தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான், 1 சாமு 29:4சங் 16:1சங் 31:9சங் 59:1சங் 69:13-161 கொரி 15:541 சாமு 21:11-15சங் 143:12
நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; சங் 118:10-12சங் 57:3அப் 4:25-27தானி 5:18ஏசா 57:15மீகா 6:6சங் 3:1சங் 35:1
உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். சங் 34:41 சாமு 30:62 கொரி 7:5-6சங் 55:4-52 கொரி 1:8-101 சாமு 21:122 நாளாக 20:3சங் 11:1
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், எபி 13:6சங் 118:6ரோம 8:31-39சங் 27:1ஏசா 41:10லூக் 12:4-5சங் 56:10-11சங் 46:1-2
நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?
எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; மத் 22:15லூக் 11:54சங் 41:7ஏசா 29:20-212 பேது 3:161 சாமு 18:211 சாமு 18:17யோவா 2:19
எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது.
அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்; சங் 59:3சங் 71:10சங் 140:2அப் 23:12-14லூக் 20:20அப் 4:5-6தானி 6:4ஏசா 54:15
என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ? சங் 55:23பிரச 8:8ஆப 1:13ஏசா 28:15எரே 10:25எரே 18:19-23எரே 7:10சங் 36:12
தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்.
என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; 2இராஜா 20:5மல்கி 3:16சங் 39:12வெளி 7:17சங் 126:5-6மத் 10:30சங் 139:16சங் 121:8
என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்;
அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; ரோம 8:31சங் 118:6ஏசா 8:9-10சங் 102:2சங் 118:11-13சங் 46:11எரே 33:3சங் 46:7
தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; மத் 24:35ஆதி 32:11சங் 56:42 பேது 1:4எபி 6:18சங் 60:6
யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்; சங் 27:1ஏசா 51:12-13ஏசா 51:7-8சங் 112:7-8
மனிதன் எனக்கு என்ன செய்வான்?
தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; சங் 9:1-31 சாமு 1:24-28சங் 50:14பிரச 5:4-6எண் 30:2-16சங் 119:106சங் 76:111 சாமு 1:11
உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன்.
நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, சங் 116:8-9யோபு 33:30வெளி 21:23-24சங் 145:14சங் 49:151 தெச 1:10ஏசா 2:5சங் 17:5
நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?