ஆபகூக் 1

Habakkuk 1
அத்தியாயம் 1

ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாகப் பெற்றுக்கொண்ட செய்தி. நாகூ 1:1ஏசா 22:1

தீர்க்கதரிசியின் கேள்வி

யெகோவாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேட்காமலிருக்கிறீரே! கொடுமையின் காரணமாக நான் எதுவரைக்கும் உம்மை நோக்கி உதவிக்காக் கூப்பிடுவேன், நீர் காப்பாற்றாமல் இருக்கிறீரே! சங் 22:1-2சங் 13:1-2புலம் 3:8எரே 14:9சங் 94:3வெளி 6:10சங் 74:9-10 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கச்செய்கிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு முன்னே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு. சங் 55:9-11பிரச 5:8எரே 20:8எரே 9:2-6மீகா 7:1-42 பேது 2:8பிரச 4:1எசேக் 2:6 ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை சூழ்ந்துகொள்ளுகிறான்; ஆகவே நியாயம் புரட்டப்படுகிறது. ஏசா 1:21-23யோபு 21:7சங் 119:126சங் 94:20-21எசேக் 9:9எரே 12:1ஏசா 5:20ஏசா 59:13-15

தேவனுடைய பதில்

நீங்கள் அந்நியமக்களை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு செயலை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன். அப் 13:40-41ஏசா 29:14புலம் 4:12எரே 5:12-13ஏசா 29:9எரே 18:18எரே 25:14-29எரே 9:25-26 இதோ, நான் கல்தேயரென்னும் 1 கொடியதும் வேகமுமான மக்களை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத குடியிருப்புக்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள். 2இராஜா 24:22 நாளாக 36:172 நாளாக 36:6எரே 5:15உபா 28:49-52ஏசா 23:13எரே 25:9எரே 4:6 அவர்கள் கொடியவர்களும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும். எரே 39:5-9உபா 5:19உபா 5:27ஏசா 18:7எரே 52:25-27எரே 52:9-11 அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளைவிட வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாக இருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர்கள் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள். எரே 4:13செப்ப 3:3உபா 28:49எசேக் 17:3ஓசி 8:1எரே 5:6எசேக் 17:12ஏசா 5:26-28 அவர்களெல்லோரும் கொடுமைசெய்ய வருவார்கள்; அவர்களுடைய முகங்கள் வற்றச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணல் அளவு மக்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள். எரே 25:9உபா 28:51-52எசேக் 17:10எசேக் 19:12ஆதி 41:49ஆப 1:6ஆப 2:5-13ஓசி 1:10 அவர்கள் ராஜாக்களைக் கொடுமை செய்வார்கள்; அதிபதிகள் அவர்களுக்குக் கேலிக்குரியவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மதில்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள். 2 நாளாக 36:62 நாளாக 36:10ஏசா 14:16எரே 32:242இராஜா 24:122இராஜா 25:6-7எரே 33:4எரே 52:4-7 அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான். தானி 5:20தானி 4:30-34தானி 5:3-4எரே 4:11-12

தீர்க்கதரிசியின் இரண்டாவது கேள்வி

யெகோவாவே, நீர் ஆரம்பகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; யெகோவாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர். உபா 32:4சங் 90:2உபா 33:27எரே 30:11எரே 46:28சங் 93:2ஆமோ 9:8-9எசேக் 30:25 தீமையைப் பார்க்காமலிருக்கிற சுத்தக்கண்ணனே, அநியாயத்தை பார்த்துக்கொண்டிருக்கமாட்டீரே; அப்படியிருக்க துரோகிகளை நீர் பார்த்துக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைக்காட்டிலும் நீதிமானாக இருக்கிறவனை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? சங் 5:4-5சங் 34:15-16எரே 12:1-2ஆப 1:3-4நீதி 31:8-91 பேது 1:15-162 சாமு 4:11சங் 10:15 மனிதர்களைச் சமுத்திரத்து மீன்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமமாக்குகிறதென்ன? நீதி 6:7 அவர்களெல்லோரையும் தூண்டிலைக்கொண்டு இழுத்துக்கொள்கிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் கூடையிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான். ஆமோ 4:2எரே 16:16யோவா 21:6-11சங் 10:9எசேக் 25:6எசேக் 26:2எசேக் 29:4-5எசேக் 35:15 ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் உணவு சுவையுள்ளதாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் கூடைக்குத் தூபங்காட்டுகிறான். தானி 4:30உபா 8:17எசேக் 28:3ஆப 1:11தானி 5:23எசேக் 29:3ஏசா 10:13-15ஏசா 37:24 இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் மக்களை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ? எசேக் 25:1-17ஆப 1:9-10ஆப 2:17ஆப 2:5-8ஏசா 14:16-17ஏசா 14:6ஏசா 19:8எரே 25:9-26