பாபிலோனின் வீழ்ச்சி
பாபிலோனின் கன்னிப்பெண்ணாகிய மகளே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் மகளே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ கர்வமுள்ளவள் என்றும் சுகசெல்வி என்றும் இனி அழைக்கப்படுவதில்லை. எரே 51:33சங் 137:8எரே 46:11எரே 50:42சகரி 2:7ஏசா 3:26ஏசா 14:13-14ஏசா 37:22 இயந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் நிர்வாணத்தொடையுமாக ஆறுகளைக் கடந்துபோ. யாத் 11:5ஏசா 20:4நியாயாதி 16:21மத் 24:41எசேக் 16:37-39ஆதி 24:65ஓசி 2:3ஏசா 32:11 உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் அவமானம் காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன். நாகூ 3:5எரே 51:20-24எரே 50:27-28வெளி 16:19உபா 32:35உபா 32:41-43எசேக் 16:37எபி 10:30-31 எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய யெகோவா என்பது. ஏசா 44:6ஏசா 41:14ஏசா 43:14ஏசா 49:26எரே 50:33-34ஏசா 43:3ஏசா 54:5எரே 31:11 கல்தேயரின் மகளே, நீ அந்தகாரத்திற்குள் பிரவேசித்து மவுனமாக உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை. ஆப 2:20ஏசா 47:7வெளி 18:16-191 சாமு 2:9தானி 2:37-38ஏசா 13:10ஏசா 13:19-20ஏசா 14:23 நான் என் மக்களின்மேல் கடுங்கோபமடைந்து, என் சொந்தமானதைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வைக்காமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி, 2 நாளாக 28:9சகரி 1:15உபா 28:50ஒபதி 1:10யாக் 2:13சங் 69:26ஏசா 10:6ஏசா 14:17 என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக் காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வைக்காமலும், அதின் முடிவை நினைக்காமலும்போனாய். உபா 32:29ஏசா 47:5எரே 5:31தானி 4:29தானி 5:18-23எசேக் 28:12-14எசேக் 28:2எசேக் 29:3 இப்பொழுதும் சுகசெல்வியே, கவலையில்லாமல் வாழ்கிறவளே: நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்ததி சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்கிறவளே, நான் சொல்கிறதைக் கேள். ஏசா 32:9செப்ப 2:15ஏசா 47:10ஏசா 45:6எரே 50:11வெளி 18:3-82 தெச 2:4தானி 11:36 சந்ததி சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரே நாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான மந்திரவித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாக உன்மேல் வரும். 1 தெச 5:3சங் 73:19ஏசா 47:12-13நாகூ 3:4வெளி 18:8-10தானி 2:2தானி 4:7தானி 5:7 உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத் தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய். ஏசா 5:21ரோம 1:22ஏசா 29:15சங் 52:7எசேக் 8:12ஏசா 59:41 கொரி 3:19எரே 23:24 ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று உனக்குத் தெரியாது; உனக்குத் துன்பம் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்கு உடனடியாக உண்டாகும் அழிவு உன்மேல் வரும். 1 தெச 5:3வெளி 18:9-10தானி 5:25-30யாத் 12:29-30எரே 51:39-42லூக் 12:59நெகே 4:11சங் 50:22 நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் மாயவித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ பயன்படுத்து; அவைகளால் உனக்குப் பயனோ, பலனோ உண்டாகுமா என்று பார்ப்போம். அப் 13:8-12ஏசா 47:9-10எரே 2:28நாகூ 3:4தானி 5:7-9யாத் 7:11யாத் 8:18-19யாத் 8:7 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் சோதிடர்களும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னைத் தப்புவித்துக் காப்பாற்றட்டும். ஏசா 44:25தானி 2:2-10எசேக் 24:12ஏசா 57:10எரே 51:58தானி 5:15-16தானி 5:30தானி 5:7-8 இதோ, அவர்கள் பதரைப்போல் இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் உயிரை நெருப்புத்தழலினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. மல்கி 4:1நாகூ 1:10எசேக் 15:7ஏசா 10:17ஏசா 41:2மத் 10:28ஏசா 30:14ஏசா 40:24 உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம்செய்தாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை காப்பாற்றுவார் இல்லை. எசேக் 27:12-25ஏசா 56:11எரே 51:6-9வெளி 18:11-19