தாவீதின் நகரத்திற்கு ஐயோ
தாவீது தங்கியிருந்த நகரமாகிய அரியேலே 1, அரியேலே, ஐயோ, வருடாவருடம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும், 2 சாமு 5:9ஆமோ 4:4-5மீகா 6:6-7எசேக் 43:15-16ஓசி 5:6ஓசி 8:13ஓசி 9:4ஏசா 66:3 அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும். ஏசா 5:25-30எசேக் 22:31எசேக் 39:17ஏசா 10:32ஏசா 10:5-6ஏசா 17:14ஏசா 24:1-12ஏசா 3:26 உன்னைச் சூழப் படைகளை நிறுத்தி, உன்னைத் கோபுரங்களால் முற்றுகையிட்டு, உனக்கு விரோதமாகக் கோட்டை மதில்களை எடுப்பிப்பேன். லூக் 19:43-44எசேக் 21:222இராஜா 18:172இராஜா 19:322இராஜா 24:11-122இராஜா 25:1-4மத் 22:7 அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாக மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் குறிசொல்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகுசென்று உரைக்கும். ஏசா 8:19சங் 44:25ஏசா 3:8ஏசா 2:11-21ஏசா 51:23புலம் 1:9 உன்மேல் வருகிற அந்நியரின் கூட்டம் பொடித்தூள் அளவாகவும், பலவந்தரின் கூட்டம் பறக்கும் பதர்களைப்போலவும் இருக்கும்; அது திடீரென்று உடனே சம்பவிக்கும். 1 தெச 5:3ஏசா 30:13ஏசா 37:36ஏசா 17:13-14ஏசா 31:3ஏசா 10:16-19ஏசா 25:5ஏசா 31:8 இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புயலினாலும், சுட்டெரிக்கிற அக்கினிஜூவாலையினாலும், சேனைகளின் யெகோவாவாலே விசாரிக்கப்படுவாய். மாற் 13:81 சாமு 2:10மத் 24:7வெளி 11:19வெளி 16:181 சாமு 12:17-182 சாமு 22:14ஏசா 28:2 அரியேலின்மேல் போர்செய்கிற திரளான சகல தேசங்களும், அதின்மேலும் அதின் அரண்மேலும் போர்செய்து, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும், இரவுநேரத் தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். யோபு 20:8மீகா 4:11-12சகரி 12:9ஏசா 17:14சங் 73:20வெளி 20:8-9சகரி 12:3-5சகரி 14:12-15 அது, பசியாயிருக்கிறவன் தான் சாப்பிடுவதாக கனவு கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாக கனவுகண்டும், விழிக்கும்போது அவன் சோர்வடைந்து தாகத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக போர்செய்கிற திரளான சகல தேசங்களும் இருக்கும். ஏசா 44:12சங் 73:20ஏசா 10:7-162 நாளாக 32:21 தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சைரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல. ஏசா 51:21-22ஏசா 19:14ஏசா 33:13-14ஏசா 49:26வெளி 17:6ஏசா 28:7-8அப் 13:40-41ஆப 1:5 யெகோவா உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரச்செய்து, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரர்களாகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடு போட்டார். ரோம 11:8ஏசா 44:182 தெச 2:9-12அப் 28:26-27ஏசா 30:10ஏசா 6:9-101 சாமு 9:92 கொரி 4:4 ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புத்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் முடியாது, இது முத்திரை போடப்பட்டிருக்கிறது என்பான். மத் 13:11தானி 12:4ஏசா 8:16தானி 12:9மத் 11:25மத் 16:17வெளி 5:1-9வெளி 6:1 அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புத்தகத்தைக் கொடுத்து; நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான். யோவா 7:15-16ஏசா 29:18ஓசி 4:6ஏசா 28:12-13எரே 5:4 இந்த மக்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனப்படுத்துகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாக விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனிதர்களாலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. எசேக் 33:31-33எரே 12:2மாற் 7:2-13மத் 15:2-9எரே 3:10ஏசா 58:2-3நீதி 30:6எரே 5:2 ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த மக்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்கிறார். ஆப 1:51 கொரி 1:19-24ஏசா 28:21எரே 49:7யோவா 9:39-41ஏசா 6:9-10யோவா 9:29-34யோபு 5:13 தங்கள் ஆலோசனையைக் யெகோவாவுக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் செயல்களை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைப் பார்க்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, எசேக் 8:12ஏசா 47:10ஏசா 30:1சங் 94:7-9எசேக் 9:9ஏசா 28:15எரே 23:24லூக் 12:1-3 ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக கருதப்படலாமோ? உண்டாக்கப்பட்ட பொருள் தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ? ரோம 9:19-21ஏசா 64:8ஏசா 45:9-11சங் 94:8-9எரே 18:1-10ஏசா 24:1அப் 17:6 இன்னும் கொஞ்ச காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக என்னப்படும். ஏசா 32:15மத் 19:30எபி 10:37எசேக் 20:46-47ஆப 2:3ஆகா 2:6ஓசி 1:9-10ஓசி 3:4 அக்காலத்திலே செவிடர்கள் புத்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடர்களின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்திற்கும் நீங்கலாகிப் பார்வையடையும். ஏசா 35:5மத் 11:5நீதி 20:12எபே 1:17-19ஏசா 32:3மாற் 7:37சங் 119:18அப் 26:18 சிறுமையானவர்கள் யெகோவாவுக்குள் மிகவும் மகிழ்ந்து, மனிதர்களில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள். யாக் 2:5ஏசா 61:1மத் 11:29மத் 11:5மத் 5:5சங் 25:9யாக் 1:9மத் 5:3 கொடியவன் அற்றுப்போவான், பரியாசக்காரன் இல்லாமற்போவான். மீகா 2:1ஏசா 28:14-22ஏசா 13:3ஏசா 29:5ஏசா 59:4லூக் 16:14தானி 7:19-25தானி 7:7 ஒரு வார்த்தைக்காக மனிதனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நியாயமில்லாமல் துரத்தி, இப்படி அக்கிரமம்செய்ய வகைதேடுகிற அனைவரும் அழிக்கப்படுவார்கள். ஆமோ 5:10-12யாக் 5:6அப் 3:14ஆமோ 7:10-17எசேக் 13:19ஏசா 32:7நியாயாதி 12:6எரே 18:18 ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட யெகோவா யாக்கோபின் வம்சத்தைக்குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை. ஏசா 45:17ஏசா 51:2எரே 30:101 பேது 1:18-19ஏசா 54:4யோவே 2:27லூக் 1:68எசேக் 37:24 அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள். எபே 2:10ஏசா 19:25ஏசா 45:11ஏசா 8:13ஏசா 49:20-26ஏசா 5:16ஏசா 60:21ஓசி 3:5 வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள். எபி 5:2ஏசா 28:7லூக் 15:17-191 தீமோ 1:13-15வெளி 20:2-31 கொரி 6:11அப் 2:37அப் 6:7