கள். அப் 10:34கொலோ 3:25ரோம 2:11யோபு 31:13-15உபா 10:17லூக் 6:31மத் 7:121 கொரி 1:2

கிறிஸ்துவின் படைவீரர்களும், ஆயுதங்களும்

கடைசியாக, என் சகோதரர்களே, கர்த்தரிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள். பிலி 4:13ஏசா 40:31யோசு 1:91 கொரி 16:131 பேது 5:10கொலோ 1:112 கொரி 12:9-10உபா 20:3-4 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். 2 கொரி 10:4ரோம 13:12எபே 6:131 தெச 5:81 பேது 5:82 கொரி 2:11எபே 4:14ரோம 13:14 ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. கொலோ 1:132 கொரி 4:4எபே 2:2கொலோ 2:15அப் 26:18எபே 1:21ரோம 8:381 கொரி 9:25-27 எனவே, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்தவர்களாக நிற்கவும் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். 2 கொரி 10:4லூக் 21:36எபே 6:11-17எபே 5:16வெளி 3:10கொலோ 4:12லூக் 8:13மல்கி 3:2 சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்; ஏசா 59:171 தெச 5:8ஏசா 11:5லூக் 12:352 கொரி 6:71 பேது 1:13எபே 5:9வெளி 9:17 சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்; ஏசா 52:7ரோம 10:152 கொரி 5:18-21ஆப 3:19லூக் 15:22உன்னத 7:1உபா 33:25 சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள். 1 பேது 5:8-91 யோவா 5:4-5நீதி 18:10சங் 56:3-4ஆதி 15:1சங் 56:10-112 கொரி 4:16-18எபி 11:24-34 இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எபி 4:12ஏசா 59:17வெளி 19:151 தெச 5:8ஏசா 49:2மத் 4:10-11வெளி 2:16ஓசி 6:5 எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். 1 தெச 5:17கொலோ 4:2பிலி 4:61 தீமோ 2:1யூதா 1:20ரோம 8:26-27மாற் 14:38லூக் 21:36 நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பிரதிநிதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதைத் தைரியமாகப் பேசவும், கொலோ 4:3அப் 4:292 தெச 3:11 தெச 5:25எபி 13:18அப் 4:311 தெச 2:22 கொரி 8:7 நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். 2 கொரி 5:20கொலோ 4:42 தீமோ 2:91 தெச 2:21 யோவா 3:16அப் 26:29பிலி 1:20பிலி 1:7

இறுதி வாழ்த்துரை

அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான். அப் 20:42 தீமோ 4:12தீத் 3:12கொலோ 4:7-91 கொரி 4:171 பேது 5:121 தீமோ 4:62 பேது 3:15 நீங்கள் எங்களுடைய செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்களுடைய இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன். கொலோ 4:7-8பிலி 2:251 தெச 3:22 தெச 2:17கொலோ 2:2பிலி 2:19 பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்துடன் அன்பும் உண்டாவதாக. கலா 6:161 பேது 5:14கலா 5:61 தீமோ 1:142 தெச 3:16சங் 122:6-91 கொரி 1:31 சாமு 25:6 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென். மத் 22:371 கொரி 16:22-23மத் 6:132 கொரி 13:142 கொரி 8:122 தீமோ 4:22தீத் 2:7தீத் 3:15