எகிப்தைக் குறித்த தீர்க்கதரிசனம்
எகிப்தைக் குறித்த செய்தி. இதோ, யெகோவா வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்திற்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் சிலைகள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்து போகும். யாத் 12:12வெளி 1:7எசேக் 30:13யோவே 3:19யோசு 2:11உபா 33:26எசேக் 29:1-21ஏசா 13:1 சகோதரனுடன் சகோதரனும், சிநேகிதனுடன் சிநேகிதனும், பட்டணத்துடன் பட்டணமும், தேசத்துடன் தேசமும் போர்செய்வதற்காக, எகிப்தியரை எகிப்தியருடன் போரிட வைப்பேன். நியாயாதி 7:221 சாமு 14:20மத் 10:36எசேக் 38:21மத் 10:21மத் 12:25வெளி 17:12-172 நாளாக 20:22-23 அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை அழிந்துபோகச்செய்வேன்; அப்பொழுது சிலைகளையும், மந்திரவாதிகளையும், இறந்தவர்களிடம் பேசுகிறவர்களையும், குறிசொல்கிறவர்களையும் தேடுவார்கள். ஏசா 8:19தானி 2:21 நாளாக 10:13ஏசா 44:25நீதி 21:301 சாமு 25:372 நாளாக 25:16-202 சாமு 15:31 நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்புவிப்பேன்; கொடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார். ஏசா 20:4எசேக் 29:19எரே 46:261 சாமு 23:7ஏசா 19:2சங் 31:8 அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோகும். எசேக் 30:12எரே 51:36சகரி 14:18சகரி 10:11 ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; பாதுகாப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோகும்; கோரையும் நாணலும் வாடும். ஏசா 37:25யாத் 7:18யோபு 8:112இராஜா 19:24யாத் 2:3ஏசா 15:6ஏசா 18:2 நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற இலையுள்ள செடிகளும், நதியருகில் விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோகும்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாமல்போகும். எசேக் 19:13ஏசா 23:3ஏசா 32:20எரே 14:4யோவே 1:17-18 மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற அனைவரும் துக்கப்படுவார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள். எசேக் 47:10ஆப 1:15எண் 11:5யாத் 7:21 மெல்லிய சணலைப் பக்குவப்படுத்துகிறவர்களும், மெல்லிய ஆடைகளை நெய்கிறவர்களும் வெட்கப்படுவார்கள். எசேக் 27:7நீதி 7:161 இராஜா 10:28 மீன் வளர்க்கிற குளங்களுக்கு கூலிக்கு அணை கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோகும். யாத் 8:5உபா 11:10யாத் 7:19 சோவான் பட்டணத்தின் பிரபுக்களாக இருப்பவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமானது: நான் ஞானிகளின் மகன், நான் முந்தின ராஜாக்களின் மகன் என்று பார்வோனிடம் எப்படிச் சொல்கிறீர்கள்? எண் 13:221 இராஜா 4:30அப் 7:22ஏசா 30:4சங் 78:43ஆதி 41:38-39சங் 78:121 கொரி 1:19-20 அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் யெகோவா எகிப்தைக்குறித்துச்செய்த யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும். 1 கொரி 1:20ஏசா 14:24ஏசா 40:13-14ஏசா 41:22-23ஏசா 44:7ஏசா 47:10-13ஏசா 5:21நியாயாதி 9:38 சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பு பட்டணத்தின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பச்செய்கிறார்கள். எசேக் 30:13எரே 2:16எரே 46:14எரே 46:19சகரி 10:4ஏசா 19:111 பேது 2:71 சாமு 14:38 யெகோவா அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரச்செய்தார்; குடிவெறியன் வாந்தியெடுத்து, தள்ளாடித் திரிகிறதுபோல, அவர்கள் எகிப்தை அதின் எல்லாச்செய்கையிலும் தள்ளாடித் திரியச்செய்கிறார்கள். 1 இராஜா 22:20-232 தெச 2:11எசேக் 14:7-9ஏசா 47:10-11எரே 25:27யோபு 12:25ஏசா 19:2ஏசா 28:7-8 எகிப்தில் தலையாகிலும், வாலாகிலும், கிளையாகிலும், நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது. ஏசா 9:14-151 தெச 4:11-12ஆப 3:17ஆகா 1:11நீதி 14:23சங் 128:2 அக்காலத்திலே எகிப்தியர்கள் பெண்களைப்போலிருந்து, சேனைகளின் யெகோவா தங்கள்மேல் அசைக்கும் கை அசைவினாலே பயந்து நடுங்குவார்கள். எரே 51:30நாகூ 3:13ஏசா 11:15எரே 30:5-7எரே 50:37ஏசா 10:32சகரி 2:9எபி 10:31 சேனைகளின் யெகோவா அவர்களுக்கு விரோதமாக தீர்மானித்துக்கொண்ட ஆலோசனையினால் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் அதிர்ச்சியடைவான். ஏசா 14:24தானி 4:35எசேக் 29:6-7ஏசா 14:26-27ஏசா 20:2-5ஏசா 36:1ஏசா 46:10-11எரே 25:19 அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் மொழியைப் பேசி, சேனைகளின் யெகோவாவை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று அழிக்கப்பட்ட பட்டணம் என்னப்படும். செப்ப 3:9ஏசா 19:21சகரி 2:11ஏசா 11:11எரே 12:16உபா 10:20ஏசா 19:19ஏசா 2:11 அக்காலத்திலே எகிப்து தேசத்தின் நடுவிலே யெகோவாவுக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே யெகோவாவுக்கு ஒரு தூணும் உண்டாயிருக்கும். ஆதி 28:18யோசு 22:10யாத் 24:4யோசு 22:26ஆதி 12:7ஏசா 66:23சகரி 6:15எபி 13:10 அது எகிப்துதேசத்திலே சேனைகளின் யெகோவாவுக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினால் அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார். சங் 50:15தீத் 2:13ஏசா 45:21-22லூக் 2:112இராஜா 13:4-5யாத் 2:23யாத் 3:7ஏசா 19:4 அப்பொழுது யெகோவா எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர்கள் யெகோவாவை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும், காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, யெகோவாவுக்குப் பொருத்தனைகளைச் செய்து அவைகளைச் செலுத்துவார்கள். ஏசா 11:9மல்கி 1:111 இராஜா 8:431 பேது 2:51 பேது 2:91 சாமு 17:46பிரச 5:4ஆப 2:14 யெகோவா எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார். எபி 12:11உபா 32:39ஓசி 14:1அப் 26:17-20ஆமோ 4:6-12ஓசி 5:15ஓசி 6:2ஏசா 19:1-15 அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர்கள் எகிப்திற்கும், எகிப்தியர்கள் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர்கள் அசீரியருடன் ஆராதனை செய்வார்கள். ஏசா 11:16எபே 2:18-22எபே 3:6-8ஏசா 27:13ஏசா 35:8-10ஏசா 40:3-5 அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும். ஆதி 12:2ஏசா 65:8ரோம 10:11-13உபா 32:43எசேக் 34:26கலா 3:14ஏசா 49:22ஏசா 49:6 அவர்களைக்குறித்துச் சேனைகளின் யெகோவா: எகிப்தியராகிய என் மக்களும், அசீரியராகிய என் கரத்தின் செயலும், இஸ்ரவேலராகிய என் சொத்தும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார். ஏசா 29:23ஓசி 2:23ரோம 9:24-25உபா 32:9சங் 115:15சங் 138:8ஏசா 60:21ஏசா 61:9